Showing posts with label சேவைகள். Show all posts
Showing posts with label சேவைகள். Show all posts

Wednesday, November 2, 2011

குர்பானியின் சட்டங்கள் - நோட்டீஸ்

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினரால் அச்சிடப்பட்டு  நாடு முழுவதும் வினியோகிக்கப்பட்ட நோட்டீஸின் அசல் வடிவம்


 

Monday, October 31, 2011

SLTJ மாபோலைக் கிளை சார்பாக O/L மாணவர்களுக்கான விஞ்ஞானக் கருத்தரங்கு.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மாபோலைக் கிளை சார்பாக நேற்று (30-10-2011) ஞாயிற்றுக் கிழமை மாபோலை அல் – அஷ்ரப் முஸ்லீம் வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான விஞ்ஞானப் பாட கருத்தரங்கு நடத்தப்பட்டது.
இதில் சகோதரர் ரஸ்மி (Under Graduate. Agri) அவர்கள் மாணவர்களுக்கான விஞ்ஞான விளக்கங்களை செவ்வெனே நிகழ்த்தினார்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மாபோலைக் கிளை இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Saturday, October 29, 2011

O/L மாணவர்களுக்கான விஞ்ஞான பாட கருத்தரங்கு

SLTJ - Mabola  கிளை O/L மாணவர்களுக்கான மாபெறும் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. 

பாடம் 

விஞ்ஞானம்

காலம்

ஞாயிற்றுக்கிழமை
30/10/2011 

இடம் 

அல்- அஷ்ரப் முஸ்லிம் வித்தியாலயம் - மாபோலை

நேரம்

காலை 09.00 மணி தொடக்கம் மாலை 05.00 மணி வரை

அனைத்து மாணவர்களும் கலந்து பயன் பெற அழைக்கின்றது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் - மாபோலை கிளை

மேலதிக தகவல் பெற அழையுங்கள்
ஆசாத்    077 3 753 593

Thursday, October 6, 2011

SLTJ சார்பாக கலாவெவயில் மாபெரும் இரத்தான முகாம்.

அனுராதபுர மாவட்டத்தின் மிகப் பெரிய முஸ்லீம் கிராமமாகிய கலாவெவயில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக வரலாற்றில் முதன் முதலாக எதிர்வரும் 26ம் தேதி மாபெரும் இரத்தான முகாம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கலாவெவ, நேகம, ஹோராப்பொல ஆகிய மூன்று கிளைகள் ஒன்றினைந்து செய்யும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரத்தம் வழங்கி மனித உயிர் காக்கும் உன்னத பணியில் பங்கெடுக்குமாறு அனைவரையும் அன்பாய் அழைக்கிறது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தேசிய தலைமையகம்.

Monday, October 3, 2011

தெருமுனைப் பிரச்சாரம் மாபோலையில்....

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாபோலை கிளை ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03/10/2011) அஷர் தொழுகையை தொடர்ந்து மக்கள் குடியிருப்பு தொகுதி வீதியில் அழைப்பு மாத இதழ் பிரதான ஆசிரியரான சகோதரர். பர்சான்(னளீமி) அவர்களால் “நாங்கள் சொல்வது என்ன” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. மக்கள் அவர் அவர் வீடுகளில் இருந்தவாரே உரையை செவிமடுத்தனர்.





Tuesday, September 6, 2011

SLTJ- Mabola கிளையின் பித்ரா வினியோகம்

அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் இவ்வாண்டிற்கான ஃபித்ரா சேகரிப்பு கடந்த ஆண்டிலும் மார்க்க பல மடங்கு அதிகரித்துள்ளது. ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் மாபோலை கிளையின் தஹ்வா மற்றும் சமூக பணிகள் கடந்த ஆண்டுகளில் திறம்பட செயல்படுத்தப்பட்டதால் பல சகோதரர்கள் எம்முடம் இணைந்துள்ளனர். இவ்வாண்டு ஃபித்ரா தொகையாக 39,980/= ரூபாய்கள் சேகரிக்கப்பட்டு. பல ஏழை எளியவர்களுக்கு பக்ர்ந்தளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்



 

Friday, July 8, 2011

இருதய சத்திர சிகிச்சைக்கான மருத்துவ உதவி

மாபோளை பிரதேச ஆறு வயது சிறுவனின் இருதய சத்திர சிகிச்சைக்காக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் மாபோளை கிளை சார்பாக 11500 /- ரூபா காசாக சிறுவனின் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. இத்தொகையை தந்துதவிய அனைத்து பிரதேச மக்களுக்கும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் - மாபோளை கிளை நன்றி தெரிவித்துக்கொள்கிறது. அல்ஹம்துலில்லாஹ் 

Friday, December 31, 2010

Monday, December 27, 2010