Showing posts with label அல்-குர் ஆன். Show all posts
Showing posts with label அல்-குர் ஆன். Show all posts

Tuesday, November 22, 2011

குகையில் தங்கிய அந்த ஏட்டுக்குரியோர்! (மறைக்கபட்ட உண்மைகள் )

'முகம்மதே! அந்தக் குகை மற்றும் அந்த ஏட்டுக்குரியோர் நமது சான்றுகளில் ஆச்சரியமானோர்' என்று நீர் நினைக்கிறீரா?'

குர்ஆன் 18 : 9

இந்த வசனத்தில் குகையில் தங்கியவர்களைப் பற்றி குறிப்பிடும் போது குகைவாசிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும். அத்துடன் குகை மற்றும் ஏட்டுக்குரியவர்கள், சுவடிக்கு உரியவர்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

அப்படியானால் ஒரு சுவடி இவர்கள் வரலாற்றோடு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஏதோ ஓர் ஏட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காக மட்டும் இவ்வாறு நிச்சயமாகக் கூறப்பட்டிருக்காது. 'அந்த ஏடு ' என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அது ஒரு முக்கியமான ஏடாக இருக்க வேண்டும். அந்த ஏடு ஒரு காலத்தில் கண்டெடுக்கப் பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே 'அந்த ஏட்டுக்குரியவர்கள்' என்று அல்லாஹ் கூறியிருக்க வேண்டும் அந்த ஏடு யாருக்குமே கிடைக்காது என்றால் 'அந்த ஏடு' என்று முக்கியத்துவப் படுத்தி இறைவன் கூறியிருக்க முடியாது.

அது என்ன சுவடி? அது என்ன ஏடு? என்பதெல்லாம் பல வருடங்களாக உலகத்திற்குத் தெரியவில்லை. ஆனால் சமீப காலங்களில் அந்த ஏடுகளில் இருந்த செய்திகள் இப்போது அம்பலமாகியுள்ளன.

'சாவுக் கடல் சாசனச் சுருள்கள்' என்ற தலைப்பில் 1998 ஆம் ஆண்டு ஒரு மாதத்தில் பல தடவை பிபிசி யில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டது. அதில் சொல்லப் பட்ட செய்திகள் கேட்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியின் முதல் ஒளி பரப்பு 1993 ஆம் ஆண்டிலேயே காட்டப் பட்டதாகவும் சொல்லப் பட்டது. அதன் விபரங்கள்

1947 ஆம் ஆண்டு ஒரு நாள் ஆடு மேய்க்கும் ஓர் அரபுச் சிறுவன், காணாமல் போன தனது ஆட்டுக் குட்டி ஒன்றைத் தேடி சாவுக் கடலை ஒட்டிய ஜோர்டான் நாட்டு மலைப் பகுதிகளில் தேடி அலைந்தான். அந்த மலைப் பகுதி 'கும்ரான் மலைப் பகுதி' என்று அழைக்கப் படுகிறது. ஆட்டுக் குட்டியை தேடிய சிறுவன் அங்கிருந்த குகைக்குள் பார்த்த போது மண் பாண்டங்களில் சுருட்டி நிரப்பி வைக்கப் பட்ட தோல் ஆவணங்களைக் கண்டிருக்கின்றான். அவைகளில் சிலவற்றை எடுத்து வந்து செருப்புத் தொழிலாளியான தன் தந்தையிடம் கொடுக்க, மறுநாள் தந்தையும் மகனும் சேர்ந்து குகைக்குள் இருந்த அனைத்துச் சுருள்களையும் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

அந்தப் பழைய தோல்களைத் தமது செருப்புத் தொழிலுக்குப் பயன் படுத்த எண்ணிய அந்தச் சிறுவனின் தந்தை தோல்களில் ஹிப்ரு மொழியில் எழுதப் பட்டிருந்த வார்த்தைகளின் பொருள் புரியாமல், அதை அப்பொழுது ஜோர்டான் மன்னர் ஆட்சியிலிருந்த கிழக்கு ஜெருஸலத்தைச் சேர்ந்த ஒரு பழைய புத்தகக் கடைக்காரரிடம் காண்பித்திருக்கிறார்.

ஓரளவு ஹிப்ரு மொழியறிந்த அந்தக் கடைக்காரர் அந்தச் சுருள்கள் பழங்காலச் செய்திகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதி, ஒரு சில தீனார்களுக்கு அத்தனை சுருள்களையும் அந்த செருப்புத் தொழிலாளியிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டார்.

கிறித்தவரான அந்தப் புத்தகக் கடைக்காரர் அந்தச் சுருள்களை அந்நகரில் இருந்த கிறித்தவ ஆலயத்தில் ஒப்படைத்து விட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் சுருள்கள் கண்டெடுக்கப்பட்ட விஷயம் வெளிப் பட்டது. அதில் உள்ள செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு யூதர்களும் முஸ்லிம்களும் ஆர்வம் காட்டினர்.

அப்போது ஜோர்டானை ஆட்சி செய்த மன்னர் ஹூசைன், அந்தச் சாசன சுருள்கள் முஸ்லிம்,யூத,கிறித்தவர்கள்
அடங்கிய ஒரு குழுவிடம் பொதுவாக ஒப்படைக்கப் பட்டு அவை ஆராயப் பட வேண்டும் என்று விண்ணப்பித்தார்.

ஆனால் கிறித்தவப் பாதிரியார்கள் அது தனியார் சொத்து என்று வாதிட்டு அதைப் பொதுவில் வைக்க மறுத்து விட்டனர்.கிறித்தவர்களில் பல அறிஞர்களுக்கும் கூட அவற்றைப் படிப்பதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப் படவில்லை.

இடைப்பட்ட அய்ந்தாண்டு காலங்களில் ஜெருஸலத்தில் இருந்த பாதிரிமார்கள் சில குழுக்களை ஏற்படுத்தி கும்ரான் மலைப் பகுதிகளில் இருந்த பொதுங்குகளில் தேடியலைந்து அங்கிருந்த சாசனச் சுருள்கள் அனைத்தையும் தங்கள் கைவசம் கொண்டு வந்து விட்டனர்.

1952 - ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்துச் சுருள்களும் கிறித்தவப் பாதிரிமார்கள் கையில் போய்ச் சேர்ந்து விட்டன.பதினைந்தாயிரம்Manuscripts (கையெழுத்துப் பிரதிகள்) இவ்வகையில் இருப்பதாக தற்பொழுது கணக்கிட்டுள்ளனர்.

கடந்த அய்ம்பதாண்டுகளுக்கு மேல் அந்தச் சாசனச் சுருள்களில் அடங்கிய செய்திகளை, ஒரு குறிப்பிட்ட கிறித்தவப் பாதிரிகள் அடங்கிய குழு இருட்டடிப்பு செய்து வந்தது. பல கிறித்தவ அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் அதைப் படிப்பதற்கு ஆர்வம் கொண்டு கேட்ட போதெல்லாம், அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப் பட்டது.

சாசனச் சுருள்களைக் கைவசம் கொண்ட குழுவில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவருக்குப் பதில் அக்குழுவில் உள்ள மற்றவர்களால் வேறொரு பாதிரியார் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு மட்டுமே அதைப் படிப்பதற்கு உரிமை வழங்கப் பட்டு வந்தது.

இவ்விதமாகவே இவ்வளவு காலமும் அந்த சாசனச் சுருள்களின் செய்திகள் ரகசியமாக வைக்கப்பட்டு வந்தன.இந்த இரகசியக் காப்பில் போப்பாண்டவரின் வாட்டிகன் சபை முன்னணியில் இருந்தது.

தோலில் பதிந்த அந்தப் பழங்காலச் சாசனம் அழிந்து விடும் நிலையைக் கண்ட அதன் ரகசியக் காப்பாளர்கள் அச்சாசனங்களை Microfilm (நுண்ணிய படச்சுருள்) எடுத்தார்கள்.

அதன் ஒரு செட் போட்டோ காப்பிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருக்கும் ஒரு நூலகத்துக்கு பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப் பட்டது.

1990 ஆம் ஆண்டு அந்த நூலகத்துக்குத் தலைவராக அய்ஸ்மேன் என்ற அறிஞர் நியமிக்கப் பட்டார். அவர் முன்பே அந்த சாசனச் சுருள்களைப் படிப்பதற்குஆர்வம் காட்டி, அதற்கான வாய்ப்பு மறுக்கப் பட்டவர்.

இப்போது தனது அதிகாரத்தில் உள்ள நூலகத்தில் இருந்து சாசனச் சுருள்களின் நுண்ணியப் போட்டோக்களைப் பெரிய அளவில் போட்டோ எடுக்கச் செய்து அவற்றைப் படித்தார்.

அவற்றைப் படித்தபோது தமக்கு வியப்பு ஏற்பட்டதாக வாக்கு மூலம் அளிக்கின்றார். இத்தனைக் காலமும் கிறித்தவ சபை அந்த சாசனச் சுருள்களை மற்றவர்களுக்குக் காட்டாமல் இருந்ததன் உள் நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொண்டதாகக் கூறுகிறார்.

மைக்கேல் வைஸ் என்னும் சிகாகோ பல்கலைக் கழக ஹிப்ரு மொழிப் பேராசிரியர் ஒருவரின் உதவிக் கொண்டுஅந்த சாசனச் சுருள்களில் முக்கியமானது என்று அவர் கருதிய100 Manuscripts (கையெழுத்துப் பிரதி) களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.

அந்தப் புத்தக வெளியீடு கிறித்தவ உலகத்தை உலுக்கியது என்றும், குறிப்பாக கிறித்தவ மத ஆலயங்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயின என்றும் அந்த டாக்குமென்டரியின் செய்தியாளர் கூறுகிறார்.

மேற்கத்திய மக்களின் மத நம்பிக்கையைத் தகர்ப்பதாக அந்தப் புத்தக வெளியீடு இருந்தது என்றும் ஆகவே அந்த இரு அறிஞர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படுவார்கள் என்ற அச்சம் இருந்தது என்றும் அதன் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

அப்படி எது நடந்தாலும் அதைத் தாங்கள் எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் இதற்கு அஞ்சி ஒரு மிகப் பெரும் பேருண்மையை உலகத்திலிருந்து தாங்கள் மறைக்க விரும்பவில்லை என்றும் அவ்விரு அறிஞர்களும் வெளிப்படையாகக் கூறுவதையும் அந்தத் தொலைக் காட்சி டாக்குமெண்டரி பதிவு செய்து காட்டுகிறது.

கிறித்தவ மத ஆலயங்களில் இப்போது ஏசுவின் பெயரால் செய்யப் படும் மதச் சடங்குகளும் வழிபாடுகளும் ஆரம்ப கிறிஸ்தவர்களிடையே நடை பெறவில்லை என்பதையே சாசனச் சுருள்கள் நிரூபிக்கின்றன.

இந்தச் சடங்குகளுக்கும், ஏசுவின் பிரச்சாரத்திற்கும் கொள்கை கோட்பாடுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவை அனைத்தும் 'பவுல்' என்பவரால் பிற் காலத்தில் ஏற்படுத்தப் பட்டவை. மொத்தத்தில் இப்போது ஏசுவின் பெயரால் சொல்லப் படும் அனைத்து கிறித்தவக் கொள்கைகளும் பொய்யானவை. அவற்றை ஏசுவிற்கு அடுத்த தலை முறையில் வாழ்ந்த உண்மையாளர்களின் வாழ்வில் காண முடியவில்லை.

மேற்கண்டவாறு அறிஞர் அய்ஸ்மேன் கூறி வரும் போது, ஒரு யூதரிடம் அவற்றைப் பற்றி வாதம் செய்யும் போது, “It confirms Quran” அது குர்ஆனை உறுதிப் படுத்துகிறது என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார். அவ்விடத்தில் அந்த வாதம் நிறுத்தப் பட்டு மறு காட்சி காட்டப் படுகிறது.

இதே முறையில் மைக்கேல் வைஸ் என்ற அறிஞரும் பேசும் போது “It confirms Islam” அது இஸ்லாத்தை உறுதிப் படுத்துகின்றது என்று கூறுகின்றார். இங்கும் காட்சி மாற்றப் படுகின்றது.

ஆகவே இந்த சாசனச் சுருள்கள் எப்படி குர்ஆனையும் இஸ்லாத்தையும் உண்மைப் படுத்துகின்றன என்று அவர்கள் கூறுகின்றார்கள் என்பதைப் பார்வையாளர்கள் அறிய முடியவில்லை. அந்தச் செய்தியிலிருந்து நாம் ஆச்சரியமான ஓர் உண்மையைத் தெரிந்து கொள்கிறோம்.

ஏசு அவர்களுக்கு இறைவன் இஞ்சீல் எனும் வேதத்தை வழங்கியதாக திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. ஆனால் கிறித்தவ சமுதாயத்திடம் அந்த வேதம் நிச்சயமாக இல்லை எனலாம்.

ஏனெனில் பைபிளின் புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்குக் கடவுள் வழங்கியதன்று. மாறாக ஏசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதிய குறிப்புகள்தான் புதிய ஏற்பாடு.

பைபிளின் பல இடங்களில் ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தை ஏசு பிரசங்கித்தார் என்று கூறப்பட்டுள்ளது. எந்த இறை வேதத்தை கிறித்தவர்கள் மறைத்தார்களோ அதைத்தான் ஏசுவின் வழி வந்த நல்ல மனிதர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று குகையில் தங்கினார்கள் என்று முடிவு செய்யப் போதுமான காரணம் இருக்கிறது.

'குர்ஆனை ஒத்திருக்கிறது' என்பது தான் ஆந்தச் சுருள்களைப் படித்த கிறித்தவ அறிஞர்களின் கருத்தாகும்.

'இஞ்சீல்' எனும் வேதத்தைத் திருக்குர்ஆன் மெய்ப்பிப்பதாக திருக்குர்ஆனும் பல இடங்களில் குறிப்பிடுகின்றது. அந்த ஏடுகளை வாசித்த பாதிரியார்கள் திட்டமிட்டு மறைத்ததும் இந்தக் கருத்தை உறுதிப் படுத்துகின்றது.

மனிதர்களால் எழுதப்பட்ட ஏட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து இறைவன் கூறியிருக்க மாட்டான் என்பதும் இக்கருத்தை மேலும் உறுதிப் படுத்துகின்றது.

Wednesday, November 9, 2011

ஃபிர்அவ்னின் உடல்

பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி !



1898 ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மம்மி 3000 ஆண்டு பழமை மிக்க அன்றைய எகிப்தை ஆண்டு வந்த இரண்டாம் ரம்சீஸ் என்ற ஃபிர்அவ்னின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. தொல் பொருள் ஆராய்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளித்து வந்த ஃப்ரான்சு நாடு அந்த உடலை ஆராய்ச்சி செய்வதற்காக எகிப்திடம் கேட்டு வாங்கியது. மருத்துவ அறிவியல் துறை ஆய்வாளரான டாக்டர் மோரிஸ் புகை தலைமையிலான குழு அவ்வுடலை ஆய்வுக்கு உட்படுத்தியது. உடலில் படிந்திருந்த உப்பின் துணிக்கைகளை வைத்து இது கடலில் மூழ்கி இறந்தது என்ற முடிவுக்கு வந்தனர். ஆய்வின் முடிவில் அவ்வுடல் மூவாயிரம் ஆண்டு பழமையான எகிப்தை ஆண்ட மன்னனின் உடல் என்று கண்டறியப்பட்டது! அந்நேரம் பாதுகாக்கப்படுவதாக இறைவன் வாக்களித்திருக்கும் ஃபிர்அவ்னின் உடல் பற்றிய பேச்சு சிந்தனையாளர்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது. இது பற்றிய செய்தி மோரிஸ் புகையின் கவனத்துக்கும் வந்தது. 1898 ல் கண்டெடுக்கப்பட்ட மம்மியைக் குறித்து 1400 வருடங்களுக்கு முன்பே கூறப்பட்டதா? இது எப்படி சாத்தியமாகும்? என்று சிந்தனை செய்தார் மோரிஸ் புகை.

சிந்தனையில் மோரிஸ் புகை!

திருக்குர்ஆன் கடலில் மூழ்கி இறந்த பின்னர் ஃபிர்அவ்னின் உடல் பாதுகாக்கப்படும் என்று பிரகடனம் செய்கிறது. தோரா மற்றும் பைபிளின் பழய ஏற்பாடும் மோசேயின் காலத்தில் இஸ்ரவேலர்களைக் கொடுமைப் படுத்திய பர்வோன் மன்னனைப் பற்றியும் இறுதியில் அவன் கடலில் மூழ்கி இறந்தான் என்றும் கூறுகிறது. இதோ என் முன்னாலிருப்பது அக்காலத்தில் இறந்து விட்ட உடல் அல்லவா? என் ஆராய்ச்சியின் மூலம் நான் அறிந்திருக்கும் முடிவை 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது (ஸல்) எவ்வாறு அறிந்து கொண்டார்கள்? பைபிளில் தேடினார் மோரிஸ் புகை. பர்வோன் மன்னனின் முடிவைப் பற்றி யாத்திராகமம் இவ்வாறு கூறுகிறது.
ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. (யாத்திராகமம் 14 :28)

இவ்வுடல் பாதுகாக்கப்படும் என்பதற்கான எந்தக் குறிப்பையும் பைபிள் வழங்கவில்லை.

ஆய்வுக்குப் பின்னர் பர்வோன் மன்னனின் உடல் விலை உயர்ந்த கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டு தனி மரியாதையுடன் எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மோரிஸ் புகை சிந்தனையில் ஆழந்தார்! இவ்வுடல் பாதுகாக்கப்படும் என்ற குர்ஆனின் செய்தி அவரை சிந்திக்கத் தூண்டியது. இதே வேளையில் தான் சவூதி அரேபியாவில் மருத்துவ அறிவியல் சம்மந்தமான ஒரு மாநாடு நடை பெற்றது. மோரிஸ் புகை அதில் கலந்து கொண்ட போது தான் கண்டு பிடித்த உண்மையையும் தண்ணீரில் மூழ்கி இறந்த பின்னர் பாதுகாக்கப்பட்ட உடலைக் குறித்தும் இஸ்லாமிய அறிஞர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அங்கிருந்த அறிஞர்களில் ஒருவர் திருக்குர்ஆனைத் திறந்து கடலைக் கடந்து செல்லும் இஸ்ரவேலர்களைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற ஃபிர்அவ்ன் மன்னன் மூழ்கடிக்கப்பட்டதையும் அவனது உடல் பின்வரும் தலைமுறைக்கு ஓர் அத்தாட்சி என்ற நிலையில் பாதுகாக்கப்படும் என்ற இறைவனின் பிரகடனத்தை வாசித்துக் காட்டினார். அவ்வசனம்
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்"

(அல்-குர்ஆன் 10: 92)


இவ்வசனம் மோரிஸ் புகை அவர்களிடம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அங்கு கூடியிருந்தவார்களுக்கு முன்னால் அவர் அறிக்கையிட்டார்! அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹ்! வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்!

கெய்ரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட மம்மிகளில் ஃபிர்அவ்னின் உடல் மட்டும் வித்தியாசமானதாக உள்ளது. மற்றவை ரசாயன திரவங்களைக் கொண்டும் துணிகளில் பொதிந்தும் வைக்கப்பட்டிருக்கும் போது ஃபிர்அவ்னின் உடல் மட்டும் அப்படியே பாதுகாக்கப்படுகிறது! திருக்குர்ஆனின் அறைகூவலை உண்மைப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த சாட்சியைக் கண்கூடாகக் கண்ட பின்னரும் மக்களில் பெரும்பாலோர் இன்னும் உறங்கிக் கொண்டுதான் உள்ளனர். திருக்குர்ஆனின் கூற்று எவ்வளவு உண்மை!

”நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்" (அல்-குர்ஆன் 10:92

Saturday, June 4, 2011

அல்-குர்ஆனின் மொழி பெயர்ப்பை சதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாதா?

குர்ஆன் தன்னுடைய வார்த்தை என்றும், மனித குல சமுதாயம் அனைத்துக்கும் வழிகாட்டுவதற்காக அருளினேன் என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும் குர்ஆன் புரிந்து கொள்வதற்கு எளிதானது என்றும் குர்ஆன் சொல்ல வந்த கருத்துக்களை நேரடியாகவும்,வெளிப்படையாகவும், சொல்கிறது என்றும் கூறுகிறான்.
மேலும் குர்ஆனில் திரித்துக் கூறப்பட்ட விஷயங்கள் எதுவும் இல்லை. மனிதகுல சமுதாயம் அனைத்துக்கும் மிகச்சரியான நேர்வழி காட்டியாக உள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான்.
ஆனால் மனிதர்களில் சிலர், குர்ஆனின் போதனைகள், வழிகாட்டுதல்கள் யாவும் சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்கின்றனர்.
அல்லாஹ் உண்மையை மட்டுமே பேசக் கூடியவன், மனிதனின் நினைப்புகள் எல்லாம் தவறானவைகள். அல்லாஹ்வின் வார்த்தை, மனிதனின் வார்த்தை இரண்டில் நாம் எதையாவது தேர்வு செய்ய நாடினால், அல்லாஹ்வின் வார்த்தையை மட்டும் தான் நாம் தேர்வு செய்ய வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:-
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; (அல்-குர்ஆன் 2:185)
அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம். (அல்-குர்ஆன் 44:58)
ஹா, மீம். விளக்கமான இவ்வேதத்தின் மீது சத்தியமாக. நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம். (அல்-குர்ஆன் 43:1-3)
(நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டு விடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் (எனும் உண்மையை)குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை; (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது; இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்; இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. (அல்-குர்ஆன் 6:70)
நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (அல்-குர்ஆன் 15:9)
அலிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும். நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்.  (அல்-குர்ஆன் 12:1-2)
இன்னும், ஒவ்வொரு சமூகத்திலும் அ(ந்த சமூகத்த)வர்களிலிருந்தே அவர்களுக்கு எதிர்சாட்சியை அவர்களுக்கு எதிராக, எழுப்பி அந்நாளில், உம்மை இவர்களுக்கு (உம்மை நிராகரிக்க முற்படும் இம்மக்களுக்கு) எதிராகச் சாட்சியாக நாம் கொண்டு வருவோம்; மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம். (அல்-குர்ஆன் 16:89)
(நபியே!) நாம் இ(வ் வேதத்)தை உம்முடைய மொழியில் (அருளி) எளிதாக்கியதெல்லாம், இதைக் கொண்டு நீர் – பயபக்தியுடையவர்களுக்கு நன்மாராயங் கூறவும், முரண்டாக வாதம் செய்யும் மக்களுக்கு இதைக் கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்குமேயாகும். (அல்-குர்ஆன் 19:97)
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது. அரபுமொழியில் அமைந்தஇக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது. நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது); ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர்; அவர்கள் செவியேற்பதும் இல்லை. (அல்-குர்ஆன் 41:2-4)
தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும்.
அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு – நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்). (அல்-குர்ஆன் 18:1-2)
(நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள். (அல்-குர்ஆன் 2:99)
குர்ஆனில் போதனைகள், மற்றும் வழிகாட்டுதல்கள் யாவும் சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாது என்று புனித குர்ஆனில் ஒரு வசனத்தில் கூட அல்லாஹ் சொல்லவில்லை, இதற்கு மாறாக,குர்ஆனை புரிந்து கொள்வதற்கு, சாதாரண அறிவு போதும் என்று அல்லாஹ் குர்ஆனில் அவ்வப்போது கூறுகிறான்.
குர்ஆனில் போதனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை புரிந்து கொள்வதற்கு, மனிதர்கள் யாரும் விஞ்ஞானிகளாக மாற தேவையில்லை குர்ஆனின் போதனைகள் யாவும், சாதாரண அறிவு படைத்த மனிதர்களால் புரிந்து கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது. ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் புனித குர்ஆனை திறந்து அதை புரிந்து கொள்ளும் படியாக படிக்க வேண்டும்.
சில கொள்கையற்ற தலைவர்களும், தங்களுக்கு தாங்களே மகான்களாக ஆக்கிக்கொண்டவர்களும், மக்களை, புனித குர்ஆனின் போதனைகளை புரிந்து கொள்வதில் இருந்து தடுக்கிறார்கள். அவர்கள் இஸ்லாமிய உடை அணிந்து குர்ஆனை விட்டும் வழி கெடுக்கின்றனர். குர்ஆன் புரிந்து கொள்ள முடியாது என்றும், சாதாரண மக்களுக்கு புரிவது இல்லை என்றும் நீங்கள் புரிந்து கொள்ள நாடினால் அது உங்களை வழிகெடுத்து விடும் என்று திரும்பத் திரும்ப மக்களை எச்சரிக்கின்றார்கள்.மேலும் குர்ஆனின் ஒவ்வெரு வசனங்களும் பல அர்த்தங்களை கொண்டுள்ளது என்றும் ஒரு சில சாமானியர்களால் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும் என்றும், ஆகையால் குர்ஆனை புரிந்து கொள்ள வேண்டும் எனில் இவர்களையே பின்பற்ற வேண்டும் என்றும் கூறுகின்றார்கள். அவர்கள் குர்ஆனின் தெளிவான கட்டளைகளை மறைத்து, அதன் மூலம் உங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதுடன், நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை சுருட்டிக்கொண்டு உங்களை குர்ஆனின் பக்கம் வழிகாட்டுவதற்கு பதிலாக தங்களின் பக்கம் வணங்குவதற்கு கொண்டு வருகிறார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: -
எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்¢ அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. (அல்-குர்ஆன் 2:174)
நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான் மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள். (அல்-குர்ஆன் 2:159)
யா அல்லாஹ்! முஸ்லிமான எங்களுக்கு குர்ஆனை பொருளுணர்ந்து ஓதி அதன் தெளிவான தகவல்களை புரிந்து கொள்வதற்கு உதவி செய்வாயாக!

Thursday, February 24, 2011

நரகில் கொடுக்கப்படும் பல வகையான தண்டணைகளில் சில


விலங்கிடப்படுதல்:

விலங்கிடப்பட்டு அவர்கள் அதில் நெருக்கடியான இடத்தில் போடப்பட்டதும் அவர்கள் அங்கே அழிவை அழைப்பார்கள். 'ஓர் அழிவை அழைக்காதீர்கள்! அதிகமான அழிவுகளை அழையுங்கள்!' (என்று கூறப்படும்.)

திருக்குர்ஆன் 25:13,14

அப்போது அவர்களின் கழுத்துக்களில் விலங்குகளும், சங்கிலிகளும் இருக்கும். அவர்கள் கொதிக்கும் நீரில் வீசப்படுவார்கள். பின்னர் நெருப்பில் எரிக்கப்படுவார்கள்.

திருக்குர்ஆன் 40:71,72

நெருப்பால் ஆன ஆடை:

(ஏக இறைவனை) மறுத்தோருக்காக நெருப்பால் ஆன ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தலை கள் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும். அதைக் கொண்டு அவர்களின் வயிறுகளில் உள்ளவைகளும், தோல்களும் உருக்கப்படும்.

திருக்குர்ஆன் 22:19,20

கொதி நீர் தலையில் ஊற்றப்படுதல்:

'அவனைப் பிடியுங்கள்! அவனை நரகத்தின் மையத்திற்கு கொண்டு வாருங்கள்!' பின்னர் அவன் தலை மீது வதைக்கும் கொதி நீரை ஊற்றுங்கள்!(என வானவர்களிடம் கூறப்படும்.)

திருக்குர்ஆன் 44:47,48


(ஏக இறைவனை) மறுத்தோருக்காக நெருப்பால் ஆன ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தலை கள் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும். அதைக் கொண்டு அவர்களின் வயிறுகளில் உள்ளவைகளும், தோல்களும் உருக்கப்படும்.

திருக்குர்ஆன் 22:19,20

வெப்பம்:

அவர்கள் அனல் காற்றிலும், கொதி நீரிலும், அடர்ந்த புகை நிழலிலும் இருப்பார்கள். அதில் குளிர்ச்சியும் இல்லை. இனிமையும் இல்லை.

திருக்குர்ஆன் 56:42-44

அல்லாஹ்வின் தூதர் (தபூக் போருக்குச்) சென்ற பிறகு, போருக்குச் செல்லாது தம் இருப்பிடத்தில் தங்கி விட்டோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை அவர்கள் வெறுக்கின்றனர். 'கோடையில் புறப்படாதீர்கள்!' எனவும் அவர்கள் கூறுகின்றனர். நரகத்தின் நெருப்பு இதை விட வெப்பமானது' என்று கூறுவீராக! இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?

திருக்குர்ஆன் 9:81

அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள். கொதி நீரையும், சீழையும் தவிர.

திருக்குர்ஆன் 78:24,25

குளிர்ச்சி கிடையாது:

வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் யுகம் யுகமாகத் தங்குவார்கள். அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 78:21-24

சூடு போடப்படும்:

அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். 'இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!' (என்று கூறப்படும்)

திருக்குர்ஆன் 9:35

உள்ளத்தை தாக்கும் நெருப்பு:

ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு அது உள்ளங்களைச் சென்றடையும். நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.

திருக்குர்ஆன் 104:5-9

புரட்டிப் போடப்படுவார்கள்:

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் 'நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப் பட்டிருக்கக் கூடாதா?' எனக் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 33:66

மேலும் கீழும் வேதனை:

அவர்களின் மேற்புறத்திலிருந்தும், கால்களுக்குக் கீழே இருந்தும் அவர்களை வேதனை மூடிக் கொள்ளும் நாளில் 'நீங்கள் செய்து கொண்டிருந்ததைச் சுவையுங்கள்!' என்று (இறைவன்) கூறுவான்.

திருக்குர்ஆன் 29:55

கருகும் தோல்கள்:

நமது வசனங்களை மறுப்போரை நரகில் நுழையச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறுதோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:56

அவர்களது முகங்களை நெருப்பு பொசுக்கும்.அதில் அவர்கள் விகாரமாக இருப்பார்கள்.

திருக்குர்ஆன் 23:104

சம்மட்டி அடி:

அவர்களுக்காக இரும்புச் சம்மட்டிகளும் உள்ளன.

திருக்குர்ஆன் 22:21

கூச்சலும் அலறலும்:

கெட்டவர்கள் நரகில் இருப்பார்கள். அங்கே அவர்களுக்குக் கழுதையின் கத்தலும், அலறலும் இருக்கும்.

திருக்குர்ஆன் 11:106

வேதனை குறையாது:

அவர்களை விட்டும் (தண்டணை) குறைக்கப்படாது. அதில் அவர்கள் நம்பிக்கையிழந்திருப்பார்கள்.

திருக்குர்ஆன் 43:75

குறைந்த பட்ச தண்டணை:

"ஒருவருக்கு நெருப்பாலான இரு காலணிகள் அணிவிக்கப்பட்டு, அந்தக் காலணிகளின் வெப்பத்தால் அவரது மூளை (தகித்துக்) கொதிக்கும். அவர்தாம் நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிப்பவராவார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி)

நூல் : முஸ்லிம் 311

Sunday, January 2, 2011

அல்-குர்ஆனால் கவரப்பட்ட டாக்டர் காரி மில்லர்

அல்-குர்ஆனால் கவரப்பட்ட டாக்டர் காரி மில்லர்

      அது 1977 ஆம் ஆண்டு. டாக்டர் காரி மிலர் கனடாவைச் சேர்ந்த சுறுசுறுப்பான கிறிஸ்தவப் போதகர். டொரன்டோ பல்கலைக் கழகத்தின் கணிதத்துறை, (லொஜிக்) அளவையியல் துறைப் பேராசிரியர். இவர் புனித அல்குர்ஆனில் காணப்படும் வரலாறு மற்றும் அறிவியல் சார்ந்த பிழைகளைக் கண்டு பிடிப்பதன் மூலம் கிறிஸ்தவத்துக்கு மாபெரும் தொண்டாற்ற முற்பட்டார். தான் மேற்கொள்ளப் போகும் தொண்டானது தனக்கும், தன்னைப் போன்ற கிறிஸ்தவப் போதகர்களுக்கும் முஸ்லிம்களை கிறிஸ்தவத்தின் பால் அழைப்பதற்குப் பெரிதும் துணைபுரியும் என்றும் கருதினார்.  
        
எனினும், அல்குர்ஆனில் காணப்படும் பிழைகளை ஆய்வு செய்து, அவற்றைப் பகிரங்கப்படுத்தி இழிவுபடுத்தும் நோக்கில் அதனை ஆய்வுசெய்ய ஆரம்பித்த அவரை, அல்குர்ஆனின் நடுநிலையான போக்கு முற்றிலும் திசைதிருப்பி விட்டது! ஞானம்மிக்க வேதமாகிய அல்குர்ஆனை விளம்பரப்படுத்துவதற்கு முஸ்லிம்களில் பெரும்பாலானோரால் எழுதி முடியாதளவுக்கு அவரது ஆய்வும் தெளிவுரையும் சிறந்து விளங்கியது. நிச்சயமாக அவர் அல்குர்ஆனை மிக அழகிய முறையில் ஆராய்ந்து விட்டார் என்றே கூறவேண்டும்.          

ஆம், அல்-குர்ஆனின் அற்புதத் தன்மையால் கவரப்பட்ட மில்லர் (The Amazing Quran) வியப்பூட்டும் குர்ஆன் என்ற பெயரில் ஒரு நூலையே எழுதிவிட்டார். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவரை முதன்முதலில் திடுக்கிடச் செய்த விடயம் குர்ஆனின் சவால்விடும் போக்கேயாகும். இவ்வாறு சவால்விடும் வசனங்கள் அல்குர்ஆனின் பல இடங்களில் காணப்படுகின்றன. உதாரணமாக, அல்குர்ஆனைப் போன்ற ஒரு சூறாவையோ, பத்து வசனங்களையோ அன்றி ஒரு வசனத்தையேனும் கொண்டு வரும்படி குர்ஆன் சவால்விட்டது. 

         எனவே, இச்சவாலை வெற்றிகொள்வதற்குத் தன்னால் முடியும் என்ற சவாலுடன் ஆரம்பித்த அவர், ஈற்றில் அதில் காணப்பட்ட வியக்கவைக்கும் அறிவியல் உண்மைகளால் கவரப்பட்டு தனது சவாலுக்குத் தானாகவே முற்றுப்புள்ளி இட்டுக்கொண்டார். வியப்பூட்டும் அல்குர்ஆன் என்ற அவரது நூலிலிருந்து அவரது ஆய்வின் பிரதிபலன்கள் சிலவற்றை இங்கே குறிப்பிடுகின்றேன். 

1. டாக்டர் மிலர் (பின்வருமாறு) கூறுகின்றார்: ஒரு நூலை எழுதிவிட்டு, “இந்நூலில் எந்தத் தவறும் இல்லை” என்று கூறும் தைரியம் உலகில் எந்தவொரு எழுத்தாளனுக்கும் இல்லை. எனினும், அல்குர்ஆன் இதற்கு முற்றிலும் நேர்மாறாக, உன்னை நோக்கி, இதில் தவறுகள், பிழைகள் எதுவுமே இல்லை என்று அறுதியிட்டுக் கூறுகின்றது மட்டுமன்றி அதில் எந்தத் தவறுமில்லை. அவ்வாறே இனிமேலும் அதில் எந்தத் தவறும் இருக்காது என்றும் சவால் விடுகின்றது. 

2. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது தனிப்பட்ட உலக வாழ்வுடன் தொடர்பான விடயங்கள் அதில் காணப்படுவதில்லை. உதாரணமாக அவரது மனைவி கதீஜா (ரழி) அவர்களின் மரணம், அவரது ஆண்-பெண் பிள்ளைகளது மரணம் போன்ற எதனையும் அல்குர்ஆன் குறிப்பிடவில்லை. மாறாக, அதிசயம் என்னவெனில், தஃவா எனும் புனித அழைப்புப் பணியில் ஈடுபட்டபோது நபியவர்களுக்கு நிகழ்ந்த சில துயர்மிகு சம்பவங்களையே அது கோடிட்டுக் காட்டியது. இத்துயர்மிகு நிகழ்வுகள் அனைத்தும் வெற்றியையே பறைசாற்றிக் கொண்டிருந்தன. மேலும், நபியவர்களுக்கு ஏற்பட்ட வெற்றிகளைக் கோடிட்டுக் காட்டிய வசனங்கள், வெற்றியைக் கண்டு ஏமாற்றமடைந்து விடாது இருக்குமாறும், தியாகத்தையும் உழைப்பையும் மென்மேலும் அதிகரிக்கும் படியும் அழைக்கின்ற அமைப்பிலேயே காணப்பட்டன. எந்தவொரு மனிதனும் தனது வரலாற்றை எழுதும்போது  வெற்றிகளை மிகைப்படுத்திக் கூறிவிட்டு, தோல்விகளுக்கு நியாயம் கற்பிக்கவே முனைவர். எனினும் அல்குர்ஆனோ முற்றிலும் நேர்முரணாகக் காணப்பட்டது. அல்லாஹ்வுக்கும், ஏனையோருக்கும் இடையிலுள்ள தொடர்புகளுக்கான பொதுவிதிகளை முன்வைக்கின்ற அளவுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்துக்காக மட்டும் அது வரலாறு படைக்கவில்லை

3.. قُلْ إِنَّمَا أَعِظُكُم بِوَاحِدَةٍ أَن تَقُومُوا لِلَّهِ مَثْنَى وَفُرَادَى ثُمَّ تَتَفَكَّرُوا مَا بِصَاحِبِكُم مِّن جِنَّةٍ إِنْ هُوَ إِلَّا نَذِيرٌ لَّكُم بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيدٍ 

“நான் உங்களுக்கு உபதேசிப்பது ஒரேஒரு விஷயத்தைப் பற்றித்தான்;  நீங்கள் இரண்டிரண்டு பேர்களாகவோ, தனித்தனியாகவோ அல்லாஹ்வுக்காக எழுந்தமர்ந்து பின்னர் சிந்தித்துப்பாருங்கள்’ என்று (நபியே!) நீர் கூறும். உங்கள் நண்பருக்கு பைத்தியம் எதுவுமில்லை உங்களுக்குக் கடினமான வேதனை வருவதற்கு முன்னர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரல்லாமல், அவர் வேறில்லை” (அஸ்ஸபஉ: 46). 

மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனத்தை உற்றுநோக்கிய மில்லர் ஒரு கனம் மலைத்துப் போய்விட்டாராம். ‘சமூகவியல் ஆய்வுச் செயற்திட்டம்’ என்ற தொனிப்பொருளில், ஒரு ஆய்வாளர் நிகழ்த்திய (பரிசோதனையை) ஆய்வை மிலர் சுட்டிக்காட்டுகின்றார். இவ்வாய்வை நிகழ்த்துவதற்காக பல்வேறுபட்ட ஆய்வாளர்களை ஒன்றுசேர்த்து அவர்கள் அனைவரும் முன்வைத்த பிரதிபலன்களை ஒப்பிட்டு நோக்கினார். உரையாடுவோரின் எண்ணிக்கை இருவராக இருக்கும்போதே ஆய்வுக்கான செயற் திட்டம் வெற்றியடையும் என்ற விடயம் தெளிவாகியது. இவ்வெண்ணிக்கையானது இரண்டை விட அதிகரித்தால், செயற்றிட்டத்தின் வலு குறைந்து விடும் என்ற விடயமும் தெளிவாகியது. இவ்வாறான மிக நுனுக்கமான விடயங்களை அல்குர்ஆன் மிகத் துல்லியமாக மேற்குறித்த வசனத்திலே சுட்டிக் காட்டியிருப்பது கண்டு மிலர் மிகவும் வியப்படைந்தார். 

4. அல்குர்ஆனில் மர்யம் என்ற பெயரில் ஒரு பூரண அத்தியாயமே காணப்படுகின்றது. தாம் புனித வேதநூலாகக் கருதும் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றுக்கும் நிகரில்லாத அளவுக்கு, மர்யம் (அலை) அவர்களின் புகழையும், சிறப்பையும் இவ்வத்தியாயம் பறைசாற்றியது. இது இவ்வாறு இருக்க (நபியின் மனைவியாகிய) ஆயிஷா (ரலி) அவர்களின் பெயரிலோ அன்றி (நபியின் மகளாகிய) பாத்திமா (ரலி) அவர்களின் பெயரிலோ எந்தவொரு அத்தியாயமும் காணப்படுவதில்லை. மேலும், ஈஸா (அலை) அவர்களின் பெயர் அல்குர்ஆனில் 25 முறை குறிப்பிடப்பட்டிருக்கும் அதேவேளை, முஹம்மத் நபி (ஸல்) அவர்களது பெயரோ 5 முறை மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது.

5. நபியவர்கள் கொண்டுவந்த வேதத்தை ஷைத்தான்கள்தான் அவருக்கு ஓதிக் காட்டி பூர்த்தி செய்தன என்று, வஹியையும், தூதுத்துவத்தையும் நிராகரிப்போர் கருதுகின்றனர். எனினும், இதோ பின்வருமாறு அல்குர்ஆன் இவர்களுடன் சவால் விடுகின்றது:

وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيَاطِينُ . وَمَا يَنبَغِي لَهُمْ وَمَا يَسْتَطِيعُونَ

‘இன்னும் ஷைத்தான்கள் இ(வ்வேதத்)தைக் கொண்டு இறங்கவில்லை. மேலும், அது அவர்களுக்குத் தகுதியுமல்ல. (அதற்கு) அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்’ (அஷ்-ஷுஅறா: 210-211). 

ஆகவே, ஷைத்தான்கள் ஒருநூலை எழுதிவிட்டு, அதனை எழுத என்னால் முடியாது என்று அவையாகவே கூறுமா? 

மாறாக, புத்தகத்தை ஓதும்போது ‘என்னிடமிருந்து பாதுகாப்புத் தேடிக்கொள்’ என்றும் அது கூறுமா?

  6. இறைத்தூதரும், அபூபக்ர் (ரலி) அவர்களும் குகையில் முற்றுகையிடப்பட்டுக் கொண்டிருந்த வேளை, அவர்களது பாதங்களுக்குக் கீழால் இணைவைப்பாளர்களில் எவரேனும் பார்த்துவிட்டால் அவர்கள் இருவரையுமே கண்டுவிடுவர். இந்நிலையில் அபூபக்ர் (ரலி) அவர்கள் மிகவும் அச்சம் கொண்டு காணப்பட்டார். எனினும், அபூபக்ர் (ரலி) அவர்களின் அச்சத்தைக் கண்ட நபியவர்கள், ‘பின்புறமாக ஏதேனும் கதவுகள் உண்டா? என்று பார்ப்போம்!” என்றோ, ‘யாராவது நாம் பேசுவதை செவியுற்றுவிடாத வண்ணம் வாய்பொத்தி மௌனமாக இருந்து கொள்ளவும்’ என்றோ கூறவில்லை. 

பொதுவாக ஒரு சாதாரண மனிதனின் இயல்பான பதிலாக மேற்கூறப்பட்ட வசனங்கள்தான் இடம்பெறும். எனினும் இந்நிலைக்கு மாற்றமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அபூபக்கரை நோக்கி, மிகவும் நிதானமாகவும், அமைதியாகவும் ‘கவலைப் பட வேண்டாம்! நிச்சயமாக அல்லாஹ் எங்களோடு உள்ளான்!’ என்றும், ‘அல்லாஹ் எம்முடன் உள்ளான். அவன் எங்களை வீணாக்கி விட மாட்டான்’ என்றுமே கூறினார்கள். ஆகவே, இது ஒரு பொய்யனின் அல்லது துரோகியின் புத்தியின் வெளிப்பாடா? அன்றி, அல்லாஹ்வின் உதவி தனக்கு என்றென்றும் உண்டென்று உறுதியாக நம்புகின்ற ஒரு நபியின், இறைத்தூதரின் அறிவின் வெளிப்பாடா? 

7. அபூலஹப் மரணிப்பதற்கு பத்து வருடங்களுக்கு முன்னரே, ‘அல் மஸத்’ எனும் எனும் அத்தியாயம் இறங்கியது. எனவே, இந்தக் குர்ஆன் பொய்யானது என்பதை நிரூபிக்க 365 × 10 = 3650 நாட்களும், சந்தர்ப்பங்களும் தாராளமாகக் காணப்பட்டன. எனினும், இவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. எவ்வளவு அபூர்வமான சவால் பொய்யாகவேனும், வெளித்தோற்றத்துக்கு மாத்திரம் நடிப்புக்காக வேனும் அபூ லஹப் இஸ்லாத்தைத் தழுவ வில்லையே!! (இவ்வாறு இவன் பொய்யாகவேனும் இஸ்லாத்தைத் தழுவியிருந்தால் அல்குர்ஆன் பொய்யாக்கப்பட்டிருக்கும்.) இன்றுவரை இதே வசனங்கள் ஓதப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

இது அல்லாஹ்விடமிருந்துள்ள வஹீ என்று அறிந்திருக்காவிடின், தன்னிடமுள்ள வேதநூல் சத்திய உண்மையே என்ற நம்பிக்கையுடன் பத்து வருடங்களாக எப்படி நபியவர்களால் வாழ முடிந்திருக்கும்! (எனவே, அல்குர்ஆன் இறைவனிடமிருந்துள்ள சத்திய வேதமேயன்றி, வேறில்லை என்ற மன உறுதியுடனே நபியவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவ்வாறே இப்பத்து வருட நீண்ட கால எல்லையில் அபூலஹபும் இஸ்லாத்தை ஏற்கவில்லை.) 

8. مَا كُنتَ تَعْلَمُهَا أَنتَ وَلاَ قَوْمُكَ مِن قَبْلِ هَذَا ‘(நபியே!) இவற்றை (இதற்கு முன்னர்) நீங்களோ, உங்கள் சமுதாயத்தினரோ அறிந்திருக்க வில்லை’(ஹூத்: 49) 

என்ற திருமறை வசனத்தின் விளக்கத்தை குர்ஆனியக் கதைகள் சிலவற்றின் பினனணியூடாக விளக்குகின்ற போது, டாக்டர் மில்லர் பின்வருமாறு கூறுகின்றார்: சமய ரீதியான புனித நூல்கள் எதுவுமே இவ்வாறான உரைநடையுடன் பேசுவதைக் காண முடியாது! எனினும், அல்குர்ஆன் அதனை ஓதுவோருக்கு தகவல்களை வழங்கிவிட்டு, ‘இவை புதிய தகவல்களாகும்.’ என்று கூறுகின்றது. 

இது நிகரேயில்லாத ஒரு சவாலாகவல்லவோ இருக்கின்றது! மக்காவாசிகள் -  வீண் வாதாட்டத்துக்காகவேனும் நபியவர்களை நோக்கி, ‘(முஹம்மதே!) நீங்கள் பொய்யுரைத்து விட்டீர்! நீங்கள் கூறும் விடயங்கள் ஏற்கனவே எமக்குத் தெரிந்தவைகளே’ என்று கூறியிருந்தால் என்ன நடந்திருக்கும்? இவ்வாறே, ஆய்வாளர்களில் எவரேனும் குதர்க்க வாதம் புரிகின்ற நோக்கிலேனும், ‘(முஹம்மதே!) இந்தத் தகவல்கள் இதற்கு முன்னர் அறிமுகமான, அறியப்பட்டவைகளாகவே காணப்பட்டன.’ என்று கூறியிருந்தால் எப்படியிருந்திருக்கும்? (எனினும், இவ்வாறு அல்குர்ஆன் புதிய தகவல்கள் என்று கூறிய எதையும் எவருமே பழையவை, அறியப்பட்டவை என்று கூறவில்லை. இவ்வாறு கூறியிருந்தால் அல்குர்ஆன் பொய்ப்பிக்கப்பட்டிருக்கும்) எனினும், இவ்வாறு எதுவுமே நடைபெறவில்லையே!! 

9. குர்ஆனிய வஹியின் நம்பகத் தன்மையை மாசுபடுத்துவதற்கென, எத்தனையோ ஆய்வுகள், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவை எதுவும் பலனளிக்கவில்லை என்ற உண்மையை, புதிய கத்தோலிக்க கலைக் களஞ்சியம் ‘அல்குர்ஆன்’ என்ற தலைப்புக்குக் கீழே பதிவு செய்துள்ளது. 

இதனை டாக்டர் மில்லர் பின்வருமாறு சுட்டிக் காட்டுகின்றார். ‘அல்குர்ஆன் ஒரு நோயாளியின் வெறும் கற்பனைகள், அது ஷைத்தானின் ஊசலாட்டங்கள் என்றும், அல்குர்ஆனை நபியவர்களுக்குக் கற்பித்தவர் ஒரு மனிதரேயாவார் என்றும், இது ஒரு பழைய நூலை அடிப்படையாகக் கொண்டு அமையப் பெற்றது என்றும் அல்குர்ஆனுக்கெதிரான பல்வேறுபட்ட கருத்துக்களை அவை கூறியிருந்தன. எனினும், ஈற்றில் அந்த ஆய்வுகள் அனைத்தும் பின்வரும் முடிவையே முன்வைத்தன: வரலாறு நெடுகிலும் அல்குர்ஆனுக்கு எதிரான பல வாதங்கள் தோன்றிய போதும், ஈற்றில் அவை அனைத்துமே அல்குர்ஆன் ஒரு அறிவுள்ள மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல என்ற முடிவையே ஏற்றுக் கொண்டன. 

மேலும், டாக்டர் மில்லர் பின்வருமாறு கூறுகின்றார்: வஹியின் நம்பகத் தன்மையை இழக்கச் செய்யும் இவ்வகை வாதங்களில் ஒன்றை நடாத்துவதற்கு ஒரு தேவாலயம் தீர்மானித்திருந்தது. எனினும், இறுதியாக அதே தேவாலயம் குர்ஆனுக்கெதிரான இத்தகு அனைத்துவித வாதங்களையும் புறக்கணித்து விட்டது. இருப்பினும், குர்ஆன் பற்றிய முஸ்லிம்களின் வாதங்கள் உண்மை என்பதை ஏற்றுக் கொள்ளும் தைரியமும் குறித்த தேவலாயத்திடம் காணப்படவில்லை.   
       
டாக்டர் மில்லர் அவர்களே! அல்லாஹ்வின் வேதநூலாகிய அல்குர்ஆன் பற்றி மிகவும் நீதமாகவும், நடுநிலை பேணியும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இச்சிறப்புமிகு ஆய்வுக்காக அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக! என்று பிரார்த்திப்பதா? அல்லது இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்ட பொறாமையுணர்வுள்ளவர்களை, இம்மனிதர் எழுதிய நூலை ஆராய்ந்து பார்க்க அழைப்பு விடுப்பதா?   
       
அல்குர்ஆனின் அற்புதத்தன்மை என்ற தலைப்புக்களில் அக்கறையோடு ஆய்வு செய்கின்றவர்களிடம் கீழ்வரும் இரண்டு காரணங்களுக்காக இவரது நூலையும் உங்கள் பாடத்திட்டத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவதா? 

1. ‘இது அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து வந்திருந்தால், அதிலே பல கருத்து முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்’ என்ற வசனத்தின் அற்புதத்தை இவரது நூல் உறுதிப்படுத்துகின்றது.

2. ‘பிழை தேடும் முயற்சி’ என்ற வகையில் அல்குர்ஆன் விடுகின்ற சவாலை இவரது நூல் நிலைப்படுத்துகின்றது. (இவ்விரு விடயங்களையும் உங்கள் ‘வியப்பூட்டும் குர்ஆன்’ எனும் நூல் நிரூபித்துவிட்டது.) 

குறிப்பு:          ஏறக்குறைய 30 வருடங்களுக்கு முன்னர் ‘இஸ்லாமும் கிறிஸ்தவமும்’ என்ற தலைப்பில் ஒரு பிரபல்யமான விவாதம் நடைபெற்றது. இஸ்லாமிய அழைப்பாளர் அஹ்மத் தீதாத் அவர்களுடன் நடைபெற்ற இவ்விவாதத்திலே, கிறிஸ்தவம் சார்பாக டாக்டர் மில்லர் கலந்து கொண்டு வாதிட்டார். இவரது பேச்சாற்றல் மிகப் பலமானதாகவும், இவர் முன்வைக்கும் ஆதாரங்கள் உயிரோட்டமுள்ளதாகவும் காணப்பட்டன. சத்தியத்தை ஆராய்ந்தமை அவரது மார்க்கத்தின் மீது அவருக்கிருந்த பற்றையும் பிடிவாதத்தையும் மிகைத்துவிட்டது.     
     
ஆம்! 1977 ஆம் ஆண்டளவில் மில்லர் அல்குர்ஆன் பற்றிய ஆய்வை மேற்கொள்ள ஆரம்பித்தார். எனினும், 1978 ஆம் ஆண்டை அடைந்தபோது, மில்லர் இஸ்லாத்தைத் தழுவிவிட்டார். இஸ்லாத்தில் இணைந்த மில்லர் தனது பெயரை அப்துல் அஹத் உமர் என்று மாற்றிக் கொண்டார். பின்னர் ஸவூதி அரேபியாவின் பெற்றோலியம் மற்றும் கனிய வள பல்கலைக் கழகத்திலே பல வருடங்கள் கடமையாற்றினார். பின்னர், தன்னை முற்று முழுதாகவும். இஸ்லாமியப் பிரச்சாரப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார். இஸ்லாத்தின்பால் மக்களை அழைப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இவர், தொலைக்காட்சி மற்றும் ஒலிபரப்புச் சாதனங்களில் பல நிகழ்ச்சிகளை நடத்தினார். இஸ்லாமியக் கொள்கை விளக்கத்துடனும் ஷரீஆ சட்டத்துடனும் தொடர்பான பொதுவான பல உரைகளையும் சமுதாயத்துக்காக முன்வைத்தார்.

(அல்லாஹ் மேலான சுவனத்தை எமக்கும், காரி மில்லர் அவர்களுக்கும் வழங்குவானாக!)

தழுவல்: www.55a.com
தமிழில்: மௌலவியா எம்.வை. மஸிய்யா BA (Hons)

Friday, November 5, 2010

உளூவின்றி குர்ஆனைத் தொடலாமா?

உளூவின்றி குர்ஆனைத் தொடலாமா

கேள்வி
உளூவின்றி குர்ஆனைத் தொடக் கூடாது என்பதற்கு ஆதாரம் என்ன?
பதில் :
உளூ இல்லாதவர்களும் குளிப்பு கடமையானவர்களும் குர் ஆனைத் தொடலாமா என்பதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. தொடலாம் என்பதே சரியான கருத்தாகும். தொடக் கூடாது என்ற கருத்து உடையவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களை ஒவ்வொன்றாக அலசினால் இதைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொடமாட்டார்கள்.
அல்குர்ஆன் (56 : 79(
குளிப்பு கடமையானவர்களும், உளூ இல்லாதவர்களும் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது. ஓதக் கூடாது என்பதற்கு வலுவான ஆதாரமாக இந்த வசனத்தை அவர்கள் எடுத்து வைக்கின்றனர். இந்த வசனத்தை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் திருக்குர்ஆனை தூய்மையற்ற நிலையில் உள்ளவர்கள் தொடக் கூடாது. ஓதக் கூடாது என்று முடிவு செய்ய இடம் தருவது போல் தோன்றுகிறது..
ஆனால் இந்த வசனத்தின் முந்தைய வசனங்களையும் இது போன்று அமைந்த மற்ற வசனங்களையும்  நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் எவ்வாறு இறக்கப்பட்டது என்பதையும் விளங்கினால் இவர்களின் கருத்து முற்றிலும் தவறானது என்பதை விளங்கலாம்.
இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள தூய்மையானவர்களைத் தவிர  யாரும் அதைத் தொட மாட்டார்கள் என்பதில் தூய்மையானவர்கள் என்றால் யார் என்பதையும், இதைத் தொட மாட்டார்கள் என்பது எதைக் குறிக்கிறது என்பதையும் முதலில் பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. ஒலி வடிவில் தான் அருளப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்கள் மனதில் பதிவு செய்து கொள்வார்கள் என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.
திருக்குர்ஆன் எழுத்து வடிவில் இறக்கப்படவில்லை எனும் போது தொடுதல் என்ற கேள்வியே எழாது. தொடும் விதத்தில் திருக்குர்ஆன் இறக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்தக் குர்ஆனை தூய்மையானவர்களைத் தவிர யாரும் தொட மாட்டார்கள் என்று கூற முடியும்.
இந்த அடிப்படையில் 56 : 79 வசனத்தில் கூறப்பட்ட தொடுதல் என்பது நமது கையில் உள்ள குர்ஆனைக் குறிக்காது என்பதை விளங்கலாம். மேலும் இக்கருத்தை வலுவூட்டும் வகையில் இதன் முந்தைய வசனங்கள் அமைந்துள்ளன.
இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும். தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள். அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது.
அல்குர்ஆன் (56 : 77. 79)
56 : 79  வசனத்திற்கு முன்னுள்ள இரண்டு வசனங்களையும் படிக்கும் போது ஒரு பேருண்மை நமக்கு விளங்கும்.  இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆன் என்று அல்லாஹ் கூறுகிறான். அடுத்த வசனத்தில் தூய்மையானவர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தொட மாட்டார்கள் என்று கூறுகிறான்.
இப்போது அதை என்ற சொல் நம் கையில் இருக்கும் திருக்குர்ஆனைப் பற்றிப் பேசவில்லை. பாதுகாக்கப்பட்ட ஏட்டில் (லவ்ஹுல் மஹ்ஃபூலில்) உள்ள திருக்குர்ஆனைப் பற்றித் தான் பேசுகின்றது என்ற உண்மை தெளிவாகிறது.
இந்தக் கருத்தை மேலும் வலுவூட்டும் வண்ணம் திருக்குர்ஆனின் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.
அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை. விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார். இது தூய்மைப்படுத்தப்பட்டு உயர்வாக்கப்பட்ட மதிப்புமிக்க ஏடுகளில் உள்ளது. மரியாதைக்குரிய நல்லோர்களான எழுத்தர்களின் கைகளில் உள்ளது.
அல்குர்ஆன் (80 : 11-16)
இவ்வசனமும் திருக்குர்ஆனின் மூலப்பிரதி எங்குள்ளது என்பதைப் பற்றி பேசுகின்றது. இவ்வசனங்களிலும் 56 : 79 வசனத்தில் கூறப்பட்டதைப் போன்றே கூறப்பட்டிருந்தாலும் 56 : 79 வசனத்தை விட கூடுதல் தெளிவுடனும் விளக்கத்துடனும் காணப்படுகின்றது.
தூய்மையானவர்கள் என்று 56 : 79 வசனத்தில் கூறப்பட்டவர்கள் யார்? என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது. அவர்கள் வானவர்கள் தாம் என்று இவ்வசனத்திலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.
குரைஷிக் குல இறை நிராகரிப்பாளர்கள் இந்தக் குர்ஆனை ஷைத்தான்கள் கொண்டு வருகின்றனர் என எண்ணிணார்கள். அவர்களுக்கு அல்லாஹ் பின்வருமாறு பதில் கூறினான்.
இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர்.
அல்குர்ஆன் (26 : 210 212)
இந்த வசனத்தில் சொல்லப்பட்டதைப் போன்று திருக்குர்ஆன்  தூய்மையானவர்களான மலக்குமார்களின் கையிலே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஷைத்தான்களால் இதைத் தொடமுடியாது என்ற பொருளில் தான் 56 : 79 வது வசனமும் அமைந்துள்ளது.
தொட மாட்டார்கள் என்பதற்கும் தொடக் கூடாது என்பதற்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிவோம். தொடக் கூடாது என்றால் அது கட்டளையிடுகிறது என்பது பொருள். தொட மாட்டார்கள் என்றால் அது ஒரு செய்தியை நமக்கு எடுத்துக் கூறுகிறது என்று பொருள்.
மேற்கண்ட வசனத்தில் தொடக் கூடாது எனக் கூறப்படவில்லை. மாறாக தொட மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. குளிப்பு கடமையானவர்களும், உளூ இல்லாதவர்களும் குர்ஆனைத் தொடக் கூடாது என்ற அர்த்தம் தான் இந்த வசனத்தின் பொருள் என்றால் தூய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் இக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று தொடுவதற்கு தடைபோடும் விதத்தில் அல்லாஹ் கூறியிருப்பான். ஆனால் மற்றவர்கள் இதைத் தொட மாட்டார்கள் என்று அல்லாஹ் கூறியிருப்பது பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆனை மலக்குமார்களைத் தவிர மற்றவர்களால் தொட முடியாது என்ற பொருளையே தருகிறது.
மேலுள்ள வசனங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்துப் பார்க்கும் போது 56 : 79 வது வசனத்தில் சொல்லப்பட்ட தூய்மையானவர்கள் என்பது வானவர்கள் என்பதும்,
அதை என்று கூறப்பட்டுள்ளது வானத்தில் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள குர்ஆன் என்பதும்
ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகின்றது. எனவே இந்த வசனத்தை வைத்துக் கொண்டு தூய்மையான நிலையில் தான் குர்ஆனைத் தொட வேண்டும் என்று வாதிட முடியாது.
தூய்மையில்லாதவர்கள் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது. ஓதக் கூடாது என்றக் கருத்தில் சில ஹதீஸ்கள் வருகின்றன. அவையனைத்தும் ஆதாரமற்றவையாகும்.
உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் அவர்களின் சகோதரி அவர்களை நோக்கி, “நீங்கள் அசுத்தமாக இருக்கின்றீர்கள்.  தூய்மையானவர்களைத் தவிர இதை எவரும் தொடக் கூடாது” என்று கூறினார்கள் என்ற செய்தி முஸ்னத் பஸ்ஸார் என்ற நூலில் 279 வது ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ள உஸாமத் பின் ஸைத் என்பார் பலவீனமானவர் என்று மஜ்மவுஸ் ஸவாயித் என்ற நூலில் ஹைஸமீ குறிப்பிடுகின்றார்.
இதே அறிவிப்பு பைஹகீயிலும் இடம் பெற்றுள்ளது.  இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான காஸிம் பின் உஸ்மான் அல்பஸரீ என்பவர் பலவீனமானவர் ஆவார்.  இவரது ஹதீஸ் பின்பற்றக் கூடியதல்ல என்று இப்னு ஹஜர் அவர்கள் ஸிஸானுல் மீஸானில் குறிப்பிடுகின்றார்கள்.
ஒரு வாதத்திற்கு இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது என்று வைத்துக் கொண்டாலும் இதன் அடிப்படையில் தூய்மையற்றவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது என்று வாதிட முடியாது.  ஏனெனில் இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவோ, அல்லது அவர்கள் இதை அங்கீகரித்ததாகவோ குறிப்பிடப்படவில்லை.  உமர் (ரலி) அவர்களது சகோதரியின் சொந்தக் கருத்தாகவே இடம் பெற்றுள்ளது.  எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரோமாபுரியின் அரசர் ஹெர்குலிஸுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது:
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அல்லாஹ்வின் அடியாரும் அவனது தூதருமான முஹம்மது என்பார், ரோமாபுரிச் சக்கரவர்த்தி ஹெர்குலிஸுக்கு எழுதிக் கொள்வது: நேர்வழியைப் பின்பற்றுவோர் மீது சாந்தி நிலவட்டுமாக!  நிற்க!  இஸ்லாத்தைத் தழுவுமாறு உமக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன்.  நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்! அல்லாஹ் உமக்கு இரு மடங்கு சன்மானம் வழங்குவான்.  நீர் புறக்கணித்தால் (உமது) குடிமக்களின் பாவமும் உம்மைச் சாரும்.
“வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!” என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் “நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!” எனக் கூறி விடுங்கள்! (அல்குர்ஆன் 3:64)
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : புகாரி 7, 2941
இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத ஒரு மன்னருக்கு “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்’ மற்றும் 3:64 ஆகிய குர்ஆன் வசனங்களை எழுதி அனுப்பியுள்ளார்கள்.  தூய்மையற்றவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது என்றிருந்தால் மாற்று மதத்தில் உள்ளவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எழுதிக் கொடுத்திருக்க மாட்டார்கள்.
எனவே குர்ஆனை எந்த நிலையில் வேண்டுமானாலும் தொடலாம். ஓதலாம்.

Sunday, October 3, 2010

உஹது போர்க்களம் புகைப்படங்களுடன்

உஹது
மக்கா குரைசிகளும் பிற கோத்திரத்தாரும் சேர்ந்து சுமார் மூவாயிரம் படையினர் மதினாவை தாக்குவதற்க்கு உஹது என்ற இடத்திற்க்கு வந்தனர். அப்துல்லா பின் சுபைர் ரளியல்லாஹு அன்ஹு தலைமையில் 50 வில்போர் வீரர்களை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் இந்த ஜபலுர் ருபாத்துக்கு உச்சியில் நிற்கவைத்தார்கள். மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் கட்டளை வரும்வரை இந்த குன்றிலிருந்து கீழே இறங்காமல் எதிரிகளை நோக்கி அம்பெய்தி கொண்டே இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். மதினாவிற்க்கு மிக அருகில் உள்ள உஹதில் 700 நம்பிக்கையாளர்கள் நிராகரிப்பார்களுடன் மிகக் கடுமையாக போரிட்டது இந்த பள்ளத்தாக்கில்தான் (படம் 15a).

Jabalur Rubath
ஜபலுர் ருபாத்
The valley of Uhd
படம் 15a
முஸ்லீம்களை எதிர்த்து போரிட எதிரிகளால் முடியவில்லை. தங்கள் தலைவர்களும் கொடியை தாங்க கூடியவர்களும் கொல்லப்பட்டதால் நிராகரிப்போர் போரிலிருந்து பின்வாங்கி சென்றனர். இதைக் கண்டதும் வில்போர் வீரர்களில் பத்து நபர்களை தவிர அனைவரும் பெருமானாரின் கட்டளையை புறக்கணித்து குன்றிலிருந்து இறங்கி எதிரிகள் விட்டுச்சென்ற ஆயுதங்களையும் பொருள்களையும் சேகரிக்க தொடங்கினார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காபிர்களின் குதிரைப்படையினர் குன்றின் பின்பக்கமாக மலைமீது ஏறி முஸ்லீம்களுக்கு எதிராக போரிட தொடங்கினார்கள். இதனால் ஏற்ப்பட்ட குழப்பத்தினால் ஆங்காங்கு சிதறி ஓடினார்கள். ஒரு சிலர் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டனர். இந்த சூழ்நிலையில் சிக்கி ஏராளமான முஸ்லீம் படையினர் வீரத்தியாகியாயினர்.

இன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்; (அவ்வமயம் உஹது களத்தில்) பகைவர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்து விடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள்; நீங்கள் (உங்களுக்கிடப்பட்ட) உத்திரவு பற்றித் தர்க்கிக்கத் துவங்கினீர்கள்; நீங்கள் விரும்பிய (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்திரவுக்கு மாறு செய்யலானீர்கள்; உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள்; இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்; பின்னர், உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளைவிட்டு உங்களைப் பின்னடையுமாறு திருப்பினான்; நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான் அல்குர்ஆன் 3:152

முஸ்லீம்கள் மீண்டும் வலிமைபெற்று மிக்க வீரத்துடன் முன்னேறிச் சென்று எதிரிகளை தாக்கியதால் அவர்கள் போர்களத்தை விட்டு ஓடிச்சென்றனர். உஹது போரில் தியாகிகளான சுமார் 60 ஷஹபாக்களின் கப்ருகள் இந்த சுற்று சுவருக்குள்தான் உள்ளன. அதற்க்கு நடுவில் உள்ளது பெருமானாரின் தந்தையின் சகோதரர் ஹம்ஸா பின் அப்துல்முத்தலிபின் கப்ரு ஆகும்.

Wednesday, September 29, 2010

குகைவாசிகள்

அல்லாஹ் தன் திருமறையில் பின்வாறு விவரிக்கிறான்.

(அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ?

அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் “எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள்.

ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம்.

பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம்.

(நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் - தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம்.

அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று “வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்” என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.

எங்கள் சமூகத்தாராகிய அவர்கள் அவனையன்றி வேறு நாயனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் அவற்றின் மீது தெளிவான அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா? ஆகவே அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டுபவனை விட அநியாயக்காரன் யார்? (என்றும் கூறினார்கள்).

அவர்களையும், அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றையும் விட்டு விலகி நீங்கள், குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய இறைவன் தன்னுடைய ரஹ்மத்திலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து, உங்கள் காரியத்தில் உணவு பிரச்சனையை உங்களுக்கு எளிதாக்கித் தருவான் (என்று அவர்களில் ஓர் இளைஞர் சொன்னார்).

சூரியன் உதயமாகும் போது (அவர்கள் மீது படாமல்) அது அவர்களுடைய குகையின் வலப்புறம் சாய்வதையும், அது அஸ்தமிக்கும் போது அது அவர்களுடைய இடப்புறம் செல்வதையும் நீர் பார்ப்பீர்; அவர்கள் அதில் ஒரு விசாலமான இடத்தில் இருக்கின்றனர் - இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும், எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்; இன்னும், எவனை அவன் வழிகேட்டில் விடுகிறானோ, அவனுக்கு நேர் வழிகாட்டும் உதவியாளர் எவரையும் நீர் காணவே மாட்டீர்.

மேலும், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதிலும், நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே எண்ணுவீர்; அவர்களை நாம் வலப்புறமும் இடப்புறமுமாக புரட்டுகிறோம்; தவிர, அவர்களுடைய நாய் தன் இரு முன்னங்கால்களையும் வாசற்படியில் விரித்(துப் படுத்)திருக்கிறது; அவர்களை நீர் உற்றுப்பார்த்தால், அவர்களை விட்டும் வெருண்டு ஓடிப் பின்வாங்குவீர்; அவர்களில் நின்றும் உண்டாகும் பயத்தைக் கொண்டு நிரம்பிவிடுவீர்,

இன்னும் அவர்களிடையே ஒருவரையொருவர் கேட்டுக் கொள்வதற்காக நாம் அவர்களை இவ்வாறு எழுப்பினோம்; அவர்களிலிருந்து சொல்பவர் (ஒருவர்) “நீங்கள் எவ்வளவு நேரம் (நித்திரையில்) இருந்தீர்கள்?” எனக் கேட்டார்; “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம்” எனக் கூறினார்கள்; (மற்றவர்கள்) “நீங்கள் (நித்திரையில்) இருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கு அறிந்தவன்; ஆகவே, உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புங்கள்; அவர்கள் சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து ஆகாரத்தை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்; மேலும் அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்; உங்களைப் பற்றி எவருக்கும் அவர் அறிவித்து விட வேண்டாம் (என்றனர்).

ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால், உங்களைக் கல்லாலடித்துக் கொன்றுவிடுவார்கள்; அல்லது தங்களுடைய மார்க்கத்தில் உங்களை மீட்டி விடுவார்கள்; அப்புறம், நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டீர்கள்” (என்றும் கூறினர்).

இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றிய (விஷயத்)தை வெளியாக்கினோம்; (அப்பட்டணவாசிகளோ) “இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை (நபியே! நினைவு கூறும்) “இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை(ப் பற்றி) இறைவனே நன்கறிவான் என்றனர்; இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்: “நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்” என்று கூறினார்கள்.

(அவர்கள்) மூன்று பேர் தாம்; அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலர்) கூறுகின்றனர்(இல்லை) அவர்கள் ஐந்து பேர் தாம்; - அவர்களில் ஆறாவது அவர்களுடைய நாய்” என்று மறைவானதை ஊகம் செய்து (சிலர்) கூறுகிறார்கள்; இன்னும் (சிலர்) “ஏழுபேர் - அவர்களில் எட்டாவது அவர்களுடைய நாய்” என்று சொல்கிறார்கள் - (நபியே!) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக! ஆகவே, அவர்களைப் பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறெது பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம்; இன்னும் அவர்களைக் குறித்து இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம். அல்குர்ஆன் 18:9-22

Bones of Cave people Bones of Cave people
அவர்களது எலும்புகள்

குகை
Jaw bones of Cave people's dog
அந்த நாயின் மண்டை ஓடு மற்றும் தாடை எலும்பு
அவர்களது சடலங்கள் குகைக்குள் வெவ்வேறு கல்லறைக்குள் வைக்கப்பட்டிருந்தன. பின்னர் ஓரே கல்லறைக்குள் மாற்றப்பட்டன. இப்பொழுதும் அவர்களது எலும்புகளை கல்லறைக்குள் காணலாம்.

இக்குகை ஜோர்டான் நாட்டு தலைநகரம் அம்மானுக்கு அருகில் ரக்கீம் என்ற இடத்தில் இருக்கிறது.

Tuesday, September 28, 2010

Sunday, September 26, 2010

குர்ஆனின் அத்தாட்சிகள்

ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமுதாயத்தை நேரான பாதையில் கொண்டுசெல்ல அல்லாஹ்விடம் இருந்து வேதங்கள் திருதூதர்கள் வழியாக அளிக்கப்பட்டு கொண்டு இருந்தன. ஏழாவது நூற்றான்டில் வேதங்களின் இறுதியாக இறுதி நாள் வரை உள்ள மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட வேதம்தான் திருக்குர்ஆன் ஆகும்.

அறிவியல் முன்னேற்றத்தால் மனிதனின் வளர்ச்சி அதிகமாக இருந்தாலும், திருக்குர்ஆனின் எந்தவொரு கருத்தும் தவறானது என்று இதுவரை எவராலும் நிருபிக்க முடியவில்லை.

அதைப்போல் குர்ஆனில் கூறப்பட்ட வரலாற்று செய்திகள் நூறு சதவீதம் உண்மையானது என்பதை இப்பூமியில் பயணம் சென்றால் நம்மால் உணர முடியும். பூமியில் பயணம் செய்து கடந்த கால வரலாற்றை படித்து படிப்பினை பெற திருக்குர்ஆன் நமக்கு கட்டளையிடுகிறது.

பூமியில் பிராயாணம் செய்து, குற்றவாளிகளின் முடிவு என்னவாயிற்று என்று பாருங்கள்” என்று (அவர்களிடம் நபியே!) நீர் கூறுவீராக. அல்குர்ஆன் 27:69

ஆது சமுதாயத்தினரும் ஹூது நபியும்
ஹூது நபியின் கூட்டத்தார்களான ஆது சமுதயாத்தினர் வாழ்ந்திருந்த இடம்தான் உபார் ஆகும். இது ஓமான் நாட்டில் உள்ள சலாலாஹ் என்ற நகரத்திலிருந்து 172 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இது கி.பி. 1992ல் நடைபெற்ற புதைபொருள் ஆராய்ச்சியின் போது கண்டுபடிக்கப்பட்டது.

The lost city of Ubar The lost city of Ubar
மணல் குன்றுகளை தோண்டியபொழுது கிடைத்த சிதிலங்கள்
திருக்குர்ஆன் அத்தியாயம் 11:50 ல் அல்லாஹ் கூறுகிறான்.
“ஆது” சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்: “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், அவனன்றி (வேறு) இறைவன் உங்களுக்கு இல்லை; நீங்கள் பொய்யர்களாகவே தவிர வேறில்லை.

Well of Ad People Well of Ad people
ஆது சமுதாயத்தினர் பயன்படுத்திய கிணறு. இக்கிணற்றில் இப்பொழுதும் தண்ணீர் இருக்கிறது.
மேலும் திருக்குர்ஆன் வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்
உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள்) தூண்களையுடைய “இரம்” (நகர) வாசிகள், அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை. அல்குர்ஆன் 89:6-8

thigs used by Ad people
இது மேற்கூறப்பட்ட தூண்களின் சிதிலமடைந்த பகுதி ஆகும்.
Things used by Ad people
ஆது கூட்டத்தினர் பயன்படுத்திய பொருட்கள்
Things used by Ad people
ஆது கூட்டத்தினர் பயன்படுத்திய பொருட்கள்
சிலைகளை வணங்கி கொண்டிருந்த ஆது சமுதாயத்தினரிடம் அல்லாஹ் வழங்கும் தண்டனைகளைப் பற்றி ஹூது நபி முன்னெச்சரிக்கை செய்தார். ஆனால் அவர்களோ அதையும் மறுத்து புறக்கணித்தனர். ஹூது நபியையும் உண்மையான விசுவாசிகளையும் பாதுகாத்து அல்லாஹ் நிராகரிப்போரை அழித்தான்.

இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.
அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்; எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர். அல்குர்ஆன் 69:6-7


இப்பொழுது உபாரை சுற்றிலும் யாருமற்ற பாலைவனம் தான் உள்ளது.