ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும், சகோதரர் அர்ஹம் மவ்லவி அவர்களுக்கும் இடையில் இன்று (01.10.2011) சனிக்கிழமை கொழும்பு, மாபோலை, அன்டனா வத்தையில் வைத்து விவாத ஒப்பந்தம் போடப்பட்டது.
விவாத தலைப்புகளும் இரு தரப்பின் நிலைபாடுகளும்.
அறிவிப்பாளர் வரிசையில் ஆதாரபூர்வமாக இருக்கும் எந்த ஹதீஸும் குர்ஆனுக்கு முரண்படாதா?
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு.
அல்லாஹ்வின் வஹீயில் அருவருப்பும், முரண்பாடும் இராது. ஒரு வஹீ இன்னொரு வஹீயுடன் முரண்படாது. இறைத்தூதரின் சுன்னத் வஹீயின் ஒரு பகுதியாகும். அது திருக்குர்-ஆன் என்னும் வஹீயுடன் முரண்படாது. சரியான அறிவிப்பாளர்கள் வரிசையோடு வந்துள்ள சில செய்திகள் திருக்குர்-ஆனுக்கு முரணாகவும், குர்-ஆனை சந்தேகத்திற்கும், கேலிக்கும் உரியதாக ஆக்கும் வகையிலும் இருக்குமேயானால் அவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது அல்ல. அவை மறுக்கப்பட வேண்டியவையாகும்.
மவ்லவி அர்ஹம் தரப்பினரின் நிலைபாடு.
சரியான அறிவிப்பாளர் வரிசையில் ஆதாரப்பூர்வமாக இருக்கும் ஹதீஸ்களை குர்ஆனுக்கு முரன் என்று யார் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நேர்வழியில் இருந்து விலகிச் செல்கிறார்கள்.
ரமலான் மற்றும் பெருநாளை தீர்மானிப்பதில் குர்ஆன் சுன்னா அடிப்படையில் பிறையைப் பற்றிய சரியான நிலைப்பாடு எது ?
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு.
உலகில் ஏதேனும் ஒரு பகுதியில் பார்க்கப்படும் பிறை உலகம் முழுவதையும் கட்டுப்படுத்தும். அதன் அடிப்படையில் உலகிலுள்ள முஸ்லீம்கள் தங்கள் ரமலானையும் பெருநளையும் தீர்மானிக்க வேண்டும்' என்ற எதிர்தரப்பினரின் நிலைப்பாட்டுக்கு திருக்குர்ஆனிலும் நபிவழியிலும் எவ்வித வழிகாட்டலுமில்லை என்பதும் அவ்வாறு கூறுபவர்கள் தங்களின் மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர் என்பதும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் நிலைப்பாடாகும்.
மேலும், ஒரு பகுதியில் பார்க்கப்பட்ட பிறையின் அடிப்படையில் உலகம் முழுவதுமுள்ள முஸ்லீம்கள் ரமலான் நோன்பை துவங்குவதும் முடிப்பதும் பெருநாளை முடிவு செய்வதும் திருக்குர்ஆனுக்கும் நபி வழிக்கும் மாற்றமானது முரணானது எதிரானது எனவே வழிகேடானதும் ஆகும் என்பது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் நிலைப்பாடாகும்.
மவ்லவி அர்ஹம் தரப்பினரின் நிலைபாடு.
தத்தமது பகுதியில் மாத்திரம் பிறை பார்ப்பது நேர் வழி அல்ல.
இரு தரப்பிலும் விவாதத்தில் கலந்துகொள்பவர்கள் விபரம்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக கலந்துகொள்பவர்கள்.
சகோதரர் ரியாஸ் M.I.Sc
சகோதரர் ரஸ்மின் M.I.Sc
சகோதரர் பர்சான் (நளீமி)
சகோதரர் பர்ளீன் M.I.Sc
சகோதரர் அப்து ராசிக் B.COM
சகோதரர் ஹிஷாம். M.I.Sc
சகோதரர் ரஸ்மி B.COM
சகோதரர் அர்ஹம் மவ்லவி தரப்பினால் கலந்து கொள்பவர்கள்.
சகோதரர் அர்ஹம் (இஹ்சானி)
சகோதரர் ரமீஸ் (ஸலபி)
சகோதரர் பஸால் (ஸலபி)
சகோதரர் நஷ்மல் (பலாஹி)
சகோதரர் சிபான் (அஸரி)
சகோதரர் முஹம்மத் (ரஹ்மானி)
சகோதரர் அஸ்பர் (பலாஹி)
ஒப்பந்தத்தின் நகல் பிரதி.
விவாத ஒப்பந்த வீடியோக்கள் மிக விரைவில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்.
0 comments:
Post a Comment