Showing posts with label விவாதங்கள். Show all posts
Showing posts with label விவாதங்கள். Show all posts
Monday, January 23, 2012
Tuesday, November 29, 2011
விமர்சனங்கள்,
விவாதங்கள்
விவாதத்திற்கு வருவார்களா தப்லீக் மவ்லவிமார்கள்?
விவாதத்திற்கு வருவார்களா தப்லீக் மவ்லவிமார்கள்?
ஹெம்மாத்தகமையில் ஏற்பட்ட தவ்ஹீத் புரட்சி. குறிப்பாக தவ்ஹீத் பேசிய ஆலிம்களையும், அதற்கு எதிராக ஆலிம்களையும் நிறையப் பெற்ற ஒரு ஊர் இந்த ஹெம்மாதகமை.
கடந்த 25.11.2011 வெள்ளிக் கிழமை இஷா தொழுகைக்குப் பின் ஹெம்மாதகமை தப்லீக் மர்கஸில் பித்அத் என்றால் என்ன என்ற தலைப்பில் உரையாற்ற எங்களுக்கு அனுமதி வேண்டும், பித்அத்தைப் பற்றி ஏகத்துவ வாதிகள் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் அதற்காக நாங்கள் உங்களுக்கு பித்அத்தைப் பற்றிய தெளிவைத் தரத் தயார் என்று சொன்ன நேரத்தில் பள்ளியின் மேல் மாடியில் ஊர் மக்கள் அனைவரையும் வரவழைத்து அவர்களுக்கு உங்கள் பிரச்சாரத்தை நீங்கள் செய்யலாம் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்ததையடுத்து அங்குள்ள தவ்ஹீத் ஜமாத் சகோதரர்கள் இதற்குறிய ஏற்பாடுகளை செய்தார்கள்.
உலமாக்கள் முன்னிலையில் கொள்கையை உடைத்துப் பேசிய ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக சகோதரர் ரஸ்மின் M.I.Sc மற்றும் சகோதரர் பர்ளீன் M.I.Sc ஆகிய இருவரும் பித்அத் பற்றி தப்லீக் ஜமாத் உலமாக்களுக்கு மத்தியிலேயே விளக்கம் தருவதற்காக ஹெம்மாதகமைக்கு சென்றார்கள்.
சரியாக மாலை 7.30 அளவில் பித்அத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் சகோதரர் ரஸ்மின் M.I.Sc அவர்கள் உரையாற்ற ஆரம்பித்தார். உரையின் ஆரம்பத்தில் இருந்தே பித்அத்தின் கோட்டையான தப்லீக் பள்ளியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகத்தினர் அனைவரும் அங்கிருந்தார்கள்.
பள்ளியின் தலைவரும் துணைத் தலைவரும் 7 வருடங்கள் மத்ரஸாவில் ஓதி பட்டம் பெற்ற உலமாக்கள். இவர்கள் தவிர இன்னும் சில உலமாக்களும் அங்கிருந்தார்கள்.
பள்ளியின் துணைத் தலைவராக இருந்த ரியாஸ் மவ்லவி என்பவர்தான் அனைத்து பித்அத்துக்களுக்கும் துலாக் கோலாக செயல்படுபவர். தலையில் மிகப் பெரிய தலைப்பாகை அணிந்து முழு நீல ஜுப்பா அணிந்திருக்கும் அவர் தான் அங்குள்ள தப்லீக் சகோதரர்களுக்கு ரோல் மாடல் என்று கூட சொல்ல முடியும்.
உரையின் ஆரம்பத்தில் “லா இலாஹ இல்லல்லாஹ்” தொடர்பான விளக்கம் கொடுக்கப்பட்டதன் பின் மார்கம் முழுமையாக்கப்பட்டு விட்டதனையும், நபியவர்களுக்குப் பின் இந்த மார்கத்தில் எந்தவொரு செயல்பாட்டையும் மார்கம் என்று யாரும் காட்டித் தர முடியாது. அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் காட்டியதற்கு மாற்றமாக யார் எதைச் சொன்னாலும் அது மார்கமாக மாற முடியாது என்பது குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் துணையுடன் தெளிவாக விளக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நமது சமுதாயத்தில் மார்க்கம் என்ற போர்வையில் பரவியுள்ள பித்அத்துக்கள் என்னென்ன அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் பட்டியல் போட்டு விளக்கம் கொடுக்கப்பட்டது.
தொழுகையின் ஆரம்பத்தில் நிய்யத் என்ற பெயரில் ஓதப்படும் சில அரபி வாசகங்கள்.
ஐங்காலத் தொழுகையின் பின் ஓதும் கூட்டு துஆ.
சுப்ஹுத் தொழுகையில் ஓதப்படும் குனூத்.
ஜும்மாவிற்கு சொல்லப்படும் இரண்டு பாங்குகள்,
ஜும்மாவில் இமாம் மஹ்ஷர் ஓதுவது,
ஜும்மாவில் கையில் ஒரு தடியை வைத்துக் கொண்டிருப்பது.
மரணித்தவர்களுக்கு கத்தம் ஓதுவது,
நல்ல நாட்கள் என்ற போர்வையில் பாத்திஹாக்களை ஓதுவது,
கந்தூரி கொடுப்பது,
போன்ற பல பித்அத்தான காரியங்கள் பட்டியல் போடப்பட்டு விளக்கப்பட்டதுடன் தொப்பி, தலைப்பாகை, ஜுப்பா என்பன சுன்னத்தா இல்லையா? என்பது போன்ற பல விஷயங்களும் சொற்பொழிவில் தெளிவாக விளக்கப்பட்டது.
அழகான கேள்விகளும், தெளிவான பதில்களும்.
பித்அத் செய்பவர்கள் நரகவாதிகள் என்றால் எங்கள் பள்ளியைச் சேர்ந்த உலமாக்களின் நிலை என்ன?
பயான் முடிந்தவுடன் கேள்வி, பதில் நிகழ்சி ஆரம்பமாகியது. கேள்வி, பதில் நிகழ்ச்சியில் முதலாவதாக கேட்ட சகோதரர் பித்அத் தொடர்பான தனது சந்தேகத்தை முன்வைத்தார்.
நபியவர்கள் காட்டித்தந்தவைகளை மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும் என்கிறீர்கள். நபியவர்கள் காட்டித் தராத கூட்டு துஆ, குனூத் போன்றவை மார்கத்தில் இல்லாத புதிதாக உருவாக்கப்பட்ட பித்அத்துக்கள் என்றும் சொன்னீர்கள். அதற்கு ஆதாரமாக நீங்கள் கூறிய ஹதீஸில் மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்படுபவைகள் பித்அத்துக்கள், பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள், வழிகேடுகள் அனைத்தும் நரகத்தில் நம்மை சேர்க்கும் என்று தெரிவித்தீர்கள்.
அப்படியாயின் எங்கள் பள்ளி மவ்லவி மற்றும் ரியாஸ் மவ்லவி உள்ளிட்டவர்கள் தினமும் ஐங்காலத் தொழுகையின் பின் கூட்டு துஆ ஓதுகிறார்கள், சுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதுகிறார்கள், கத்தம் பாத்திஹா போன்ற மார்கம் காட்டித் தராத பல பித்அத்துக்களை செய்கிறார்கள் இவர்கள் அனைவரும் நரகம் தான் செல்வார்களா? என்று பித்அத் செய்யும் உலமாக்கள் முன்னிலையில் இந்தக் கேள்வியை முன்வைத்தார்.
கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பிரச்சாரகர் சகோதரர் ரஸ்மின் அவர்கள் கேள்விக்குறிய பதிலை நபியவர்களே நமக்குக் கற்றுத் தந்திருக்கிறார்கள் – உங்கள் கேள்விக்குறிய பதிலாக நான் எனது கருத்தை சொல்லமாட்டேன் நபியவர்களின் ஹதீஸையே சொல்கிறேன் என்று கூறிவிட்டு.
பித்அத் தொடர்பாக நபியவர்கள் கூறிய ஹதீஸை எடுத்துக் கூறினார்.
உரையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் ஆகும். வழிகாட்டுதலில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலாகும். காரியங்களில் மிகக் கெட்டது (மார்கத்தில்) புதிதாக உருவாக்கப்பட்டதாகும். (மார்கத்தில்) புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்ரும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்திற்கு இட்டுச்செல்லும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : நஸாயீ – 1560)
அதன் பின் அந்த ஹதீஸிற்கு விளக்கம் சொல்லும் போது பித்அத் செய்பவர்களுக்குறிய தண்டனை நரகம் தான் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். இதனடிப்படையில் சத்தியம் எது? அசத்தியம் எது? என்பதை இந்த உலமாக்கள் தெரிந்ததன் பின்னாலும் மார்கத்தில் இல்லாத பித்அத்துக்களை செய்வார்கள் என்றால் இஸ்லாத்தின் பார்வையில், நபியவர்களின் ஹதீஸின் படி நரகத்துக்குறிய காரியத்தை இவர்கள் செய்கிறார்கள் என்பது தெளிவானது.
இதனை நானாக சொல்லவில்லை. நபி (ஸல்) அவர்கள் தான் சொல்கிறார்கள். அதனால் தயவு செய்து பித்அத் செய்யும் உலமாக்கள் இன்றிலிருந்து அதைவிட்டு நீங்கி நபியவர்களின் வழிகாட்டுதல் படி தங்கள் இபாதத்துக்களை அமைத்துக்கொள்ள முன்வர வேண்டும் இல்லாவிட்டால் அல்லாஹ்விடத்தில் நாளை மறுமையில் இவர்கள் மாபெரும் குற்றவாளிகளாக நிற்பார்கள். என்று பித்அத் செய்யும் உலமாக்களின் முன்னிலையிலேயே சத்தியக் கொள்கை தெளிவாக சொல்லப்பட்டது.
ஆதாரமின்றி திண்டாடிய 20 வருட ஆலிம்(?).
நபியவர்களின் தெளிவான ஹதீஸை வைத்து நாம் கூறிய பதிலை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவமில்லாமல் பித்அத்திற்கு துணை போக வேண்டும் என்பற்காக கருத்துக் கூறுவதற்காக எழுந்த பள்ளியின் துணைத் தலைவர் ரியாஸ் மவ்லவி அவர்கள்,
நீங்கள் பித்அத் செய்வர்கள் நரகம் என்று சொல்வது மக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கும். நான் 20 வருடங்களுக்கு மேலாக குர்ஆன், சுன்னாவை ஆய்வு செய்கிறேன். இன்று இரவு இஷா தொழுகைக்குக் கூட நாங்கள் கூட்டு துஆ ஓதத்தான் செய்தோம். அப்படியிருக்கையில் இது நரகத்திற்குறிய செயல் என்று நீங்கள் சொல்வது தவறு என்று தனது வாதத்தை முன்வைத்தார்.
யானையைப் பார்த்ததாக சொன்ன குருடன் யார்?
அவருடைய கருத்துக்கு பதிலளித்த நமது பிரச்சாரகர், 20 வருடங்கள் குர்ஆன், சுன்னாவை ஆய்வு செய்ததாக சொல்லுகிறீர்களே இருபது வருடங்கள் நீங்கள் செய்த ஆய்வில் ஒரு ஹதீஸையாவது உங்கள் பித்அத்திற்கு ஆதாரமாக காட்ட முடியுமா?
பித்அத்தை செய்து கொண்டு குர்ஆன், சுன்னாவை ஆய்வு செய்வதாக கூறுவது தான் உண்மையில் குருடன் யானையைப் பார்த்த கதையாக உள்ளது என்பதை ரியாஸ் மவ்லவி தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி உண்மையில் நீங்கள் 20 வருடன் மார்க்கத்தைப் படித்தவர் என்றால் நீங்கள் செய்யும் பித்அத்துக்களுக்கு ஆதாரத்தை சமர்ப்பிக்க முடியுமா? இன்று விடிய விடிய வேண்டுமானாலும் நாங்கள் நிற்கத் தயார் நீங்கள் தயாரா? என்று ஒன்றுக்கு பல முறை கேட்டும் பதில் தரத் திராணியற்று மௌனித்துப் போனார் 20 வருட ஆலிம்(?)
குழம்பியது யார்? பொது மக்களா? பித்அத் ஆலிம்களா? பதில் கொடுத்தார் பள்ளியின் தலைவர் நிஸாம் மவ்லவி அவர்கள்.
நமது பயானை பற்றிய விளக்கம் சொல்ல முற்பட்ட 20 வருட ஆலிம்(?) ரியாஸ் அவர்கள். இந்த பயானைக் கேட்டவர்கள் அனைவரும் தற்போது குழம்பிப் போய் இருக்கிறார்கள் என்று கூறி தூய்மையான மார்க்கத்தை தெளிவாக புரிந்து கொண்ட ஹெம்மாத்தகமை மக்களை திசை திருப்ப முயற்சி செய்தார்.
அப்படி அவர் சொல்லும் போதே எழுந்து நின்ற பள்ளிவாயளின் தலைவர் சகோதரர் நிஸாம் ஆலிம் அவர்கள் ரியாஸ் மவ்லவி சொல்வதைப் போல் இங்கு யாரும் குழம்பிப் போகவில்லை மார்க்கத்தை அறிவதற்காகத் தான் அனைவரும் கூடினார்கள். இங்கு சொல்லப்பட்ட கருத்துக்களை மிகத் தெளிவாக மக்கள் விளங்கியிருக்கிறார்கள் அதனால் மக்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள் என்று கூறி வீனாக மக்களை குழப்பும் வேலையை ரியாஸ் மவ்லவி செய்யத் தேவையில்லை என்று மிகத் தெளிவான பதிலை ரியாஸ் மவ்லவியை நோக்கி அனைத்து சகோதரர்களுக்கும் மத்தியில் அவர்களின் இடத்திலேயே கூறினார்.
நடத்தப்பட்ட பயானினால் குழம்பிப் போனவர்கள் கை தூக்குங்கள் என்றார் 20 வருட ஆலீம் ரியாஸ் அவர்கள். அப்போது அங்கு கூடியிருந்தவர்களின் அவருக்கு சாதகமாக வெரும் மூன்று பேர்கள் மாத்திரம் தான் கைதூக்கினார்கள். மற்ற அனைத்து சகோதரர்களும் நடத்தப்பட்ட பயான் எங்களுக்கு தெளிவைத் தான் உண்டாக்கியது என்பதற்கு சாட்டியாளர்களாக மாறினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
சத்தியத்தை மறைக்க முயன்று தனக்கு சாதகமாக ஆள் சேர்க்க நினைத்த அசத்தியவாதியை அல்லாஹ் மக்களுக்கு இணங்காட்டினான்.
கை உயர்த்தச் சொல்லி மூக்குடைபட்ட 20 வருட ஆலிம் செய்வதறியாது திகைத்துப் போனார்.
இனிமேல் கூட்டு துஆ ஓத மாட்டேன் என்று கூறி சத்தியத்தை ஏற்றுக் கொண்ட பள்ளித் தலைவர் சகோதரர் நிஸாம் மவ்லவி.
பிரச்சினை முற்றிப் போன நேரத்தில் மக்களை அமைதிப் படுத்தும் விதமாக பேச ஆரம்பித்த பள்ளியின் தலைவர் மவ்லவி நிஸாம் அவர்கள் நானும் இவ்வளவு காலமாக கூட்டு துஆ, குனூத் போன்ற பித்அத்துக்களை செய்திருக்கிறேன். அல்லாஹ்விடத்தில் அதற்கு நான் மண்ணிப்புக் கேட்டுக் கொள்வேன் இனிமேல் இந்த பித்அத்தான காரியங்களை நான் செய்யமாட்டேன் என்று மக்கள் மத்தியில் உறுதி கூறுகிறேன் என்று சத்தியக் கொள்ளையை ஏற்றுக் கொண்ட செய்தியை சந்தோஷமாக அறிவித்தார்.
எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கிவிடுகின்றான் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி – 71)
என்ற ஹதிஸை சுட்டிக் காட்டிய பள்ளியின் தலைவர் இந்நிகழ்ச்சியின் மூலம் நமக்கு அல்லாஹ் நலவை நாடியிருக்கிறான். ஆகையினால் இச்சந்தர்பத்தை நாம் தவறவிடக் கூடாது.
ரியாஸ் மவ்லவி உள்ளிட்டவர்கள் தங்கள் பித்அத்துக்களை மக்கள் மத்தியில் நிரூபிக்க வேண்டும். அதனால் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்துடன் ரியாஸ் மவ்லவி உள்ளிட்ட பித்அத் செய்யும் ஆலிம்கள் பகிரங்க விவாதம் ஒன்றை செய்து தங்கள் கருத்தை நிரூபித்துக் காட்டாத வரை நாம் இதை விட்டுவிட மாட்டோம்.
நான் இன்னும் 07 மாதங்கள் இந்தப் பள்ளியின் தலைவராக இருப்பேன் அதற்குள் கண்டிப்பாக இரு தரப்புக்கும் இடையிலான பகிரங்க விவாதம் ஒன்றிற்கு நாம் ஏற்பாடு செய்யத் தயாராக இருக்கிறோம். அதற்கு இங்கு வந்துள்ள அனைத்து சகோதரர்களும் உங்கள் ஒத்துழைப்பை தரவேண்டும் என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து இறுதியாக பேசிய ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பிரச்சாரகர் சகோதரர் ரஸ்மின் அவர்கள் ஹெம்மாதகமை மக்கள் பித்அத்தை விட்டு சுன்னாவின் பக்கம் திரும்ப வேண்டும். குர்ஆனையும், நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிகாட்டுதலையும் மாத்திரம் தான் நாம் பின்பற்ற வேண்டும். அதனால் மார்க்கத்திற்கு முரனான பித்அத்தான காரியங்களை செய்யும் ரியாஸ் ஆலிம் உள்ளிட்டவர்களுடன் பகிரங்க விவாதம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்வதுடன் தூய்மையான முறையில் இஸ்லாத்தைப் பின்பற்றுவதற்கு தயாராகும்படியும் கேட்டுக் கொண்டதுடன், பித்அத்துக்களை தூக்கியெறிந்து சுன்னாவின் பக்கம் சத்தியக் கருத்தை ஏற்றுக் கொண்ட பள்ளித் தலைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.
இறுதிக் கட்டமும் இனிமையாக…………………….
பித்அத் வாதிகளுடன் கண்டிப்பாக விவாத ஏற்பாட்டை செய்வதாக உறுதியளித்த ஹெம்மாதகமை சகோதரர்கள் அனைவரும் நிகழ்சியின் இறுதியில் நமது ஜமாத் பிரச்சாரகர்களான சகோதரர் பர்ளீன் மற்றும் ரஸ்மின் ஆகியோருடன் கை குலுக்கி – முஸாபஹா செய்து சத்தியத்தை ஏற்றுக் கொண்ட தங்கள் சந்தோஷத்தைப் பரிமாறிக் கொண்ட காட்சி உள்ளத்தை குளிர வைத்தது. எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய் களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.(61:08)
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய் களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.(61:08)
'உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடிய தாகவே உள்ளது” என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 17: 81)
வீடியோவைப் பாருங்கள்.
Monday, November 14, 2011
விவாதங்கள்,
ஜமாஅத் செய்திகள்
சகோதரர் அர்ஹம் தடுமாறுவது ஏன் – விவாத ஒப்பந்தத்தின் பின் மீண்டும் அர்ஹம் அவர்கள் அனுப்பிய கடிதமும், நமது பதிலும்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும் சகோதரர் அர்ஹம் மவ்லவி அவர்களுக்கும் இடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இரண்டு தலைப்புக்களில் விவாத ஒப்பந்தம் நடை பெற்றமை வாசகர்கள் அறிந்ததே! விவாதத்திற்கான இடமும் நேரமும் குறிப்பிடப்பட்டு விவாத ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட சில நாட்களிலேயே தான் விவாதத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக சகோதரர் அர்ஹம் அவர்கள் தொலை பேசி மூலம் நமது தலைமைக்கு அறிவித்தார் (அவர் அறிவித்த ரெகோடிங் நமது கைவசம் உள்ளது)
அதற்கு எழுத்து மூலம் அதனை எழுதித் தருமாறு ஜமாத் வேண்டுகோள் விடுத்த நேரம் அவர் நமது தலைமையகத்திற்கே நேரடியாக வந்து ஒரு கடிதத்தை சமர்ப்பித்தார்.
(அப்போது அவர் நம்முடன் பேசிய விஷயங்கள் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.)
தலைமையத்திற்கு வந்து ஒரு கடிதத்தைத் தந்தவர் தபால் மூலமாக மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார். இரண்டு கடிதத்திற்கும் சேர்த்து நமது ஜமாத் சார்பாக பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.அவற்றைக் கீழே தருகிறோம்.
2011.10.29 அன்று நமது தலைமையத்திற்கு வந்து சகோதரர் அர்ஹம் தந்த கடிதம்.
2011.11.04 அன்று தபால் மூலமாக சகோதரர் அர்ஹம் அனுப்பிய கடிதம்.
2011.11.05 அன்று நாம் சகோதரர் அர்ஹம் அவர்களுக்கு அனுப்பிய கடிதம்.
Thursday, October 20, 2011
விவாதங்கள்,
வீடியோக்கள்
அர்ஹம் மவ்லவி உடனான விவாத ஒப்பந்தத்தின் வீடியோ காட்சிகள்
அர்ஹம் மவ்லவி உடனான விவாத ஒப்பந்தத்தின் வீடியோ காட்சிகள்
Saturday, October 1, 2011
விவாதங்கள்
சகோதரர் அர்ஹம் மவ்லவியுடன் விவாத ஒப்பந்தம் போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்-ஒப்பந்த அசல் பிரதிகளுடன் (மூன்றாம் இணைப்பு)
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும், சகோதரர் அர்ஹம் மவ்லவி அவர்களுக்கும் இடையில் இன்று (01.10.2011) சனிக்கிழமை கொழும்பு, மாபோலை, அன்டனா வத்தையில் வைத்து விவாத ஒப்பந்தம் போடப்பட்டது.
விவாத தலைப்புகளும் இரு தரப்பின் நிலைபாடுகளும்.
அறிவிப்பாளர் வரிசையில் ஆதாரபூர்வமாக இருக்கும் எந்த ஹதீஸும் குர்ஆனுக்கு முரண்படாதா?
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு.
அல்லாஹ்வின் வஹீயில் அருவருப்பும், முரண்பாடும் இராது. ஒரு வஹீ இன்னொரு வஹீயுடன் முரண்படாது. இறைத்தூதரின் சுன்னத் வஹீயின் ஒரு பகுதியாகும். அது திருக்குர்-ஆன் என்னும் வஹீயுடன் முரண்படாது. சரியான அறிவிப்பாளர்கள் வரிசையோடு வந்துள்ள சில செய்திகள் திருக்குர்-ஆனுக்கு முரணாகவும், குர்-ஆனை சந்தேகத்திற்கும், கேலிக்கும் உரியதாக ஆக்கும் வகையிலும் இருக்குமேயானால் அவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது அல்ல. அவை மறுக்கப்பட வேண்டியவையாகும்.
மவ்லவி அர்ஹம் தரப்பினரின் நிலைபாடு.
சரியான அறிவிப்பாளர் வரிசையில் ஆதாரப்பூர்வமாக இருக்கும் ஹதீஸ்களை குர்ஆனுக்கு முரன் என்று யார் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நேர்வழியில் இருந்து விலகிச் செல்கிறார்கள்.
ரமலான் மற்றும் பெருநாளை தீர்மானிப்பதில் குர்ஆன் சுன்னா அடிப்படையில் பிறையைப் பற்றிய சரியான நிலைப்பாடு எது ?
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு.
உலகில் ஏதேனும் ஒரு பகுதியில் பார்க்கப்படும் பிறை உலகம் முழுவதையும் கட்டுப்படுத்தும். அதன் அடிப்படையில் உலகிலுள்ள முஸ்லீம்கள் தங்கள் ரமலானையும் பெருநளையும் தீர்மானிக்க வேண்டும்' என்ற எதிர்தரப்பினரின் நிலைப்பாட்டுக்கு திருக்குர்ஆனிலும் நபிவழியிலும் எவ்வித வழிகாட்டலுமில்லை என்பதும் அவ்வாறு கூறுபவர்கள் தங்களின் மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர் என்பதும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் நிலைப்பாடாகும்.
மேலும், ஒரு பகுதியில் பார்க்கப்பட்ட பிறையின் அடிப்படையில் உலகம் முழுவதுமுள்ள முஸ்லீம்கள் ரமலான் நோன்பை துவங்குவதும் முடிப்பதும் பெருநாளை முடிவு செய்வதும் திருக்குர்ஆனுக்கும் நபி வழிக்கும் மாற்றமானது முரணானது எதிரானது எனவே வழிகேடானதும் ஆகும் என்பது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் நிலைப்பாடாகும்.
மவ்லவி அர்ஹம் தரப்பினரின் நிலைபாடு.
தத்தமது பகுதியில் மாத்திரம் பிறை பார்ப்பது நேர் வழி அல்ல.
இரு தரப்பிலும் விவாதத்தில் கலந்துகொள்பவர்கள் விபரம்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக கலந்துகொள்பவர்கள்.
சகோதரர் ரியாஸ் M.I.Sc
சகோதரர் ரஸ்மின் M.I.Sc
சகோதரர் பர்சான் (நளீமி)
சகோதரர் பர்ளீன் M.I.Sc
சகோதரர் அப்து ராசிக் B.COM
சகோதரர் ஹிஷாம். M.I.Sc
சகோதரர் ரஸ்மி B.COM
சகோதரர் அர்ஹம் மவ்லவி தரப்பினால் கலந்து கொள்பவர்கள்.
சகோதரர் அர்ஹம் (இஹ்சானி)
சகோதரர் ரமீஸ் (ஸலபி)
சகோதரர் பஸால் (ஸலபி)
சகோதரர் நஷ்மல் (பலாஹி)
சகோதரர் சிபான் (அஸரி)
சகோதரர் முஹம்மத் (ரஹ்மானி)
சகோதரர் அஸ்பர் (பலாஹி)
ஒப்பந்தத்தின் நகல் பிரதி.
விவாத ஒப்பந்த வீடியோக்கள் மிக விரைவில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்.
Friday, September 30, 2011
விவாதங்கள்
அர்ஹம் மவ்லவி உடனான விவாதம் ஒப்பந்தம்
சகோதரர் அர்ஹம் மொவ்லவி அவர்களுக்கும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅதினருக்கும் இடையிலான விவாதம் ஒப்பந்தம் இன்று (01/10/2011) காலை 10.45 மணியளவில் மாபோலை அண்டென்னா வத்தை எனும் இடத்தில் நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது. ஒப்பந்தம் பற்றிய முழு விபரம் மற்றும் விவாத ஒப்பந்த வீடியோ காட்சிக்ள் இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் எமது தலைமை இனையத்தலளத்தில் வெளியிடப்படும்
Saturday, September 24, 2011
விமர்சனங்கள்,
விவாதங்கள்
அனுராதபுரம், கலாவெவயில் நடந்தது என்ன?
அனுராதபுரம், கலாவெவயில் நடந்தது என்ன?
விவாதத்திலிருந்து பின்வாங்கிய பித்அத்வாதிகள்.
அன்பின் சகோதரர்களே!
'உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடிய தாகவே உள்ளது” (17-81)
கடந்த 17.09.2011 சனிக்கிழமை மாலை அனுராதபுர மாவட்டத்தில் முஸ்லீம்களை அதிகமாக கொண்ட ஊரான கலாவெவயின் பழைய கொமினிகேஷன் ஜங்ஷன் (டீகோ டவர்) பகுதியில் இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி ஒன்றை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கலாவெவைக் கிளையினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் இஸ்லாத்தின் பெயரால் நமது சமுதாய மக்கள் செய்யும் மார்க்கத்தில் இல்லாத பித்அத்தான காரியங்கள் எவை? அவற்றை செய்பவர்களின் மறுமை நிலை என்ன? என்ற தலைப்பில் ஜமாத்தின் பிரச்சாரகரும், அழைப்பு மாத இதழின் துணை ஆசிரியருமான சகோதரர் ரஸ்மின் M.I.Sc அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நடந்தது என்ன?
பித்அத் மற்றும் இணைவைத்தல் என்றால் என்ன? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டதின் பின்னால் பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மார்க்க விஷயமாக உள்ள சந்தேகங்களுக்கு குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் அடிப்படையில் பதில் தரும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஆரம்பமாக சில கேள்விகள் கேட்க்கப்பட்டு அதற்கு மார்க்க அடிப்படையில் ஆதாரத்துடன் விளக்கம் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது நிகழ்ச்சியை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு வந்த சில விஷமிகள் வேண்டுமென்று கூச்சலிட்டு நிகழ்ச்சியின் ஒழுங்கை கெடுப்பதற்கு பெரும் பிரயத்தனத்தை மேற்கொண்டார்கள்.
பகிரங்க சவாலும், வாயடைத்த பித்அத்வாதிகளும்.
மார்க்கத்தின் பெயரால் செய்யப்படும் பித்அத்தான காரியங்கள் பட்டியலிடப்பட்டு பகிரங்க விவாத சவால் விடப்பட்டது. நடு ஊருக்குள் நடந்த பகிரங்க நிகழ்ச்சியில் ஊரில் இருக்கும் பித்அத்தை ஆதரிக்கும் ஒரு மவ்லவியால் கூட சவாலை எதிர் கொண்டு தாங்கள் செய்வதை சரியென்று நிரூபிக்க திராணியற்றுப் போனதைக் கண்ட பல சகோதரர்கள் சத்தியம் எது? அசத்தியம் எது? என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டார்கள்.
பகிரங்க சவால் விடுத்து பட்டியல் போடப்பட்ட சில பித்அத்துக்கள்.
ஐங்காலத் தொழுகையின் பின் கூட்டு துஆ ஓதுவது.
சுப்ஹுத் தொழுகையில் குனூத் ஓதுவது.
ஜும்மாவில் இரண்டு பாங்கு சொல்லுவது.
பெருநாள் தொழுகையை பள்ளியில் தொழுவது.
மரணித்தவர்களுக்கு கத்தம் பாத்திஹா ஓதுவது.
மவ்லிது என்ற பெயரில் நபி பிறந்த தினம் கொண்டாடுவது.
மார்க்கத்தின் பெயரால் தொப்பி அணிவது.
மரணித்தவருக்கு யாசீன் ஓதுவது.
தராவீஹ் என்ற பெயரில் 23 ரக்அத்துக்கள் தொழுவது.
தாயத்து போடுவது.
போன்றவை நபியவர்கள் காட்டித்தராத மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பித்அத்துக்களாகும். இந்த பித்அத்துக்களை செய்பவர்கள், அதனை சரிகாண்பவர்கள். பகிரங்க விவாதத்தில் அதனை நிரூபிக்கத் தயாரா? என மைக்கில் பல முறை அறிவிக்கப்பட்டும் அங்கிருந்த யாரும் இந்த சவாலை ஏற்றுக் கொள்ளவில்லை.
சட்டியில் இருந்தால் தானே கரண்டியில் வரும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் இல்லாததைப் புதிதாக யாராவது உண்டாக்கினால் அது நிராகரிக்கப்படும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள். நூல் : புகாரி 2697
தொப்பியை தூக்கியெறிந்து சுன்னாவை ஏற்றுக் கொண்ட முதியவர்.
தான் தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் தொப்பி அணிந்து வருவதாகவும் தொப்பி அணிவது சுன்னத் - நபி வழியென்றுதான் தனக்கு சொல்லித் தந்ததாகவும் அதனை இதுவரைக்கும் பின்பற்றி வந்திருக்கிறேன். உண்மையில் இஸ்லாத்தில் தொப்பியின் நிலை என்ன? தொப்பியின்றி இந்த பௌத்த - புத்த மதத்தை ஆட்சி மதமாகக் கொண்ட இலங்கையில் முஸ்லீம்கள் தங்களை அடையாளம் காட்டுவது எப்படி? என்று ஒரு முதியவர் கேள்வியெழுப்பினார்.
அதற்கு தொப்பியைப் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு மற்றும் இலங்கையில் முஸ்லீம்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் பதில் சொல்லப்பட்டதும். உடனே அந்த முதியவர் தான் அணிந்திருந்த தொப்பியைக் கலட்டிவிட்டு தவ்ஹீத் ஜமாத்தின் சொல்வது தான் சரியான கொள்கை என்பதை ஏற்றுக் கொண்டு தான் அணிந்திருந்த தொப்பியைக் கலட்டி வைத்துவிட்டார். அல்ஹம்துலில்லாஹ்.
சுப்ஹு குனூத்தும்> விவாதத்திற்கு பின்வாங்கிய பித்அத் வாதிகளும்.
பயான் நிகழ்ச்சிக்குப் பின் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் கேள்வி கேட்பதாக சொல்லிக் கொண்டு வந்த ஒருவர் (இவர் எப்படிப்பட்டவர் என்பது ஊராருக்கு தெளிவாக தெரிந்த உண்மை) சுப்ஹு தொழுகையில் குனூத் ஓதக் கூடாது என்பதற்கு ஆதாரம் என்ன? என்று கேள்வியெழுப்பினார்.
நபியவர்களின் வாழ்நாளில் ஒரு தடவை கூட சுப்ஹு தொழுகையில் குனூத் என்ற ஒன்றை ஓதவில்லை. அப்படி ஓதியதற்கு ஸஹீஹான ஹதீஸ்களில் எந்த ஆதாரமும் இல்லை. அதனால் தான் சுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவது பித்அத் என்று நாம் கூறுகிறோம். நீங்கள் செய்வது நபிவழியில் இருந்தால் ஆதாரத்தை நீங்கள் காட்டுங்கள் என்று நமது தரப்பால் பதில் சொல்லப்பட்டது.
அப்போது அதை எதிர்த்துக் கூச்சலிட்ட குறிப்பிட்ட மேதாவி (?) இல்லை என்பதற்கு என்ன ஆதாரம் என்று தன்னை ஒரு அறிவாளி என்று நினைத்துக் கொண்டு அடிமட்ட முட்டாள் தனமான கேள்வியை முன்வைத்தார்.
இல்லை என்பதற்கு நபியவர்கள் செய்யவில்லை என்பதுதான் ஆதாரம். சுப்ஹுத் தொழுகையில் குனூத் இருக்கிறது என்றால் ஹதீஸைக் காட்டுங்கள். என்று சிறு பிள்ளைக்கும் விளங்கும் விதமாக நமது தரப்பு பேச்சாளர் பதில் சொல்லியது அங்கிருந்த அனைவருக்கும் விளங்கினாலும் குறிப்பிட்ட அறிவாளி(?)க்கு மாத்திரம் விளங்காமல் போனது ஏனோ?
சுப்ஹு குனூத் தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு தயாரா? என்று பல முறை நமது தரப்பு மவ்லவி அழைப்பு விடுத்தும் எங்களுக்கு விவாதத்திற்கு வர முடியாது என்று பித்அத் வாதிகள் பகிரங்கமாக ஒத்துக்கொண்டார்கள். (அவர்கள் ஒத்துக் கொண்ட காட்சி வீடியோவாக பதியப்பட்டுள்ளது)
பகிரங்க சவால்.
கடந்த சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் விவாத அழைப்பு விடுக்கப்பட்டு பகிரங்கமாக மைக்கில் அறிவிப்பு விடப்பட்டும் விவாத சவாலை ஏற்றுக்கொண்டு தாம் செய்வதை குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் அடிப்படையில் நிரூபிப்பதற்கு பித்அத் ஆதரவாளர்கள் தயாராகவில்லை.
மாறாக வெற்று வீராப்பு பேசும் இவர்கள் அடுத்த நாள் குனூத் தொடர்பான ஒரு துண்டுப் பிரசுரத்தை மாத்திரம் ஊரில் ஆங்காங்கு விநியோகம் செய்திருந்தார்கள். தாங்கள் செய்வது மார்க்க அடிப்படையில் அமைந்தது தான் என்றால் அதை நிரூபிப்பதற்கு கிடைத்த அருமையான சந்தர்ப்பம் சனிக்கிழமை இரவு பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி - நமது பேச்சாளர் தான் இரவு முழுவதும் நின்று விவாதிப்பதற்கும் தயார் என்று கூறியும் வெற்று வீராப்பு பேசிய பித்அத்வாதிகள் அதை அந்த இடத்தில் நிரூபித்து விவாதிக்க அல்லது ஆதாரத்தை கொண்டுவந்து காட்டுவதற்கு தயாராகவில்லை.
மீண்டும் சொல்கிறோம்.
அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! இவர்கள் செய்யும் அனைத்தும் பித்அத்துக்கள் என்பதை பகிரங்க விவாதத்தில் குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் அடிப்படையில் நாம் நீரூபிக்கத் தயாராக இருக்கிறோம். சம்பந்தப் பட்டவர்கள் தயாரா?
கேள்வி பதில் நிகழ்வின் வீடியோ காட்சியை இங்கு வெளியிடுகிறோம்.
Monday, January 17, 2011
Subscribe to:
Posts (Atom)






















