Showing posts with label மத ஒப்பாய்வுகள். Show all posts
Showing posts with label மத ஒப்பாய்வுகள். Show all posts

Monday, January 16, 2012

தீ மிதித்தல் ஒரு ஏமாற்று நாடகம்


அபூ ஹம்னா ஸலபி
பண்டைய காலம் முதல் நெருப்பை வழிபடுபவர்கள் இருந்து வருகின்றார்கள். அதே போல் சூரியன், சந்திரன் போன்றவற்றையும் சில இனக் குழுக்கள் வணங்கி வழிபடுகின்றன.
நெருப்பை வணங்கும் வழிபாடு நபி (ஸல்) அவர்கள் வருகை தரும் போது, பாரசீக சாம்ராச்சியத்தில் கூட இருந்துள்ளது என்பதை நபிகளாரின் சில பொன் மொழிகளும் சல்மான் அல் பாரிஸி என்ற நபித்தோழரின் வரலாறும் உறுதிப்படுத்துகின்றன

இந்துக்கள் மாரியம்மனின் அருள் வேண்டி அவர்களின் சாமியை நினைத்து தீ மிதிக்கின்ற  கலாச்சாரத்தை மத வழிபாடாகச் செய்து வருகின்றனர்

பக்தியின் பெயரால்  சில தாய்மார்கள் கையில் குழந்தைகளை தூக்கிக் கொண்டு தீயில்ஓடும் போது, அது தவறி தீயில் விழுந்துவிட்டால் குழந்தையின் கதி என்னவாகும் என்று இவர்கள் சிந்திப்பதில்லை.
நெருப்பை வணங்குபவர்களும், இந்துக்களும் ஷீஆ மதத்தினரும் தீ மிதிப்பதை வழிபாடாகச் செய்து வருகின்றனர். தீ மிதிக்கும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்காக மக்கள் ஒன்று கூடவும் செய்கின்றனர். அதனால், தீயை வழிபடுபவர்கள் இதை ஒரு திருவிழாவாக ஆக்கிவிட்டனர்.
ஜப்பானில் யாகுவோயின் கோவிலில் அஹிம்சை பேசும் பவுத்தர்களும் தீ மிதிக்கின்ற காட்சியை கீழே உள்ள படத்தில் காணலாம்.

தீயை மிதிப்பதற்கும் பக்திக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதை கல்லூரிகளில் மாணவ – மாணவிகளால் நடாத்தப்படும் கலைவிழாக்களில் அவர்கள் நிரூபித்துள்ளனர்.
இதிலிருந்து தீ மிதிப்பதை யார் வேண்டுமானாலும் செய்யலாம என்பது தெளிவாகிறது.

ஒரு கம்பெனியில் வைக்கப்பட்ட விளையாட்டு போட்டியில் தீ மிதிக்கும் இளம் பெண்
இது பக்தியின் பெயரால் நடத்தப் படவில்லை. மாறாக கலை நிகழ்ச்சியாக நடத்தப் பட்டுள்ளது.
அடுத்ததாக பூச்சட்டி எனப்படும் தீச்சட்டியின் கதையைப் பாருங்கள். இங்கே ஒரு பெண் கோவிலில் பக்தியுடன் தீச்சட்டி தூக்குகிறாள். ஆனால், அடுத்த படத்தில் நீங்கள் பார்ப்பது ஒரு கல்லூரி விழாவில் தீச்சட்டியை தலையில் வைத்து ஒரு கல்லூரி மாணவி ஆடுகிறாள். இங்கே பக்தி இல்லை. சாதாரண நிகழ்வே.

இவ்வாறு பக்தியின்றி தீ மிதிப்பதையும் தீச்சட்டியை கையில் தூக்கிக் கொண்டு நடனமாடுவதையும் பார்ப்போருக்கு இதனைப் புரிந்துகொள்ள முடியும்.
மனிதனுடைய உடலுறுப்புக்களில் உள்ளங்கையும் உள்ளங்காலும் வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் உள்ளதாக இறைவனால் படைக்கப்பட்டுள்ளது. எரியும் விளக்கில் விரலை நீட்டி நீட்டி எடுத்தால் ஒன்றும் செய்யாது. தொடர்ந்தும் வைத்துக் கொண்டிருந்தால் தான் சுட்டுப் பொசுக்கும் வாயால் நெருப்பை ஊதி ”இது ஒரு சாகசம் மட்டுமே” என செய்து காட்டும் இளம் பெண் மற்றும் இளைஞர் இருக்கின்றார்கள்.

கிராமத்துப் பெண்கள் கூட ஓர் அடுப்பிலுள்ள தீக்கங்கை ஒரு கையால் எடுத்து மறு அடுப்பில் சர்வசாதாரணமாகப் போடுவதை அவதானிக்கலாம். வெப்பத்தைத் தாங்கும் ஆற்றலுள்ள உள்ளங்கைகளையும் உள்ளங்கால்களையும் நெருப்பில் தொடர்ந்து வைத்துக் கொண்டிருந்தால் தான் பொசுக்குமே தவிர, நெருப்பில் வைத்து வைத்து எடுத்தால் அல்லது வேகமாக நடந்தால் சில நிமிடங்கள் தாக்குப் பிடிக்க முடியும். இதன் காரணமாகத்தான் கடவுள் மறுப்பாளர்கள் இதைச் சர்வசாதாரணமாகச் செய்து காட்டி, இதற்கும் கடவுள் பக்திக்கும் சம்பந்தம் இல்லை என்று பிரசாரம் செய்கின்றனர்.
முஸ்லிம் சமூகத்திலுள்ள சில அறிவீனர்கள் இந்த பிற மத தீமிப்புக் கலாச்சாரத்திற்கு ஆட்பட்டுள்ளனர். அதனால், இஸ்லாத்தில் இல்லாத கர்பலா தினத்தில் தீ மிதிப்பையும் ஏற்படுத்தியுள்ளனர்.
நெருப்பு வணக்கம் பாரசீகத்தை தலமாகக் கொண்டுள்ளமையினால், ஷீஆயிஸமும் பாரசீகத்தைத் தலமாகக் கொண்டு துளிர்விட ஆரம்பித்தது. அதனால், ஷீஆயிஸத் தாக்கம் காரணமாக சிலர் தீமிக்கும் கலாச்சாரத்தைப் பின்பற்றி வருகின்றனர்.
பருவ வயதுப் பெண்கள் சிலர் தனக்கு நல்ல கணவன் அமைந்தால் முஹர்ரம் பத்தாம் நாள் தீக்குளிப்பதாக நேர்ச்சை செய்து, மாப்பிள்ளை கிடைத்தவுடன் வயதுப் பெண்ணும் அவள் தாயாரும் முஹர்ரம் மாதப் பஞ்மாவுக்கு வந்து தீக்குளிப்பு நடத்துகின்றனர்
.அதே போல் கோயில் திருவிழாவில் தீமிதிப்பு நடைபெறுவது போன்று, முஹர்ரம் பத்து அன்று ஷீஆயிஸவாதிகள் தீமிதிக்கும் பழக்கத்தையும் நடை முறைப்படுத்திவருகின்றனர்.

முஹர்ரம் பத்தில் தீ மிதிக்கும் முஸ்லிம்கள்(!?)

முஹர்ரம் பத்து அன்று கர்பலாவில் ஹூஸைன் (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இதற்குத் துக்கம் அனுஷ்டிப்பதாக இவர்கள் நினைக்கின்றனர். தமது பாவம் இதன் மூலம் நீங்குவதாகவும் எண்ணுகின்றனர்.

ஒருவருடைய சுமையை மற்றவர்கள் சுமப்பது என்ற நம்பிக்கை கிறிஸ்துவ மதத்திலுள்ள கொள்கை. இஸ்லாம் அதற்கு எதிரான கருத்தை முன்வைக்கின்றது.
         
وَلاَ تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى6:164  
ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க மாட்டார்'அல் குர் ஆன் (6 : 164)
தீ மிதித்தல் ஓர் அந்நிய கலாச்சாரம். இதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது
எனினும், அறியாமையின் காரணமாகச் செய்து வருகின்றனர். எல்லோராலும் செய்ய முடியுமான சாதாரண ஒரு விடயத்தை மதச் சாயம் பூசி அசாதாரண ஒரு விடயம் போல் காண்பிக்கின்றனர்.
கடவுள் அருளால்தான் இதைச் செய்கின்றனர் என்று இவர்கள் நம்பினால், தீயில் நடக்காமல் ஒரு நிமிடம் நின்று காட்ட வேண்டும். அல்லது பத்து வினாடிகள் உட்கார்ந்து காட்ட வேண்டும். இதற்கு தீ வணங்கிகள் முன்வருவார்களா?  
ஒருபோதும் முன்வரமாட்டார்கள்.  இதிலிருந்தே இது ஒரு ஏமாற்றுவேலை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.   
மூடநம்பிக்கைகளை ஒழித்து, இஸ்லாத்தின் இளம் நிழலில்அனைத்துத் துறைகளையும் தழுவிய  ஒரு சமூக  மாற்றம் தேவை என்பதற்காக  இதனையும் இங்கு பதியவைத்திருக்கின்றோம்.

Saturday, January 14, 2012

மதம் அறியாமையின் சின்னமா?

எம்.ஏ.ஹபீழ் ஸலபி
 
 மதம் அறியாமையின், அவநம்பிக்கையின் சின்னமாகவும், மதத்தின் பக்கம் எடுத்துவைக்கின்ற ஒவ்வொரு அடியும் பிற்போக்குத்தனத்தின் பக்கம் எடுத்துவைக்கப்படுகின்ற அடியாகவும் கருதப்படுகின்ற ஒரு நிலையை நாம் இன்று சந்திக்கின்றோம்.

மதத்திற்கு எதிராக எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு அடியும் முன்னேற்றத்தின் பக்கம் எடுத்து வைக்கப்படுகின்ற அடியாகவும் கருதுவதற்கும், மதம் என்றால் அபின் – போதை, கடவுள் இல்லை. கற்பித்தவன் முட்டாள், வணங்கியவன் காட்டுமிராண்டி என்றெல்லாம் ஆவேசத்துடன் வீர முழக்கமிடுவதற்கும் காரணமுண்டு,

அறிவுக்கு ஒவ்வாத ஜீரணிக்க முடியாத முரண்பாடுடைய கோட்பாடுகள், கல்லையும் மண்ணையும் மரத்தையும் செருப்பையும் நெருப்பையும் வணங்கும் பல தெய்வக் கொள்கையும் அதன் அடிப்படையிலான தீண்டாமை, இனமாச்சாரிய மதங்களும் அதில் காணப்படும் மூட சடங்கு சம்பிரதாயங்களும், மதப் போதகர்களின் பண்பற்ற தன்மைகளும் உலக சுகபோக படாடோப வாழ்க்கையுமே காரணமாக அமைந்தன.

இன்று உலகின் வியாபிதம் பெற்ற மதங்களாக கருதப்படும் மதங்களின் அறிவியல் முரண்பாட்டுத் தன்மை, மூட நம்பிக்கை சிலவற்றை மட்டும் இங்கு தருகின்றேன்.

பழைய ஏற்பாடு ஆதியாகமத்தின் முதல் அத்தியாயத்தின் முதல் இரண்டு வசனங்களை முதலில் நோக்குவோம்.

1.         ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்
2.         பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. (without form & void) ஆழத்தின் மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்.

உலகம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் எங்கும் இருள் மயமாக இருந்தது என்று பைபிள் - பழைய ஏற்பாடு ஆரம்பிக்கிறது. 'இதைப்பற்றி நான் ஒன்றும் கூற விரும்பவில்லை' என மாரிஸ் புகையில் கூறுகிறார். ஆனால் ஆரமபத்திலேயே நீர் காணப்பட்டது என்பதை விஞ்ஞானிகள் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். ஆரம்பத்தில் ஒரு புகை மண்டலமாக இருந்துதான் இப்பிரபஞ்சம் வடிவம் பெற்றிருக்க வேண்டும் என்பது அறிவியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.

'(அல்லாஹ்) ஆகாயத்தின் பால் திரும்பினான்,
அது ஒரு புகையாக இருந்தது' (அல்குர்ஆன் 41:11)

புகை மண்டலமாக உருவாவதற்கு முன்னர், தன்ணீர் - ஜலம் - தோன்றியிருக்க முடியாது. அடுத்தது ஆதியாகம் மூன்றிலிருந்து ஐந்தாவது வாக்கியம் வரை நோக்குவோம்.

3. தேவன் வெளிச்சம் உண்டாகக் கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று
4.  வெளிச்சம் நல்லது என தேவன் கண்டார்
5. வெளிச்சத்தையும், இருளையும் தேவன் வௌ;வேறாகப் பிரித்தார். தேவன் வெளிச்சத்திற்கு பகல் என்று பெயரிட்டார். இருளுக்கு இரவு எனப் பெயரிட்டார். சாயங்காலமும், விடியக்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.

இந்தப் பிரபஞ்சத்திற்கு வெளிச்சத்தைக் கொடுக்கக்கூடியது இப்பிரபஞ்சத்திலுள்ள கிரகங்களும் நட்சத்திரங்களும் தான்.

வானவெளியிலுள்ள 'வெளிச்சங்கள் எல்லாம்' நான்காம் நாள் தான் படைக்கப்பட்டதாக ஆதியாகமத்திலுள்ள 14ம் வசனம் கூறுகிறது.

இரவிலிருந்து பகலைப் பிரிப்பது, பூமிக்கு வெளிச்சம் கொடுப்பது என்பதெல்லாம் இந்த 14ம் வசனத்தில்தான் கூறப்படுகிறது.

எனவே முதல் நாளே வெளிச்சத்தைப் பிரஸ்தாபிப்பது வேடிக்கையான விடயம் என அறிவுலகம் பைபிளைத் தூற்றுகிறது.

ஏனெனில் வெளிச்சத்திற்கு மூலமான கிரகங்கள் சூரியன் சந்திரன் மூன்று நாட்கள் கழித்தே படைக்கப்பட்டன என அவ்வேதமே(!) கூறுகிறது.

முதல் நாளே 'சாயங்காலமும், விடியல் காலமும்' பற்றிக் கூறப்பட்டிருப்பது முழு கற்பனையே என நவீன ஆய்வாளர் மாரிஸ் புகையில் கூறுகிறார்.

பூமியையும் படைத்து அத்துடனே ஏனையவற்றையும் சூரியனையும் படைத்து இரண்டையும் சில விதிகளில் இயங்க விட்டிருந்தால்தானே விடியங்காலததையும் சாயங்காலத்தையும் காணமுடியும்!

இதே போன்று 17ம் நூற்றாண்டில் உலகம் உருண்டை என்றதற்காக கலிலியோவைத் தூக்கிலிட்ட அதே வேளை கோர்டோவா பல்கலைக் கழகத்திலே உலகப்படத்தை உருண்டை வடிவில் ஆய்வு மூலம் சமைத்து உருட்டி உருட்டிப் பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார்கள் முஸ்லிம் அறிஞர்களும் விஞ்ஞானிகளும்.

கிறித்தவ திருச்சபைகள் மக்களுக்கு மத்தியிலே மூடத்தனத்தையும், அறியாமையையும் பரப்பின.விஞ்ஞானிகளுக்கு எதிராக சித்திரவதை முகாம்களை வைத்து கொடுமைப்படுத்தின. விஞ்ஞானிகளின் ஒவ்வொரு அறிவார்ந்த ஆய்வு முயற்சிகளுக்கும் அவை எதிராக நின்றன.

ஏசு கிறிஸ்து பிறந்த பூமி சூரியனைச் சுற்றுவதா? சூரியன் தான் பூமியைச் சுற்ற வேண்டும். ஆகவே பூமி தட்டையானது என்று கூறி, யாராவது ஏசு நாதர் பிறந்து பூமி சுற்றுகிறது என்று சொன்னால் நாக்கைத் துண்டிப்போம் என்று மிரட்டியது, கிருஸ்தவத் திருச்சபை.

இந்த அறியாமையை, மூடத்தனத்தை, அறிவியலைத் தண்டித்த மதத்தை நவீன ஆய்வாளன் என்ன செய்வான்? திட்டவே செய்வான்.

கிறிஸ்தவ திருச்சபையும், பாதிரிமார்களும் விஞ்ஞானத்திற்கும் அறிவியலுக்கும் எதிராக மேற்கொண்ட வன்கொடுமைகளைப் பார்த்த அதிக ஆய்வாளர்கள் நாஸ்திகர்களாக மாறிவிட்டார்கள்.

திருக்குறள்

திருக்குறளை உலகப் பொதுமறையாக்க வேண்டும். அதனால் தான் உலக மாந்தர்க்கு சுபட்ச வாழ்விற்கும், மத நல்லிணக்கத்திற்கும் வழிகாட்ட முடியும் என்ற கோசங்கள் உரத்து எழுப்பப்பட்டு வருகிறது. திருக்குறள் மனிதக் கற்பனைதான் என்பதற்கு ஒரு அறிவியல் முரண்பாட்டைத் தருகின்றேன்!

மனிதன்  விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்றுவந்துவிட்டான்.

ஆனால், பல மதத்தவர்களும் சிந்தனைபூர்வமான பகுத்தறிவு வாதிகளும் திருக்குறளை ஒரு நல்ல போதனையாகக் கருதும் போது அது விண்வெளிக்குச் செல்ல முடியாது என்கிறதே...?

காதலன் காதலி அரிதாகச் சந்திப்பதை விளக்கப் புகுந்த வள்ளுவன் பின்வருமாறு கூறுகிறார் :

'கண்டது மன்னும் ஒரு நாள் அலர்
மன்னும் திங்களைப் பாம்பு கொண்டட்டு'.

எவ்வளவு பிரமாண்டமான சந்திரனை பாம்பு விழுங்கும் என்பது எவ்வளவு முரணானது. அறிவு ஏற்காதது.

வள்ளுவன் சந்திரனை கடையில் விற்கப்படும் சிறு ரொட்டித் துண்டு என எண்ணிவிட்டார் போல் எண்ணத் தோன்றுகிறது.

அதேபோல் இஸ்லாத்தை இந்துக்கள் தற்காலத்தில் அதிகமதிகம் விமர்சித்து வருகின்றனர். நான் இந்து மதத்தை அறிவியல் ரீதியில் மட்டுமல்ல ஆத்மீக ரீதியில் இன்னும் பல கோணங்களில் விமர்சிக்கப் புகுந்தால் இந்த ஆய்வு போன்று இன்னும் பல விமர்சன நூல்கள் எழுதிவிடலாம். ஆதலால் தொட்டு விளக்கிச் செல்கின்றேன், ஏனெனில் கிறிஸ்தவர்களாலும் பகுத்தறிவுவாதிகளாலும் இஸ்லாத்தின் மீது சுமத்துகின்ற அறிவியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளே உறுதியான மறுப்புகளை தரவேண்டியுள்ளதால் இவைகள் சுருக்கப்படுகின்றன.

'பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா' என்ற வாசகத்தை நோக்கும் போது, இந்து மதவாதிகளின் நம்பிக்கைப்படி சிவபெருமான் என்கின்ற அவர்களுடைய கடவுளின் தலையில்தான் சந்திரன் இருப்பதாகக்கூறப்படுகிறது.

சுந்திர கிரகணம் ஏற்படுவது பரமசிவனின் கழுத்தில் இருக்கின்ற பாம்புக்கு கோபம் வருவதால் அவரின் தலையில் இருக்கின்ற சந்திரன் பாம்பினால் விழுங்கப்படுகிறது என்ற காரணம் கற்பிக்கப்படுகிறது.

ஒரு மனிதனால் சமைக்கப்பட்ட சிலையான சிவபெருமானின் தலையில் இவ்வளவு பிரமாண்டமான சந்திரன் இருக்க முடியுமா? அதனை பாம்புதான் விழுங்க இயலுமா?

Monday, December 26, 2011

கிறிஸ்மஸ் - மறைக்கப்பட்ட உண்மைகள்

‘நத்தார் பண்டிகை’ அல்லது ‘கிறிஸ்மஸ்’– Christmas – என அழைக்கப்படும்
‘இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாள் விழா’ ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25
அன்று பெரும்பாலான கிறிஸ்த்தவர்களால் கொண்டாடப்படுகின்றது. கிழக்கு
மரபுவழி திருச்சபையினர் என்கின்ற கிறிஸ்த்தவ பிரிவினரால் ஜனவரி 7ம் நாள்
கொண்டாடப்படுகின்றது.

பிறந்த நாள் கொண்டாட்டம் அறிவுபூர்வமானதா? கிறிஸ்த்தவ நம்பிக்கையின்படி
இறைமகனுக்கே(?) பிறந்தநாளா? என்கின்ற வாதப்பிரதிவாதங்களுக்குள் நுழையாமல் கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் 25ல் கொண்டாடப்படுவது சரிதானா? என்பதை வரலாற்று ரீதியாகவும், பைபிள் மற்றும் திருக்குர்ஆன் ஒளியிலும்
ஆய்வுக்குட்படுத்துவோம்.

வரலாற்று ஒளியில் கிறிஸ்மஸ்…

கிறிஸ்மஸின் தோற்றம்
ஆரம்ப கால கிறிஸ்த்தவ சமுதாயத்தில் கிறிஸ்மஸ் உள்ளிட்ட எந்தவொரு
பிறந்தநாள் கொண்டாட்டங்களும் கொண்டாடப்படவில்லை. கிறிஸ்மஸ் நாள் மரபுவழி வருவதேயன்றி இயேசுவின் உண்மையான பிறந்தநாள் அல்ல. மேலும், கிறிஸ்மஸ் மரம், கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் கேக் போன்ற அனுஸ்டானங்கள் புராதன பாபிலோனிலிய மக்களின் கலாசாரம் என என்சைக்ளோபீடியா -The world book Encyclopedia – The Encyclopedia of Religion and Ethics – the
Encyclopedia Americana – கூறுகின்றது.

விக்கிபீடியா தருகின்ற தகவலின் அடிப்படையில், இத்தாலி போன்ற நாடுகளில்
காணப்பட்ட ‘சட்டர்நாலியா’ (சடுர்நலியா பண்டிகை) – Saturnalia –மற்றும்
உரோமர்களால் டிசம்பர் 25ல் கொண்டாடப்பட்டு வந்த வெற்றி வீரன் சூரியன்
(Sol- Indicts) என்றழைக்கப்பட்ட சூரியக் கடவுளின் பிறந்தநாளான நட்டாலிஸ்
சோலிஸ் இன்விக்ட்டி- Natalis Solis Invicti – (சோல் இன்விக்டுஸ்)
என்கின்ற குளிர்கால பண்டிகைகளை தழுவியே கிறிஸ்மஸ் தோன்றியதாக
கூறுகின்றது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில்,கிறிஸ்த்தவ எழுத்தாளர்கள் இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள் உதயத்தோடு ஒப்பிட்டுள்ளதையும்,
இயேசு சோல்-இன் சூரியக்கடவுளாக சித்தரிக்கப்பட்டுள்ளதையும், சிப்ரியன் –
Cyprian- என்கின்ற கிறிஸ்த்தவ மதபோதகரின் “எவ்வளவு அதிசயச் செயல் சூரியன்
பிறந்த நாளில்…. கிறிஸ்த்துவும் பிறந்தது….” “ Oh ,how wonderfully acted
Providence that on that day on which that Sun was born . . . Christ
should beborn…” என்கின்ற வாக்குமூலத்தையும்,
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இதனை முழுக்க முழுக்க உறுதிப்படுத்துகின்ற
“சோல் இன்விக்டுஸ்- கிறிஸ்மஸின் தொடக்கத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு
செய்துள்ளது” என்கின்ற கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தின் வாக்குமூலம்
போன்ற சான்றுகளை கோடிட்டு காட்டுவதன் மூலம், சூரியக் கடவுளின் பிறந்தநாள்
உள்ளிட்ட குளிர்கால கொண்டாட்டங்களை அடிப்படையாக வைத்து மிகமிக பிற்பட்ட காலத்தில் தோன்றிய ஒரு பண்டிகையே கிறிஸ்மஸ் என்கின்ற கருத்தை உறுதி செய்கின்றது.

‘செக்டுஸ் ஜுலியஸ் அப்ரிகானுஸ்’ – Sextus Julius Africanus – என்கின்ற
மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்த்தவ எழுத்தாளரால் இயேசு கிறிஸ்து
டிசம்பர் 25ல் பிறந்தார் என்கின்ற கருத்து வரலாற்றில் முன்
வைக்கப்படுகின்றது. இதற்கு ‘ஒரிஜென்’- Origen – போன்ற ஆரம்பகால முக்கிய
கிறிஸ்த்தவ மதகுருக்களே மிககடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். கிறிஸ்த்தவ
இறையியல் அறிஞரான ஒரிஜென்,“பார்வோன்- pharaoh – அரசனைப் போன்று இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாளை கொண்டாடக்கூடாது என்றும், பாவிகளே அவ்வாறு செய்வதாகவும், புனிதர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்” என்றும் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டார்.

ரோமப் பேரரசன் ‘கான்ஸ்டான்டின்’ – Constantin – காலத்தில் இடம் பெற்ற
நைசியன் திருச்சபை பிரகடனத்தில் -Declaration of Nicean Council –
சூரியக்கடவுளின் பிறந்தநாள் -டிசம்பர் 25- இயேசுநாதரின் பிறந்தநாளாகவும்,
சூரியக் கடவுளின் பெயரால் உரோமர்கள் கொண்டாடிய கொண்டாட்டங்கள்-
கிறிஸ்த்துவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களாகவும் அறிவிக்கப்பட்டது.
இக்கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் ஒரேகடவுள் மூன்று நிலைகளில் உள்ளார்
என்கின்ற கொள்கையை அடிப்படையாக கொண்ட கிறிஸ்த்தவ பிரிவினரால் கி.பி.378ல் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது. கி.பி. 379ல் கொன்ஸ்தாந்துநோபலில் –
Constantinople – அறிமுகப்படுத்தப்பட்ட கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் பெரும்
சர்ச்சையை தோற்றுவித்ததாக எட்வர்ட் கிப்பன் – Edward Gibbon -என்கின்ற
ஆய்வாளர்குறிப்பிடுகிறர். வழக்கொழிந்து போன கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்
கொன்ஸ்தாந்துநோபலில் கி.பி. 400 காலப்பகுதியில் ‘யோன் கிறிசொஸ்டம்’ -John
Chrysostom- என்கின்ற கிறிஸ்த்தவ போதகரால் மீண்டும்
உயிர்ப்பிக்கப்படுகின்றது. மேலும், பேரரசன் சார்லிமெஜி -Charlemagie-
என்பவன் கி.பி 800ம் ஆண்டு கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டிக்கொண்டதாலும்,
கி.பி. 1066 ல் முதலாவது வில்லியம் (இங்கிலாந்து)- William I of England–
மன்னன் கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டிக்கொண்டதாலும் கிறிஸ்மஸ்
கொண்டாட்டங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகின்றது. மத்திய கால
கிறிஸ்த்தவ சீர்திருத்த திருச்சபைகள் “கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்-
பாப்பரசின் ஆடம்பரம்” என்று விமர்சித்தனர். தூய்மைவாதிகள் -Puritans-
எனும் கிறிஸ்த்தவ பிரிவினர் “கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை விலங்கின்
(சாத்தானின்) கந்தல் துணி” என்று மிகக் கடுமையாக விமர்சித்தனர். மேலும்
கி.பி. 1647ல் தூய்மைவாத கிறிஸ்த்தவ மறுசீரமைப்பினர் எனும் கிறிஸ்த்தவ
பிரிவினர் முதலாம் சார்ல்ஸ் மன்னனின் உதவியோடு இங்கிலாந்தில் கிறிஸ்த்தவ
கொண்டாட்டங்களை தடைசெய்தனர். இன்றும் கூட சில அங்கிலிக்கன் திருச்சபை
கிறிஸ்த்தவ போதகர்களும், ஆர்மினியர்களும், செர்பியர்களும் கிறிஸ்மஸ்
கொண்டாட்டங்களை அங்கீகரிப்பதில்லை..         
                                                                இன்ஷாஅல்லாஹ் தொடரும். . .

Monday, October 24, 2011

தீபாவலி பற்றிய சில உண்மைகள்


இன்று இந்துக்கள் என அழைத்துக் கொள்ளும் பலர், தீபாவளியை வணிக மயப்படுத்தப் பட்ட பண்டிகையாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தீபாவளி எதற்கு கொண்டாட வேண்டும் என்று, ஆயிரம் வருடங்களாக கூறப்பட்டு வரும் கதையை இப்போதும் தம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். "மக்களுக்கு கொடுமை செய்த நரகாசுரனை கிருஷ்ணன் அழித்த நாள்." என்பதில் மறைந்துள்ள அரசியலை புரிந்து கொள்ள முடியாத படி மதம் கண்ணை மறைக்கின்றது. நரகாசுரன் யார்? எந்த மக்களை கொடுமை செய்தான்? அவன் மரணத்தை எதற்காக கொண்டாட வேண்டும்?
புராணங்கள் என்பன சரித்திரம் எழுதப்படாத காலங்களில் நடந்த சம்பவங்களை, கற்பனை கலந்து கூறப்படும் கதைகள் ஆகும். , இது போன்ற கதைகளை குழந்தைகளுக்கு கூறுவதன் மூலம் அடுத்த சந்ததிக்கு கடத்துவார்கள். தீபாவளி குறித்த கதையும் அது போன்றதே.

மேலும் தீபாவளி குறித்து இரு மாணவர்களுக்கிடையே நடந்த அறிவார்ந்த உரையாடல் 

ராமா :தீபாவளி என்பது உலகத்துக்கு கேடு விளைவித்த ஒரு அசுரன் கடவுளால் கொல்லப்பட்ட நாளை மக்கள் கொண் டாடுவதாகும். அதை நீயும் கொண்டாட லாம். இப்பொழுது வெள்ளையன் ஒழிந்த நாளை நாம் சுதந்தர நாளாகக் கொண் டாடவில்லையா? அதுபோல.

டேவிஸ்: அப்படியா? அந்த அசுரன் யார்? அவன் எப்படி உலகுக்குக் கேடு செய் தான்? அந்தக் காலத்தில் அணுக்குண்டு இருந்திருக்காதே? இந்தக் காலத்தில் அணுகுண்டு வைத்திருப்பவனையும் இன்னும் மக்கள் சமுதாயத்துக்கு என்னென்னவோ கேடு செய்கிறவர் களையும்பற்றி நாம் ஒன்றுமே பேசுவ தில்லை; அப்படியிருக்க அந்த அசுரன் யார்? அவனென்ன கேடு செய்தான்?

ராமா: அந்த அசுரன் பெயர் நரகாசூரன். அவன் பூமியிலிருந்து பிறந்தவன். அவன் தகப்பன் மகா விஷ்ணு. அவன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்து தேவர்களின் பெண்களுக்கும் தொல்லை கொடுத் தான். அதனால் மகாவிஷ்ணுவும் அவர் மனைவியும் சேர்ந்து அவனைக் கொன்று விட்டார்கள்.

இனி எவரும் தேவர்களுக்குத் தொந்தரவு கொடுக் கக் கூடாது என்பதை மக்களுக்கு ஞாபகப்படுத்துவதற்காக அவன் செத்த நாளைக் கொண்டாடுவது தெரிந்ததா? இதுதான் தீபாவளித் தத்துவம்.


டேவிஸ்: தெரிந்தது. ஆனால் அதை விளக்கிக் கொள்ள வேண்டுமென்று என் மனம் ஆசைப்படுகின்றது. அதா வது அவன் மகா விஷ்ணுவுக்கும் பூமிக் கும் எப்படிப் பிறக்க முடியும்? பூமியானது மண், கல் உருவத்தில் இருந்தே மகாவிஷ்ணுக்கு பூமியுடன் எப்படி கலவி செய்ய முடிந்தது? பூமி எப்படி கர்ப்பம் தரிக்கும்? அதற்கு எப்படி பிள்ளை பிறக்கும்? எனக்குப் புரியவில்லையே?

ராமா: அட பயித்தியக்காரனே! மகாவிஷ்ணு நேராகவா போய்க் கலவி செய்வார்? அதற்கு அவருக்கு மனை விகள் இல்லையா? ஆதலால் அவர் நேராகக் கலவி செய்யவில்லை. மகாவிஷ்ணு பன்றி உருவமெடுத்தார்.

டேவிஸ்: பொறு! பொறு! இங்கே கொஞ்சம் விளக்கம் தேவை மகா விஷ்ணு பன்றி உருவம் ஏன் எடுத்தார்?

ராமா: அதுவா! சரி சொல்கிறேன் கேள். இரண்யாட்சதன் என்று ஒரு இராட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலுக்குள் போய் ஒளிந்து கொண்டான்.


டேவிஸ்: தொல்லை ஒன்றுமில்லை, உன் சங்கதிதான் என் மூளைக்குத் தொல்லை கொடுக்கிறது. தலை சுற்றுகிறது அதாவது ஒரு இராட்சதன் அப்படியின்னா என்ன? அது கிடக் கட்டும். அவன் பெயர் இரண்யாட் சதன். அதுவும் போகட்டும். அவன் கதையை அப்புறம் கேட்போம். அந்த இராட்சதன் பூமியை எப்படி சுருட் டினான்? பூமிதான் பந்து போல இருக் கிறதே? அவன் அதை சுருட்டுவ தானால் ஒரு சமயம் உருட்ட முடியுமே தவிர சுருட்ட முடியாதே? அதுவும் போகட்டும் சுருட்டினான் என்கிறாய். சுருட்டினான் என்றே வைத்துக் கொள்வோம்.
சுருட்டினானே அவன் சுருட்டும் போதுதான் எங்கே இருந்து கொண்டு சுருட்டினான்? சுருட்டிக் கொண்டு ஓடினானே எதன் மேல் நடந்து ஓடினான்? ஆகாயத்தில் பறந்து கொண்டே சுருட்டியிருக்கலாம். ஆகா யத்தில் பறந்து கொண்டே ஓடியி ருக்கலாம். கருடன் மகாவிஷ்ணு வையும், அவன் பொண்டாட்டியையும் தூக்கிக் கொண்டு பறப்பதுபோல் பறந்திருக்கலாம்.
ஆனால் அவன் சமுத்திரத்துக்குள் ஒளிந்து கொண்டான் என்கிறாயே அந்த சமுத்திரம் எதன்மேல் இருந்தது? பூமியின்மேல் இல்லாமல் அதுவும் ஆகாயத்தில் தொங்கிக் கொண்டோ அல்லது பறந்து கொண்டோ இருந்தது என்றால் சமுத்திரம் தண்ணீர் ஆயிற்றே அது ஒழுகிப் போய் இருக்காதா? அப் போது அடியில் ஒளிந்துகொண்டிருப் பவன் தொப்பென்று கீழே பூமியுடன் விழுந்திருக்க மாட்டானா? அல்லது அது வேறு உலகம், இது வேறு உலகமா? நமக்கு ஒன்றும் புரிய வேயில்லையே? இதை எனக்கு புரிய வைக்க வேண்டும். நானும் நீயும் பி.ஏ. 2ஆவது வருஷம் பூகோளம், வான நூல், சைன்ஸ் படித்தவர்கள். ஆதலால் இந்த சந்தேகம் வருகிறது. நாம் படிக்காத மடையர்களாய் இருந்தால் குற்றமில்லை; சற்று விளங்கச் சொல் பார்ப்போம்.
ராமா: இதெல்லாம் பெரியோர்கள் சொன்ன விஷயம் சாஸ்திரங்களில் உள்ள விஷயம், மத தத்துவம்! ஆனால் இவைகளை இப்படியெல்லாம் கேட்கக் கூடாது.

டேவிஸ்: நீ என்னப்பா இப்படி பேசறே, பி.ஏ. படிக்கிறவனாகத் தெரியவில்லையே! பூமிக்குப் பிறந்தான் என்கிறாய் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போனான் என்கிறாய், எப்படிப் பிறந்தான்? எப்படித் தூக்கிக் கொண்டு எப்படி போனான் என்றால் கோபித்துக் கொள்கிறாய்! இந்தக் கதையைப் பண்டிகையாக வைத்து கோடிக்கணக்கான மக்கள் கொண் டாடுகிறார்கள் என்கிறாய். சர்க்கார் இதற்கு லீவு விடுகிறது. பல லட்சம் பிள்ளைகள் அன்று படிப்பதைவிட்டு தெரு சுற்றுகிறதுகள்! இவ்வளவு பெரிய சங்கதியைக் கேட்டால் என்னை கருப்புச் சட்டை என்கிறாய்.
ராமா: ஒளிந்து கொண்டதும் பூமியில் இருந்தவர்களெல்லாம் போய் மகா விஷ்ணுவிடம் முறையிட்டார்கள்.
டேவிஸ்: இரு! இரு! பூமியைச் சுருட்டினபோது பூமியில் இருந்தவர்கள் ஓடிவிட்டார்களா? நோட்டீஸ் கொடுத்து விட்டுத் தான் சுருட்டினானோ?
ராமா: நீ என்னப்பா சுத்த அதிகப் பிரசங்கியாக இருக்கிறே ஓடிப் போய் முறையிட்டார்கள் என்றால் எப்படிப் போனார்கள் வெங்காயம் வீசை என்ன விலை கருவாடும் கத்தரிக்காயும் குழம்புக்கு நல்லாயிருக்குமோ? என்பது போன்ற அதிகப் பிரசிங்கித்தனமான கேள்விகளை முட்டாள்தனமாகக் கேட் கிறாயே?
டேவிஸ்: இல்லை, இல்லை கோபித்துக் கொள்ளாதே சரி! சொல்லித் தொலை! முறையிட்டார்கள்! அப்புறம்?
ராமா: முறையிட்டார்கள். அந்த முறையீட்டுக்கு இரங்கி பகவான் மகா விஷ்ணு உடனே புறப்பட்டார். சமுத்திரத் தினிடம் வந்தார்.
பார்த்தார் சுற்றி. எடுத்தார் பன்றி அவதாரம், குதித்தார் தண்ணீரில். பாய்ந்தார் நிலத்துக்கு, கண்டார் பூமியை தன் கொம்பில் அதை குத்தி எடுத்துக் கொண்டு வந்து விரித் தார் பூமிப் பாயை; புரிஞ்சுதா.
டேவிஸ்: புரியாட்டா கோபித்துக் கொள்கிறாய் அதிகப் பிரசங்கி என்கிறாய் சரி புரிந்தது. விரித்தார் பூமியை பிறகு என்ன நடந்தது?
ராமா: பிறகா; பூமியை விரித்தவுடன் அந்த பூமிக்கு ஒரு சந்தோஷம் ஏற்பட்டது. ஒரு குஷால் உண்டாயிற்று. பூமி அந்தப் பன்றியைப் பார்த்து. அந்தப் பன்றி இந்தப் பூமியைப் பார்த்தது அந்தச் சமயம் பார்த்து மன்மதன் இரண்டு பேரையும் கலவி புரியச் செய்து விட்டான். அப்புறம் சொல்ல வேண் டுமா, கலந்தார்கள் பிறந்தது பிள்ளை.
டேவிஸ்: சரி இங்கே என் சொந்த சங்கதி கேட்கிறேன்; கோவிச்சுக்காதே
ராமா: சரி கேள்.
டேவிஸ்: வராகம் என்பது பன்றி அது ஒரு மிருகரூபம் சரிதானா?
ராமா: சரி.
டேவிஸ்: பூமி கல் மண் உருவம் சரிதானா?

ராமா: சரி.
டேவிஸ்: இது இரண்டும் எப்படிக் கலவி புரியும்? எப்படிக் கருத்தரிக்கும்?
ராமா: பாத்தியா பாத்தியா இதுதான் போக்கிரித்தனமான கேள்வி என்பது கடவுள் பார்த்து எப்படி வேண்டுமானாலும் செய்யலாமல்லவா?
டேவிஸ்:  இதைக் கேட்டால் போக்கிரிதனமான கேள்வி என்கிறாய். சரி. இதைபற்றி பிரின்ஸ்பாலைக் கேட்கலாம். அப்புறம் அந்தப் பிள்ளை என்ன ஆச்சுது?
ராமா: அந்தப் பிள்ளைதான் நரகாசுரன்.
டேவிஸ்: இந்தப் பெயர் அதற்கு யார்? இட்டார்கள் தாய் தந்தையர்களா?
ராமா: யாரோ அன்னக்காவடிகள் இட்டார்கள்? அதைப்பற்றி என்ன பிரமாத மாய் கேட்கிறாய், எனக்கு அவசரம் நான் போக வேண்டும் என்னைவிடு.
டேவிஸ்: சரி போகலாம் சீக்கிரம் முடி அப்புறம்?
ராமா: அந்த நரகாசூரன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்ததான். அவனை மகாவிஷ்ணு கொன்றார்.
டேவிஸ்: அடபாவி! கடவுளுக்குப் பிறந்தவனா, தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தான்? அப்படியென்றால் தேவர் கள் என்ன அவ்வளவு அயோக்கியர்களா?
ராமா: இல்லேப்பா. இந்த நரகா சூரனின் பொல்லாத வேளை, தேவர்கள் கிட்டே இவன் வாலாட்டினால் அவர்கள் சும்மா விட்டு விடுவார்களா?
டேவிஸ்: அதற்கு ஆக தகப்பன் மகனுக்கு புத்தி சொல்லாமல் ஒரே அடி யாகக் கொன்றுவிடுவதா?
ராமர்: அது இவர் இஷ்டம், அதைக் கேட்க நாம் யார்? தேவரனையர்கயவர் அவருந்தான் மேவன செய்தொழுகலான் என்று நாயனார் சொல்லி இருக்கிறார் ஆதலால் நாம் அது ஏன் இது ஏன் என்று கேள்வி கேட்கலாமா?
டேவிஸ்: சரி கொன்றார் அதற்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம்?
ராமா: அதைக் கொண்டாட வேண்டிய அவசியம் ஏன் என்றால் இனிமேல் எவனும் தேவர்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது என்பதற்காக அதை ஞாபகத்தில் வைப்பதற்கு அதை நினைவூட்டுவதற்கு நாம் அடிக்கடி கொண்டாட வேண்டியது என்பதுதான்.

டேவிஸ்: தேவர்கள் எங்கிருக் கிறார்கள்?
ராமா: வானதேவர்கள் வானத்தில் (மேல் உலகத்தில்) இருக்கிறார்கள்; பூ தேவர்கள் இந்தப் பூமியிலே இருக் கிறார்கள்.
டேவிஸ்: இந்த பூமியில் இருக்கும் தேவர்கள் யார்?

ராமா: அட முட்டாள்! அது கூடவா தெரியாது? அதுதான் பிராமணர்கள், பிராமணர்கள் என்றாலே பூதேவர்கள் தானே? அகராதியைப் பார்.
டேவிஸ்: பிராமணர்கள் என்பவர்கள் என்ன வகுப்பு?
ராமா: என்ன வகுப்பா நாங்கள் தான்!
டேவிஸ்: நீங்கள் என்றால், நீ அய்யங்கார், அய்யங்கார்தாசனா?
ராமா: நாங்கள் மாத்திரம் அல்ல அப்பா, நாங்களும் அய்யர், ஆச்சாரி யார், சாஸ்திரி, சர்மா, தீட்சதர் முதலி யோர்கள்.
டேவிஸ்: அப்படியெனில் பார்பனர் கள் யாவருமே பூதேவர்கள் என்கிறாய்?
ராமா: ஆமாம்! ஆமாம்! கல்லாட்டமா ஆமாம்!
டேவிஸ்: சரி, தொலைந்து போகட் டும். நீங்கள் தேவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். உங்களுக்குத் தொல்லை கொடுக்க அசுரர், ராட்சதர் ஒருவரும் இந்த உலகத்தில் இல்லையே? இங்கி ருப்பவர்களைப் பயப்படுத்த தீபாவளி கொண்டாட வேண்டுமா?
டேவிஸ்: ஓஹோ! அப்படியா? சரி, சரி. தீபாவளி என்பதன் தத்துவமும் இரகசியமும் தெரிந்து கொண்டேன். நன்றி வணக்கம்.

தீபாவளி பற்றி பெரியார் பார்வையில் சிறிய சுருக்கம்


1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாக பூமி கர்ப்பமுற்று நரகாசுரன் என்ற பிள்ளையையும் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசுர டனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனைக் கொல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகா சுரனுடன் போர்தொடுத்து அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந் தார்கள்.
10. இந்த மகிழ்ச்சி (நரகாசுரன் இறந்த தற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.
இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!
இந்த 10 விஷயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர் களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது.
பூமி தட்டையா? உருண்டையா?
தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது?
சுருட்டினால் தூக்கி கட்கத்திலோ, தலைமீதோ எடுத்துப் போக முடியுமா?
எங்கிருந்து தூக்குவது?
கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்?
விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்கவேண்டிய அவசியம் என்ன?
அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால், பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?
பூமி மனித உருவமா? மிருக உருவமா?
மனித உருவுக்கும், மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?
பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?
இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?
இவைகளைக் கொஞ்சமாவது தீபாவளி கொண்டாடும் - தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்கவேண்டாமா?
நரகாசுரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகித்ஜோஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மகாணத்து அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள்.

வங்காளத்தில் தேவர்களும், அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்? இவை ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும் நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்து வதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், நாம் ஆமாம் என்று சொல்லி கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவ தும் என்றால் இதை என்னவென்று சொல்வது?
சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!
பார்ப்பனர்களே உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால், இக்கதை எழுதின காலத்தில் பார்ப்பனர்கள் (ஆரியர்) எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்கவேண்டும். அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது ஈன நிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.
--------------------தந்தைபெரியார் - நூல்: “இந்துமதப்பண்டிகைகள்” பக்கம் 28-31



Sunday, October 24, 2010

அயோத்தியில் இராமர் பிறந்திருக்க முடியுமா?

அயோத்தியில் இராமர் பிறந்திருக்க முடியுமா



உத்தரபிரதேச மாநிலம் ஃபைசாபாத் மாவட்டத்திலுள்ள அயோத்தியில், சங் பரிவார் அமைப்புகளால் இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையை ஏற்றுக் கொண்டு, பாபர் மசூதி - இராமர் ஜென்ம பூமி வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், அங்கு இராமர் பிறந்திருக்க முடியுமா? அல்லது அங்கு இராமருக்கு கோயில் இருந்திருக்க முடியுமா? என்பது குறித்து ரகு வம்சத்தை எடுத்துக் காட்டி ஒரு எதிர் விளக்கத்தை தருகிறார் சத்தியமங்கலம் என். நாகராஜன்.

84 வயதாகும் திரு. எஸ்.என், நாகராஜன் பொதுவுடைமை இயக்கதில் நீண்ட காலம் பணியாற்றியவர். கீழை மார்க்சிய சிந்தையாளர். அதுமட்டுமின்றி, ஆழ்வார்களின் தென் கலை வைணவப் பின்னணியும், அதில் மிகுந்த ஈடுபாடும் கொண்டவர். இன்றைக்கு விவசாயத்தையும், சுற்றுச் சூழலையும் காப்பாற்ற தொடர்ந்து பணியாற்றி வருபவர். நமது நாட்டின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் அறிந்த ஒரு சீரிய சிந்தனையாளர்.


இவர் அயோத்தியில் இராமர் பிறந்திருக்க முடியாது என்று வாதிடுகிறார். அவருடைய வாதம் வருமாறு:


“அயோத்தி அரசன் தசரதனின் மனைவியான கோசலை, குசால இராஜ்யத்தின் இளவரசியாவார். இவரை தசரதன் கடத்திச் சென்றோ அல்லது கடி மனமோ (காந்தர்வ விவாஹம்) புரியவில்லை, முறைப்படியே மணம் புரிந்துள்ளார். எனவே, தொன்று தொட்டு இந்நாட்டில் நிலவிவரும் மரபுப் படி, நிறைமாத கர்பினியான ஒரு பெண், தனது தாய் வீட்டிற்குச் சென்று பிள்ளை பெறுவதைப்போல, தசரதனின் மனைவியான கோசலையும் தனது தாய் வீடான (இராஜ்யமான) குசால மன்னன் அரண்மனைக்குச் சென்று அங்குதான் இராமனை பிரசவித்திருக்க முடியும்.


எனவே, அயோத்தியில்தான் இராமன் பிறந்தார் என்பதற்கு அடிப்படையேதுமில்லை. எந்தப் புராணத்திலும் அதற்கான ஆதாரமும் இல்லை.


இரண்டாவதாக, அயோத்தி புண்ணிய பூமியா? என்ற கேள்வியும் உள்ளது. இராவணனின் பிடியில் இருந்து சீதையை காப்பாற்றி வந்த இராமன், அவளுடைய கற்பின் தூய்மையை நிரூபிக்க அக்னி பிரவேசம் செய்ய முற்பட்டபோது, இராமன் தடுக்கவில்லை. சீதை அக்னி பிரவேசத்தை நிறைவேற்றிய இடம் அயோத்தியாகும். இந்த விவரம் வால்மீகி இராமயணத்தில் உள்ளது. அக்னிப் பிரவேசத்தின் போது சீதையை அவளுடைய தாயான பூமிதேவி தன்னுள் எடுத்துக் கொண்டாள் என்று அனைத்துப் புராணங்களும் கூறுகின்றன.


இதில் குறிப்பிடத்தக்கது ரகு வம்சம். காளிதாசர் எழுதிய ரகு வம்சத்தில் அயோத்தி ஒரு புனித தலமாக சித்தரிக்கப்படவில்லை. அதை சீதை மறித்த பூமியாகவே காட்டுகிறார் காளிதாசர். ரகு வம்சத்தில் உத்தர காண்டம் மிக முக்கியமானது. அதில் இந்த விவரம் உள்ளது.


தனது மனைவி சீதை மீது இராமன் சந்தேகம் கொண்ட நிலையிலேயே, சீதையை தனது ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்கிறார் வால்மீகி. இராமனின் பிள்ளைகளான லவ, குசா இருவரும் வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில்தான் பிறந்தனர். அங்குதான் வளர்ந்தும் வந்தனர். அவர்கள் 6 வயதைக் கடந்த நிலையில் அவர்களை இலக்குவன் அயோத்திக்கு அழைத்து வருகிறார். அப்போது வால்மீகியும் உடன் வருகிறார்.


அப்போது லவ, குசா இருவரும் யாருக்குப் பிறந்தவர்களோ என்ற சந்தேகத்தை ஒருவன் எழுப்ப (வண்ணான் என்று கூறுகின்றனர்), சீதை அக்னி பிரவேசம் செய்ய முற்படுகிறார். அதை இராமன் தடுக்கவில்லை. சீதை அக்னி பிரவேசம் செய்த நிலையில், அவளுடைய தாயான பூமிதேவி சீதையை தன்னோடு அழைத்துக் கொண்டு பூமிக்குள் சென்று விடுகிறாள்.


தங்களது தாய் மறித்த இடத்தில் நாங்கள் வாழ் மாட்டோம் என்று கூறிவிட்டு, லவ, குசா இருவரும் அயோத்தியை விட்டு வெளியேறுகின்றனர். அவர்களோடு அயோத்தி மக்களும் வெளியேறி விடுகின்றனர். அத்துடன் அயோத்தியே காலியாகிவிடுகிறது.
அயோத்தியை விட்டு வெளியேறி, வேறொரு இடத்தில் வாழ்ந்துவந்த குசாவின் கனவில் வரும் அயோத்தியின் தேவதை, “உனது தந்தை ஆண்ட பூமி இன்று வனமாகிவிட்டது. அங்கு புலிகளும் மற்ற கொடிய விலங்குகளும் தான் வாழ்கின்றன. அங்கு நீங்கள் வந்து மீண்டும் அயோத்தியை புனர் நிர்மாணம் செய்யுங்கள்” என்று கூறியதா காளிதாசர் எழுதியுள்ளார்.


இந்த விவரத்தை ரகு வம்சத்தில் 13வது சர்க்கத்தில் காளிதாசர் வர்ணிக்கிறார். “அதேதரே சப்த ரகுப்பிரவீராக... என்று தொடங்குகிறது அந்த பாடல்.


பாபர் மசூதி இடிக்கப்பட்டப் பிறகு டெல்லியில் தீனதயாள் உபாத்தியாய ஆய்வு மையத்தில் ‘அக்டோபர் புரட்சியும் அதன் விளைவுகளும்’ என்ற தலைப்பில் பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்து, ஜே.டி.சேத்தி துவக்கி வைத்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு பேசியபோது இதை நான் தெரிவித்தேன். 13வது சர்க்கத்தை அப்படியே அங்கு நான் மனப்பாடமாக ஒப்பித்து விளக்கமும் அளித்தேன். அந்த நிகழ்ச்சியில் பின்னாளில் பிரதமராக வந்த ஐ.கே.குஜ்ரால், நேபாள நாட்டின் இந்திய தூதராக இருந்த பீமல் மிஸ்ரா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.பி.பர்தன், சுப்ரத்தா பானர்ஜி, இமிதியாஸ் அகமது, சுபாஷ் சந்திர போசின் சகோதரர் போஸ், பாரதிய ஜனதா கட்சியின் நானாஜி தேஷ்முக், எம்.எம்.ஜோஷி, கே.ஆர்.மசானி ஆகியோரெல்லாம் இருந்தனர். நான் கூறியதற்கு ஒருவரும் எதிர்க்கருத்து கூறவில்லை.


ரகு வம்சத்தில் உத்தர காண்டத்தில் கூறப்பட்டுள்ள விவரம் இது. ஆனால் கம்ப இராமாயணத்தில் இந்த உத்தரகாண்டம் பகுதியே இருக்காது. அதனை கவி கம்பர் தவிர்த்துவிடுகிறார். ஏனெனில் உத்தரகாண்டத்தைக் கூறினால், சீதை மறித்ததைக் கூற வேண்டும், அது இராமனுக்கு இழுக்காக ஆகுமல்லவா?


மீனவன் குகனோடு ஐவரானோம் என்று கூறியவன் இராமன், ஜடாயுவிற்கு அண்ணனாக நின்று ஈமக் கிரியை செய்தவர் இராமன். சபரியின் எச்சிலை உண்கிறார். அவளைத் தாயாராக பாவிக்கிறார். சுக்ரீவனையும், விபீடனனையும் தம்பிகளாக ஏற்றுக் கொள்கிறார். இப்படிப்பட இராமனுக்கு, உத்தரகாண்டத்தைக் கூறுவதால் பெருமை குறைந்துவிடாதா? எனவே தவிர்த்து விடுகிறார் கம்பர்.


கம்பன் காட்டிய இந்த இராமனைத்தான் தமிழ்நாட்டு மக்கள் வழிபடுகின்றனர். இதனை தமிழும், சமஸ்கிருதமும் அறிந்த ஒரு உபய வேதாந்தியால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். நான் அந்த பாரம்பரியத்தில் வந்தவன். இந்த அறிதலை அத்வானியிடமிருந்தோ அல்லது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரிடமிருந்தோ எதிர்பார்க்க முடியாது” என்று கூறுகிறார் திரு.எஸ்.என். நாகராஜன்.