Showing posts with label அறிவிப்புகள். Show all posts
Showing posts with label அறிவிப்புகள். Show all posts

Sunday, February 5, 2012

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - மாபோலையில்


சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்,

தவிர்க்க முடியாத காரணங்களினால் கடந்த 03 வாரங்களாக www.sltjfm.com ஊடாக நடாத்தப்பட்டு வந்த மின்னஞ்சல் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறவில்லை. கடந்த 03 வாரங்களில் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட கேள்விகளுக்கும் இந்த நிகழ்ச்சியிலையே பதிலளிகப்படும். இன்ஷா அல்லாஹ் அனைத்து சகோதரர்களும் நிகழ்ச்சியில் தவறாமல் இனைந்து கொள்ளுங்கள்

Tuesday, January 24, 2012

SLTJ மாபோளை கிளையின் இந்த வார மார்க்க நிகழ்ச்சிகளின் விபரம்


27-01-2012 வெள்ளி ஜும்மா உரை - சகோ.சஃப்வான்

28-01-2012 வாராந்திர மார்க்க நிகழ்ச்சி பெண்களுக்கானது

உரை :- ஃபர்லீன்
நேரம் :- பி. ப . 04.00
இடம் :- மஸ்ஜிதுல் முத்தகீன் அன்டென்னா வத்தை


28-01-2012 வாராந்திர மார்க்க நிகழ்ச்சி ஆண்களுக்கானது

உரை :- ஃபர்லீன்
நேரம் :- இஷா தொழுகையின் பின்
இடம் :- மஸ்ஜிதுல் முத்தகீன் அன்டென்னா வத்தை



மேலதிக தகவல் பெற அழையுங்கள் 
077 37 53 593

Thursday, January 5, 2012

மின்னஞ்சல் கேள்வி பதில் நிகழ்ச்சி

நேற்றைய தினம் (05-01-2012) வியாழன் மின்னஞ்சல் கேள்வி பதில் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக www.sltjfm.com ஊடாக ஒளிபரப்பானது அல்ஹம்துலில்லாஹ் 

நேயர்களின் மார்க்க   சந்தேகங்களை அழைப்பு ஆசிரியர் குழு  சகோ . ஹிஷாம் M.I. Sc   அவர்கள்  குர்   ஆன்  சுன்னா  அடிப்படையில்  தெளிவான  விளக்கம்  அளித்தார். 

நிகழ்ச்சியை ஆன்லைனில் அதிகமான சகோதரர்கள் கேட்டுப்பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு இன்ஷா அல்லாஹ் ஞாயிறு (08-01-2012) இரவு  07.30 PM மணிக்கு ஒளிபரப்பாகும்.   

Wednesday, November 2, 2011

குர்பானியின் சட்டங்கள் - நோட்டீஸ்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினரால் அச்சிடப்பட்டு  நாடு முழுவதும் வினியோகிக்கப்பட்ட நோட்டீஸின் அசல் வடிவம்


 

Tuesday, November 1, 2011

SLTJ FM இன் இன்றைய நேரடி நிகழ்சி(02/11/2011)



இன்று SLTJ தலைமையகத்தில் நடைபெரும் வாராந்திர மார்க்க நிகழ்ச்சியின் நேரடி ஒலிபரப்பை SLTJ FM(www.sltjfm.com) ஊடாக நேயர்கள் கேட்கலாம்

காலம்
புதன் கிழமை 
(02/11/2011)

நேரம்
இரவு 7.30 மணிக்கு

உரை
சகோ.ரஸ்மின் M.I. Sc 

தலைப்பு
கடாபியின் மணரம் உணர்த்துவது என்ன?


Saturday, October 29, 2011

O/L மாணவர்களுக்கான விஞ்ஞான பாட கருத்தரங்கு

SLTJ - Mabola  கிளை O/L மாணவர்களுக்கான மாபெறும் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. 

பாடம் 

விஞ்ஞானம்

காலம்

ஞாயிற்றுக்கிழமை
30/10/2011 

இடம் 

அல்- அஷ்ரப் முஸ்லிம் வித்தியாலயம் - மாபோலை

நேரம்

காலை 09.00 மணி தொடக்கம் மாலை 05.00 மணி வரை

அனைத்து மாணவர்களும் கலந்து பயன் பெற அழைக்கின்றது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் - மாபோலை கிளை

மேலதிக தகவல் பெற அழையுங்கள்
ஆசாத்    077 3 753 593

Friday, October 28, 2011

இலங்கையில் துல்ஹஜ் பிறை ஆரம்பம்


பிறை பார்க்கப்பட வேண்டிய நாளான ஒக்டோபர் 27ஆம் தேதி வியாழக் கிழமை மாலை மஹ்ரிபிற்கு பிறகு இலங்கையில்  எங்கும் பிறை தென்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை. எனவே மேகமூட்டமாக இருந்தால் அம்மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்ற நபி வழியின் அடிப்படையில் துல்கஅதா மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து, ஒக்டோபர் 28ஆம் தேதி வெள்ளிக் கிழமை அன்று மஹ்ரிபிலிருந்து துல்ஹஜ் மாதம் பிறை 1 ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக்கொள்கின்றோம்.

இதன் அடிப்படையில் எதிர் வரும் மாதம் நவம்பர் திங்கள் 07/11/2011 அன்று ஹஜ்ஜுப்பெருனாள் தினம் ஆகும்

மற்றும் எதிர் வரும் மாதம் நவம்பர் ஞாயிரு  06/11/2011 அன்று அறபா உடைய நாள் ஆகும் என்பதையும் தெறிவித்துக்கொள்கிறோம்.

Thursday, October 6, 2011

SLTJ சார்பாக கலாவெவயில் மாபெரும் இரத்தான முகாம்.

அனுராதபுர மாவட்டத்தின் மிகப் பெரிய முஸ்லீம் கிராமமாகிய கலாவெவயில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக வரலாற்றில் முதன் முதலாக எதிர்வரும் 26ம் தேதி மாபெரும் இரத்தான முகாம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கலாவெவ, நேகம, ஹோராப்பொல ஆகிய மூன்று கிளைகள் ஒன்றினைந்து செய்யும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரத்தம் வழங்கி மனித உயிர் காக்கும் உன்னத பணியில் பங்கெடுக்குமாறு அனைவரையும் அன்பாய் அழைக்கிறது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தேசிய தலைமையகம்.

Monday, October 3, 2011

தெருமுனைப் பிரச்சாரம் மாபோலையில்....

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாபோலை கிளை ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03/10/2011) அஷர் தொழுகையை தொடர்ந்து மக்கள் குடியிருப்பு தொகுதி வீதியில் அழைப்பு மாத இதழ் பிரதான ஆசிரியரான சகோதரர். பர்சான்(னளீமி) அவர்களால் “நாங்கள் சொல்வது என்ன” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. மக்கள் அவர் அவர் வீடுகளில் இருந்தவாரே உரையை செவிமடுத்தனர்.





Tuesday, September 20, 2011

SLTJ யின் இணைய வானொலி

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் இன் இனைய வானொலி பரிச்சாத்தமாக தற்காலிக தளத்தில் ஒலிபரப்பாகிறது.
இன்ஷா அல்லாஹ் 
இன்னும் சில தினங்களில் பிரத்தியேகமான இனையத்தளம் மூலம் உத்தியபூர்வமாக ஆரம்பிக்கப்படும். 
மேலதிக தகவளுக்கு 
றஜாய் 0777 450 926

Friday, September 9, 2011

மூன்று நாள் இஸ்லாமிய பயிற்சி நெறி

G.C.E (A/L) மாணவர்களுக்கான வதிவிட வசதியுடன் கூடிய 
மூன்று நாள் இஸ்லாமியப் பயிற்சி நெறி


Sunday, August 28, 2011

Friday, August 19, 2011

நோட்டீஸ் விநியோகம்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாபோளை கிளை சார்பாக இன்று(19/08/2011)  ஜூம்ஆ தொழுகையின் பின் " புது இரத்தம் பாய்ச்சிய புனித இரமலான்" எனும் தலைப்பின் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. நோட்டீசின் அசல் பிரதியை இணைய வாசகர்களுக்காக வெளியிடுகின்றோம். 

Sunday, March 13, 2011

" இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்"

இன்ஷா அல்லாஹ் 
எதிர் வரும் 19 / 03/2011 சனிக்கிழமை விடுமுறை தினத்தன்று பகிரங்க நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சியான " இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்"  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அனைத்து இஸ்லாமிய சகோதரர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெற  ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மாபோளை கிளை(SLTJ-Mabola) அழைக்கிறது


இடம் :-    மஸ்ஜிதுல் முத்தகீன் (அண்டெனா வத்த )

காலம் :- 
19 / 03/2011 சனிக்கிழமை  (விடுமுறை நாள் )

நேரம்:-   
இஷா தொழுகையை தொடர்ந்து

மேலதிக தகவல் பெற
077 37 53 593
 

Friday, February 18, 2011

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாபோளை கிளை சார்பாக நாளை நடைபெற இருக்கும் நிகழ்சிகள்

இன்ஷா அல்லாஹ்
நாளை சனிக்கிழமை (19/02/2011)
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாபோளை கிளை  சார்பாக நாளை நடைபெற இருக்கும் நிகழ்சிகள்

பெண்கள் பயான்

இடம் :- மஸ்ஜிதுல் முத்தகீன் அன்ட்டேன்னா வத்த ,மாபோளை
நேரம் :- அசர் தொழுகையை தொடர்ந்து

ஆண்கள் பயான்

இடம் :- மஸ்ஜிதுல் முத்தகீன் அன்ட்டேன்னா வத்த, மாபோளை
நேரம் :- இஷா  தொழுகையை தொடர்ந்து
உரை :- சகோ . பர்ஷான் (நலீமி )

Wednesday, February 16, 2011

"இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்" கேள்வி பதில் நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ் "இஸ்லாம் ஒரு எளிய  மார்க்கம்" கேள்வி பதில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் கலந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்

காலம் :- 17 - 02 - 2011 (இன்று)

இடம் :- மஸ்ஜிதுல் முத்தகீன் , அன்டேன்னா வத்த, மாபோளை

நேரம் :-
அஷர் தொழுகையை  தொடர்த்து

Saturday, February 5, 2011

உலாவும் கள்ளர்கள் ஜாக்கிரதை

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும்...

அன்பு சகோதர/சகோதரிகளுக்கு,

குர்'ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில், சகோதரர் P.J அவர்களின் சீரிய தலைமையில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் www.tntj.net மற்றும் www.onlinepj.com, இதை தவிர்த்து கள்ளபெயரில் பேஸ்புக் மற்றும் ட்வீட்டர் , இன்னும் blogger  வழியாக பதிவு செய்து ஜமாத்- க்கு சம்பந்தமில்லாத செய்திகளை பரப்பி வருகிறார்கள்,


"மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிரு;நது மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே. நிச்சயமாக! அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை" (என்றும் கூறினார்கள்). [28 ;77 ]

Friday, January 28, 2011

Friday, January 14, 2011

கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் உதவி கோருகிறது.



அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே !
இலங்கையின் பல பகுதிகளிலும் தொடராக மழை பெய்து வருவதால் இங்கு வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப் பெருக்கின் காரணமாக இலங்கையின் பல பாகங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளதுடன் அங்கிருக்கும் மக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக கிழக்கு மாகாணம் முழுவதும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள்.
அன்பின் சகோதரர்களே!
நாம் சிறப்பாக உண்ணுகிறோம்இசந்தோஷமாக இருக்கிறோம்இநன்றாக உடுக்கிறோம்,ஆரோக்கியமாக வாழ்கிறோம்.
ஆனால் நமது தொப்புல் கொடி உறவுகளான அந்த கிழக்கு வாழ் மக்கள் உண்ண உணவின்றி,தங்க இடமின்றி,உடுக்க ஆடையின்றி,குழந்தைகளுக்கு கொடுக்க பால் இன்றி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நோயாளிகள் மருத்துவ உதவியின்றி உயிரிழக்கிறார்கள்.
அந்த மக்களுக்கு நாம் கண்டிப்பாக உதவிக் கரம் நீட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
அன்பின் சகோதரர்களே! செல்வந்தர்களே! ஜமாத் நிர்வாகிகளே! வெளிநாடு வாழ் சகோதரர்களே!
இலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உங்களால் எந்த உதவியை செய்ய முடியுமோ அவற்றை செய்து உதவுமாறு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் உங்களிடம் அன்பாகக் கேட்டுக் கொள்கிறது.
ஆதமுடைய மகனே நீ (கொடு) செலவிடு! உனக்கு நான் செலவிடுகிறேன் (கொடுக்கிறேன்)  என்று அல்லாஹ் சொல்வதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரீ (5352)
வசதி படைத்தவர்களாகிய நாம் வசதி இல்லாதவர்களுக்கு எந்த வகையில் உதவினாலும் அதன் மூலம் நாம் முழுமையான பலனை அனுபவிப்போம்.
நல்ல வற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2 : 272)
நாம் வழங்கும் தர்மம் மறுமையில் அல்லாஹ்வால் பல மடங்கு உயர்த்தப்பட்டு மிகப் பெரிய கூலியாக வழங்கப்படும்.
தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன் அறிந்தவன். (அல்குர்ஆன் 2 : 261)
வெள்ளத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கான உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய முகவெரி மற்றம் கணக்கிலக்கம்

SRILANKA THAWHEED JAMATH,
HATTON NATIONAL BANK
MARADANA BRANCH
A/C NO : 108010104971
மேலதிக் விபரங்களுக்கு
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் தேசிய தலைவர் ஆர்.எம்.ரியால் 0777255467
தேசிய செயலாளர் அப்து ராசிக் 0771254254
பொருளாலர் சேக் கமர்தீன் 0777413849
சமூக சேவைப் பகுதிப் பொருப்பாளர் முயீனுத் தீன் 0777176321