Sunday, September 26, 2010

குர்ஆனின் அத்தாட்சிகள்

ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமுதாயத்தை நேரான பாதையில் கொண்டுசெல்ல அல்லாஹ்விடம் இருந்து வேதங்கள் திருதூதர்கள் வழியாக அளிக்கப்பட்டு கொண்டு இருந்தன. ஏழாவது நூற்றான்டில் வேதங்களின் இறுதியாக இறுதி நாள் வரை உள்ள மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட வேதம்தான் திருக்குர்ஆன் ஆகும்.

அறிவியல் முன்னேற்றத்தால் மனிதனின் வளர்ச்சி அதிகமாக இருந்தாலும், திருக்குர்ஆனின் எந்தவொரு கருத்தும் தவறானது என்று இதுவரை எவராலும் நிருபிக்க முடியவில்லை.

அதைப்போல் குர்ஆனில் கூறப்பட்ட வரலாற்று செய்திகள் நூறு சதவீதம் உண்மையானது என்பதை இப்பூமியில் பயணம் சென்றால் நம்மால் உணர முடியும். பூமியில் பயணம் செய்து கடந்த கால வரலாற்றை படித்து படிப்பினை பெற திருக்குர்ஆன் நமக்கு கட்டளையிடுகிறது.

பூமியில் பிராயாணம் செய்து, குற்றவாளிகளின் முடிவு என்னவாயிற்று என்று பாருங்கள்” என்று (அவர்களிடம் நபியே!) நீர் கூறுவீராக. அல்குர்ஆன் 27:69

ஆது சமுதாயத்தினரும் ஹூது நபியும்
ஹூது நபியின் கூட்டத்தார்களான ஆது சமுதயாத்தினர் வாழ்ந்திருந்த இடம்தான் உபார் ஆகும். இது ஓமான் நாட்டில் உள்ள சலாலாஹ் என்ற நகரத்திலிருந்து 172 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இது கி.பி. 1992ல் நடைபெற்ற புதைபொருள் ஆராய்ச்சியின் போது கண்டுபடிக்கப்பட்டது.

The lost city of Ubar The lost city of Ubar
மணல் குன்றுகளை தோண்டியபொழுது கிடைத்த சிதிலங்கள்
திருக்குர்ஆன் அத்தியாயம் 11:50 ல் அல்லாஹ் கூறுகிறான்.
“ஆது” சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்: “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், அவனன்றி (வேறு) இறைவன் உங்களுக்கு இல்லை; நீங்கள் பொய்யர்களாகவே தவிர வேறில்லை.

Well of Ad People Well of Ad people
ஆது சமுதாயத்தினர் பயன்படுத்திய கிணறு. இக்கிணற்றில் இப்பொழுதும் தண்ணீர் இருக்கிறது.
மேலும் திருக்குர்ஆன் வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்
உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள்) தூண்களையுடைய “இரம்” (நகர) வாசிகள், அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை. அல்குர்ஆன் 89:6-8

thigs used by Ad people
இது மேற்கூறப்பட்ட தூண்களின் சிதிலமடைந்த பகுதி ஆகும்.
Things used by Ad people
ஆது கூட்டத்தினர் பயன்படுத்திய பொருட்கள்
Things used by Ad people
ஆது கூட்டத்தினர் பயன்படுத்திய பொருட்கள்
சிலைகளை வணங்கி கொண்டிருந்த ஆது சமுதாயத்தினரிடம் அல்லாஹ் வழங்கும் தண்டனைகளைப் பற்றி ஹூது நபி முன்னெச்சரிக்கை செய்தார். ஆனால் அவர்களோ அதையும் மறுத்து புறக்கணித்தனர். ஹூது நபியையும் உண்மையான விசுவாசிகளையும் பாதுகாத்து அல்லாஹ் நிராகரிப்போரை அழித்தான்.

இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.
அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்; எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர். அல்குர்ஆன் 69:6-7


இப்பொழுது உபாரை சுற்றிலும் யாருமற்ற பாலைவனம் தான் உள்ளது.

1 comments:

Post a Comment