Showing posts with label வரலாறுகள். Show all posts
Showing posts with label வரலாறுகள். Show all posts

Monday, April 2, 2012

அப்பாவி பலஸ்தீனர்களை கொன்று உடல் உறுப்புக்ளை திருடும் யூத இராணுவம் !!!


சில வருடங்களுக்கு முன்னர், இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீன கைதிகளை கொன்று உடல் உறுப்புகளை திருடுவதாக ஸ்வீடிஷ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அப்போது இஸ்ரேலிய அரசு, அதை "யூத விரோத பிரச்சாரம்" என மறுத்திருந்தது. தற்போது அரச மட்டத்திலேயே குறிப்பிட்ட குற்றச்சாட்டு உண்மை தான் என ஒத்துக் கொண்டுள்ளனர்.இப்படி ஒரு மனித தன்மையே இல...்லாமல் அப்பாவி மக்களின் உயிர் களும் உடமைகளையும் நிதம் நிதம் சுராடும் திருடன் இஸ்ரேலுக்கு ஒரு நல்ல பாடம் கூடிய சீக்கிரத்தில் கற்பிக்கத்தான் போகிறார்கள் . i



இதுவெல்லாம் தீவிரவாதம் இல்லை ! மனித உரிமை மீறல் இல்லை !இப்படி அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் கொடூரர்களுக்கு அழிவு என்னமோ பக்கத்தில் தான் இருக்கிறது அமெரிக்காவின்கள்ளக்குலந்தை இஸ்ரேல் நாடே இல்லாமல் பாலஸ்தீன் ஒரு சிறிய பகுதியில் தஞ்சம் புகுந்தவர்கள் உலக கொடூரன் அமெரிக்க உதவி உடன் கொஞ்சம் கொஞ்சமாக முஸ்லிம் மக்களை கொன்று குவித்து அந்த நாட்டின் பெருபான்மை பகுதிகளை பிடித்து விட்டானர்



இந்த கொடூரங்களை எல்லாம் எல்லா நாடுகளும் பார்த்து கொண்டு தான் இருகிறதே தவிர வாய் திறப்பதே இல்லை .தட்டி கேட்க்க


அவர்களுக்கு வாய் இருந்தும் ஊமையாய் .கண் இருந்து குருடனாய் காது இருந்து செவிடனாய் தான் இருக்கிறார்கள் .சரி வேறு ஒரு நாடு அமெரிக்க அணு ஆய்தம் வைத்து இருக்கிறது என்றுஅமெரிக்காவிற்கு நுழைய முடியுமா ? சிந்தித்து பாருங்கள் நண்பர்களே .அவன் நினைத்தால் எந்த ஒரு நாட்டிற்கும் போய் சோதனை என்ற பெயரில் நுழையலாம் .அவன் கட்டுபாடிற்கு வரவில்லை என்றால் அந்த நாடு பயங்கிற அணு ஆய்தம் வைத்து இருக்கிறது என்று அந்த நாட்டை அழிப்பது இது தான் அவர்களுடைய நோக்கம் . ஏன் சில நாடுகள் கண்டும் காணமல் இருக்கிறது என்றால் அதிக அளவு அமெரிக்காவின் இடம் இருந்து கடன் பெற்று இருக்கும் .பணத்தை கொடுத்து வாயே மூடவைகிறான். இவர்களின் ஆணவம் எல்லாம் எத்தனை காலம் தான் நடக்கும் என்று பார்த்து பார்ப்போம் ....



மேலும் விவரகளுக்கு இந்த லின்க்கை கிளிக் செய்யுங்கள்



http://www.guardian.co.uk/world/2009/dec/21/israeli-pathologists-harvested-organs


Monday, January 9, 2012

நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன்?

முன்னால் அமெரிக்க நடிகை ''ஸாரா போக்கர்''
Niqab is the new symbol of woman's liberation.

 [ நான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர்.
உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, 'ஸ்டைல்' என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது.
 
எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் 'நிகாப்' அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, 'நிகாப்' அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ''அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது'' என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது.
பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு 'நிகாப்' தான்
. நீச்சலுடை அல்ல. - முன்னால் அமெரிக்க நடிகை ஸாரா போக்கர் ]

  அமெரிக்காவின் இதயப்பகுதியில் பிறந்த அமெரிக்கப்பெண் நான். மற்றவர்களைப்போல் நானும் அந்தப் பெரிய நகரத்தின் கவர்ச்சிகளுக்கு ஆட்பட்டவளாகத் தான் வளர்ந்தேன். கவர்ச்சிக்கேந்திரமான ஃபுளோரிடாவுக்கு, தெற்கு மியாமி கடர்கரையின் நாகரீக வாழ்வைத்தேடி ஓடினேன்.
 

ஒரு சாதாரண மேற்கத்திய பெண் எப்படி இருப்பாளோ அப்படியேதான் நானும் இருந்தேன்; ஆம்! என் அழகின்மீது அதிக ஈடுபாடு கொண்டவளாக இருந்தேன். நான் வளர வளர, நாகரீகத்துக்கு அடிமையாகி விட்டேன் என்பதை நன்றாகவே புரிந்து கொண்டேன். எனது அழகான தோற்றமே என்னை பிணைக்கைதியாக்கி விட்டதை உணர்ந்தேன்.
 
நாகரீக வாழ்வை மேற்கொண்டால் வாழ்க்கையின் தேவைகளுக்கான பொருளாதாரத்துக்கு என்ன செய்வது? இரண்டுக்கும் இடைவெளி அதிகமானது. மதுபானங்கள் பரிமாறப்படும் கேளிக்கை பார்ட்டியை விட்டு விலகி தியானம், சமூக சேவை போன்றவற்றில் கவனத்தை திருப்பினேன். ஆனால் இவைகளால் பெரிய பலன் ஏதும் கிட்டவில்லை. 

அவ்வப்போது போட்டுக்கொள்ளும் வலி மாத்திரைகள் தற்காலிக நிவாரணத்தைத்தானே கொடுக்கும். அதற்கு மேல் எந்த பலனையும் கொடுக்காது அல்லாவா? என்னுடைய மன வலிக்கு அழுத்தமான தீர்வுதான் என்ன?

செப்டம்பர் 11, 2001. அப்பொழுதுதான் இஸ்லாத்தைப்பற்றி, இஸ்லாமிய கலச்சாரத்தைப்பற்றி, அதன் மதிப்பைப்பற்றி கேள்விப்படுகிறேன். அதுவரை இஸ்லாம் என்றாலே பெண்களை ''கூடாரத்துக்குள்'' அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் மதம், மனைவியாக வருபவளை அடித்து உதைக்கும் மதம், பயங்கரவாத மதமாகத்தான் அறிந்து வைத்திருந்தேன். 

அப்பொழுதுதான் ஒருநாள் திருக்குர்ஆனை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரே மாதிரியான மேற்கத்திய கருத்துக்களுக்கு மாற்றமான அதன் நடை என்னை மிகவும் கவர்ந்தது. இருப்பு, வாழ்க்கை, படைப்பு, 

படைத்தவனுக்கும் படைப்புகளுக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. 

இதயத்தோடு ஒன்றிப்போகும் அதன் வார்ததைகளை விளக்க எவருமே தேவையில்லை எனும் அளவுக்கு என் ஆன்மாவோடு (அதன் வார்த்தைகள்) ஒன்றிப்போனது என்றுதான் சொல்வேன். இறுதியாக உண்மை எது என்பதை விளங்கிக்கொண்டேன். 

கடைவீதிக்குச்சென்று நீளமான அழகான 'கவுன்' ஒன்றை வாங்கி வந்தேன். முஸ்லீம் பெண்மணிகள் தலையை மறைக்க அணியும் துணியையும் கட்டிக்கொண்டு நான் தினசரி நடந்து செல்லும் வீதிகளில் நடக்க ஆரம்பித்தேன். அதே வீதியில்தான் நேற்றுவரை கவர்ச்சிகரமான குட்டையான (ஷார்ட்ஸ்) மற்றும் நீச்சலுடைகளுடன் நடந்து சென்றேன். வீதியில் அதே பழைய முகங்கள், அதே பழைய கடைகளைத்தான் பார்க்கிறேன். ஆனால் மிகப்பெரிய வேறுபாட்டை என் உள்ளம் காண்கிறது. ஆம் சுதந்திரப்பெண்மணியாக இப்போது என்னை நான் உணர்கிறேன். மற்றவர்கள் என் கவர்ச்சியான உடலமைப்பை ஆசையோடு நோக்கும் அந்த பார்வையிலிருந்து தப்பித்து நான் விடுதலை அடைந்து விட்டது போல், என்னை சுற்றியிருந்த விலங்குகள் அறுந்து விழுவது போல் உணர்ந்தேன். 
 
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கவர்ச்சியான என் உடலமைப்பை வேட்டையாடும் மனிதர்களிடமிருந்து எனக்கு முழு விடுதலை கிடைத்துவிட்டது என்று உள்ளம் குதூகளித்தது. அந்த நேரத்தில் என் மனம் அடைந்த நிம்மதியை எப்படி வர்ணிப்பது என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.
அதுமட்டுமின்றி எனது தோள்களில் இருந்து
'பெரிய சுமை' கீழிறக்கி வைக்கப்பட்டது போல் உணர்ந்தேன். முன்போல நான் ஷாப்பிங் செய்வதிலும், ஒப்பனை செய்து கொள்வதிலும், கூந்தலைச் சரி செய்து கொள்வதிலும் எனது நேரத்தையெல்லாம் வீணடிப்பது நின்றுபோனது. நான் முழு சுதந்திரம் அடைந்துவிட்டதாக என்று உணர்ந்தேன்.
''பெண்களை அவமதிக்கும் மதம்'' என்று சிலரால் வர்ணிக்கப்படுகின்ற இஸ்லாத்தை உளப்பூர்வமாக முழு மனதோடு ஏற்றுக்கொண்டேன். அவர்கள் சொல்லும் காரணமே, இஸ்லாத்தை எனக்கு இன்னும் நெறுக்கமாக்கியது. முஸ்லீமான ஒருவரை நான் திருமணமும் செய்து கொண்டேன். நான் ஹிஜாபை (Hijab) அணிந்து கொண்டாலும் நிகாபை (Niqab) அணிந்து கொள்ள வேண்டும் என்பதிலேயே மிகவும் ஆர்வமாக இருந்தேன்.
எனது முஸ்லீம் கணவரிடம் எனது எண்ணத்தை வெளிப்படுத்தியபோது 'ஹிஜாப்' அணிந்து கொள்வதுதான் பெண்களுக்கு கடமையே தவிர 'நிகாப்' அல்ல, என்றார். (ஹிஜாப் என்பது பெண்கள் முகம் மற்றும் கை கால்கள் தவிர உடம்பின் மற்ற பகுதிகளை மறைப்பது, 'நிகாப்' என்பது முகத்தையும் மறைப்பது கண்களைத்தவிர)
ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு என் கணவரிடம் மறுபடியும் எனது 'நிகாப்' இன் மீது உள்ள ஆசையை தெரிவித்தேன். இம்முறை நான் சொன்ன காரணத்தை அவரால் மட்டுமல்ல வேறு எவராலும் தட்ட முடியாது. ஆம்! என் பிரியமுள்ள கணவரிடம் சொன்னேன், "நான் 'நிகாப்' அணிவது அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும்,
அத்துடன் அதிக அடக்கமாக இருப்பதனால் என் மன அமைதியையும் அது அதிகப்படுத்தும் என்று நம்புகின்றேன்'' என்றேன்.
இம்முறை என் இனிய கணவர் என் கருத்துக்கு மறுப்பேதும் சொல்லாமல் உடனே ஏற்றுக் கொண்டார். அதுமட்டுமின்றி என்னை உடனே கடை வீதிக்கு அழைத்துச்சென்று அதனை வாங்கியும் கொடுத்து விட்டார். அல்ஹம்துலில்லாஹ்.
நான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர். அந்த ஒப்பாரியுடன் எகிப்து நாட்டு (!!!) அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு 'நிகாப்'' அணிவது பிற்போக்குத்தனம் என்று புலம்பித்தீர்த்தனர்.
பெண்களின் உரிமைக்காக போராடுவதில் நானும் சளைத்தவள் அல்ல. ஆனால் தற்போது ஒரு முஸ்லீம் பெண்மணியாக இருந்து பெண்களுக்கு கிடைக்க வேண்டிய உண்மையான உரிமைகளுக்காக போராடுகிறேன். குடும்பத்தில் பெண்களுக்கு உள்ள முக்கியத்துவம் பற்றிய கருத்துக்களை முன்னிறுத்துகிறேன். 

நல்ல முஸ்லிம்களாக இருப்பதற்கும், கணவன்மார்களுக்கு
ஆதரவு கொடுத்து பொறுப்புகளை எடுத்துக் கொள்வதற்கும், குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்து மனித சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியவர்களாக ஆக்குவதற்கு முஸ்லிம் பெண்களுக்கு என்னால் ஆனதைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். 
 
நம்மைப் படைத்த அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதற்காக, 'நிகாப்' அல்லது 'ஹிஜாப்' அணியும் நமது உரிமைக்காகப் போராடும் அதே வேளையில்; ஹிஜாப், நிகாப் அணியாத பெண்களுக்கு, நாம் இதை ஏன் அணிய வேண்டும், ஏன் இது நமக்கு மிகவும் அவசியம் என்பதை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, '
ஸ்டைல்' என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது. இதை நான் முஸ்லிமல்லாத முன்னாள் பெண்மணியாகவும் உரக்கச்சொல்வேன். 
 
எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் 'நிகாப்' அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, 'நிகாப்' அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். 

ஏனெனில் அவர்கள் மனதில் ''அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது'' என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது. அடித்துச்சொல்வேன் பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு 'நிகாப்' தான் என்று. 


சௌத் பீச்சில் என் நீச்சலுடையையும், கவர்ச்சியான மேற்கத்திய வாழ்க்கை முறையையும் கழற்றி எறிந்து விட்டு, என்னைப் படைத்தவனோடு நிம்மதியாக இருப்பதிலும் சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழும் ஒரு பெண்ணாக என்னைச் சுற்றியிருப்பவர்களோடு வாழ்வதில்தான் எனக்கு அளவிலா மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கிறது. அதனால்தான் நான் 'நிகாப்' அணிவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதை அணியும் உரிமைக்காக நான் உயிரை விடவும் தயார் தான். 

நேற்றுவரை நீச்சலுடையை பெண்ணினத்தின் சுதந்திரக் குறியீடாக நினைத்திருந்தேன். ஆனால் அது முற்றிலும் தவறு. பெண் விடுதலையின்  குறியீடு 'நிகாப்'தான். அது கொடுக்கும் கண்ணியத்தை விட்டுவிட்டு, அசிங்கமான மேற்கத்திய வாழ்க்கை முறையைத் தேர்வு செய்யும் பெண்களே, ''நீங்கள் எதை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிய மாட்டீர்கள்.''
   தமிழ் மொழியாக்கம் . எம்.ஏ. முஹம்மது அலீ,

Monday, December 26, 2011

கிறிஸ்மஸ் - மறைக்கப்பட்ட உண்மைகள்

‘நத்தார் பண்டிகை’ அல்லது ‘கிறிஸ்மஸ்’– Christmas – என அழைக்கப்படும்
‘இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாள் விழா’ ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25
அன்று பெரும்பாலான கிறிஸ்த்தவர்களால் கொண்டாடப்படுகின்றது. கிழக்கு
மரபுவழி திருச்சபையினர் என்கின்ற கிறிஸ்த்தவ பிரிவினரால் ஜனவரி 7ம் நாள்
கொண்டாடப்படுகின்றது.

பிறந்த நாள் கொண்டாட்டம் அறிவுபூர்வமானதா? கிறிஸ்த்தவ நம்பிக்கையின்படி
இறைமகனுக்கே(?) பிறந்தநாளா? என்கின்ற வாதப்பிரதிவாதங்களுக்குள் நுழையாமல் கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் 25ல் கொண்டாடப்படுவது சரிதானா? என்பதை வரலாற்று ரீதியாகவும், பைபிள் மற்றும் திருக்குர்ஆன் ஒளியிலும்
ஆய்வுக்குட்படுத்துவோம்.

வரலாற்று ஒளியில் கிறிஸ்மஸ்…

கிறிஸ்மஸின் தோற்றம்
ஆரம்ப கால கிறிஸ்த்தவ சமுதாயத்தில் கிறிஸ்மஸ் உள்ளிட்ட எந்தவொரு
பிறந்தநாள் கொண்டாட்டங்களும் கொண்டாடப்படவில்லை. கிறிஸ்மஸ் நாள் மரபுவழி வருவதேயன்றி இயேசுவின் உண்மையான பிறந்தநாள் அல்ல. மேலும், கிறிஸ்மஸ் மரம், கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் கேக் போன்ற அனுஸ்டானங்கள் புராதன பாபிலோனிலிய மக்களின் கலாசாரம் என என்சைக்ளோபீடியா -The world book Encyclopedia – The Encyclopedia of Religion and Ethics – the
Encyclopedia Americana – கூறுகின்றது.

விக்கிபீடியா தருகின்ற தகவலின் அடிப்படையில், இத்தாலி போன்ற நாடுகளில்
காணப்பட்ட ‘சட்டர்நாலியா’ (சடுர்நலியா பண்டிகை) – Saturnalia –மற்றும்
உரோமர்களால் டிசம்பர் 25ல் கொண்டாடப்பட்டு வந்த வெற்றி வீரன் சூரியன்
(Sol- Indicts) என்றழைக்கப்பட்ட சூரியக் கடவுளின் பிறந்தநாளான நட்டாலிஸ்
சோலிஸ் இன்விக்ட்டி- Natalis Solis Invicti – (சோல் இன்விக்டுஸ்)
என்கின்ற குளிர்கால பண்டிகைகளை தழுவியே கிறிஸ்மஸ் தோன்றியதாக
கூறுகின்றது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில்,கிறிஸ்த்தவ எழுத்தாளர்கள் இயேசுவின் பிறப்பை சூரியனின் மீள் உதயத்தோடு ஒப்பிட்டுள்ளதையும்,
இயேசு சோல்-இன் சூரியக்கடவுளாக சித்தரிக்கப்பட்டுள்ளதையும், சிப்ரியன் –
Cyprian- என்கின்ற கிறிஸ்த்தவ மதபோதகரின் “எவ்வளவு அதிசயச் செயல் சூரியன்
பிறந்த நாளில்…. கிறிஸ்த்துவும் பிறந்தது….” “ Oh ,how wonderfully acted
Providence that on that day on which that Sun was born . . . Christ
should beborn…” என்கின்ற வாக்குமூலத்தையும்,
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இதனை முழுக்க முழுக்க உறுதிப்படுத்துகின்ற
“சோல் இன்விக்டுஸ்- கிறிஸ்மஸின் தொடக்கத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு
செய்துள்ளது” என்கின்ற கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தின் வாக்குமூலம்
போன்ற சான்றுகளை கோடிட்டு காட்டுவதன் மூலம், சூரியக் கடவுளின் பிறந்தநாள்
உள்ளிட்ட குளிர்கால கொண்டாட்டங்களை அடிப்படையாக வைத்து மிகமிக பிற்பட்ட காலத்தில் தோன்றிய ஒரு பண்டிகையே கிறிஸ்மஸ் என்கின்ற கருத்தை உறுதி செய்கின்றது.

‘செக்டுஸ் ஜுலியஸ் அப்ரிகானுஸ்’ – Sextus Julius Africanus – என்கின்ற
மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்த்தவ எழுத்தாளரால் இயேசு கிறிஸ்து
டிசம்பர் 25ல் பிறந்தார் என்கின்ற கருத்து வரலாற்றில் முன்
வைக்கப்படுகின்றது. இதற்கு ‘ஒரிஜென்’- Origen – போன்ற ஆரம்பகால முக்கிய
கிறிஸ்த்தவ மதகுருக்களே மிககடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். கிறிஸ்த்தவ
இறையியல் அறிஞரான ஒரிஜென்,“பார்வோன்- pharaoh – அரசனைப் போன்று இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாளை கொண்டாடக்கூடாது என்றும், பாவிகளே அவ்வாறு செய்வதாகவும், புனிதர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்” என்றும் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டார்.

ரோமப் பேரரசன் ‘கான்ஸ்டான்டின்’ – Constantin – காலத்தில் இடம் பெற்ற
நைசியன் திருச்சபை பிரகடனத்தில் -Declaration of Nicean Council –
சூரியக்கடவுளின் பிறந்தநாள் -டிசம்பர் 25- இயேசுநாதரின் பிறந்தநாளாகவும்,
சூரியக் கடவுளின் பெயரால் உரோமர்கள் கொண்டாடிய கொண்டாட்டங்கள்-
கிறிஸ்த்துவின் பிறந்தநாள் கொண்டாட்டங்களாகவும் அறிவிக்கப்பட்டது.
இக்கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் ஒரேகடவுள் மூன்று நிலைகளில் உள்ளார்
என்கின்ற கொள்கையை அடிப்படையாக கொண்ட கிறிஸ்த்தவ பிரிவினரால் கி.பி.378ல் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது. கி.பி. 379ல் கொன்ஸ்தாந்துநோபலில் –
Constantinople – அறிமுகப்படுத்தப்பட்ட கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் பெரும்
சர்ச்சையை தோற்றுவித்ததாக எட்வர்ட் கிப்பன் – Edward Gibbon -என்கின்ற
ஆய்வாளர்குறிப்பிடுகிறர். வழக்கொழிந்து போன கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்
கொன்ஸ்தாந்துநோபலில் கி.பி. 400 காலப்பகுதியில் ‘யோன் கிறிசொஸ்டம்’ -John
Chrysostom- என்கின்ற கிறிஸ்த்தவ போதகரால் மீண்டும்
உயிர்ப்பிக்கப்படுகின்றது. மேலும், பேரரசன் சார்லிமெஜி -Charlemagie-
என்பவன் கி.பி 800ம் ஆண்டு கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டிக்கொண்டதாலும்,
கி.பி. 1066 ல் முதலாவது வில்லியம் (இங்கிலாந்து)- William I of England–
மன்னன் கிறிஸ்மஸ் நாளில் முடிசூட்டிக்கொண்டதாலும் கிறிஸ்மஸ்
கொண்டாட்டங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகின்றது. மத்திய கால
கிறிஸ்த்தவ சீர்திருத்த திருச்சபைகள் “கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள்-
பாப்பரசின் ஆடம்பரம்” என்று விமர்சித்தனர். தூய்மைவாதிகள் -Puritans-
எனும் கிறிஸ்த்தவ பிரிவினர் “கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை விலங்கின்
(சாத்தானின்) கந்தல் துணி” என்று மிகக் கடுமையாக விமர்சித்தனர். மேலும்
கி.பி. 1647ல் தூய்மைவாத கிறிஸ்த்தவ மறுசீரமைப்பினர் எனும் கிறிஸ்த்தவ
பிரிவினர் முதலாம் சார்ல்ஸ் மன்னனின் உதவியோடு இங்கிலாந்தில் கிறிஸ்த்தவ
கொண்டாட்டங்களை தடைசெய்தனர். இன்றும் கூட சில அங்கிலிக்கன் திருச்சபை
கிறிஸ்த்தவ போதகர்களும், ஆர்மினியர்களும், செர்பியர்களும் கிறிஸ்மஸ்
கொண்டாட்டங்களை அங்கீகரிப்பதில்லை..         
                                                                இன்ஷாஅல்லாஹ் தொடரும். . .

Tuesday, November 22, 2011

குகையில் தங்கிய அந்த ஏட்டுக்குரியோர்! (மறைக்கபட்ட உண்மைகள் )

'முகம்மதே! அந்தக் குகை மற்றும் அந்த ஏட்டுக்குரியோர் நமது சான்றுகளில் ஆச்சரியமானோர்' என்று நீர் நினைக்கிறீரா?'

குர்ஆன் 18 : 9

இந்த வசனத்தில் குகையில் தங்கியவர்களைப் பற்றி குறிப்பிடும் போது குகைவாசிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும். அத்துடன் குகை மற்றும் ஏட்டுக்குரியவர்கள், சுவடிக்கு உரியவர்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

அப்படியானால் ஒரு சுவடி இவர்கள் வரலாற்றோடு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஏதோ ஓர் ஏட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காக மட்டும் இவ்வாறு நிச்சயமாகக் கூறப்பட்டிருக்காது. 'அந்த ஏடு ' என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அது ஒரு முக்கியமான ஏடாக இருக்க வேண்டும். அந்த ஏடு ஒரு காலத்தில் கண்டெடுக்கப் பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே 'அந்த ஏட்டுக்குரியவர்கள்' என்று அல்லாஹ் கூறியிருக்க வேண்டும் அந்த ஏடு யாருக்குமே கிடைக்காது என்றால் 'அந்த ஏடு' என்று முக்கியத்துவப் படுத்தி இறைவன் கூறியிருக்க முடியாது.

அது என்ன சுவடி? அது என்ன ஏடு? என்பதெல்லாம் பல வருடங்களாக உலகத்திற்குத் தெரியவில்லை. ஆனால் சமீப காலங்களில் அந்த ஏடுகளில் இருந்த செய்திகள் இப்போது அம்பலமாகியுள்ளன.

'சாவுக் கடல் சாசனச் சுருள்கள்' என்ற தலைப்பில் 1998 ஆம் ஆண்டு ஒரு மாதத்தில் பல தடவை பிபிசி யில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டது. அதில் சொல்லப் பட்ட செய்திகள் கேட்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியின் முதல் ஒளி பரப்பு 1993 ஆம் ஆண்டிலேயே காட்டப் பட்டதாகவும் சொல்லப் பட்டது. அதன் விபரங்கள்

1947 ஆம் ஆண்டு ஒரு நாள் ஆடு மேய்க்கும் ஓர் அரபுச் சிறுவன், காணாமல் போன தனது ஆட்டுக் குட்டி ஒன்றைத் தேடி சாவுக் கடலை ஒட்டிய ஜோர்டான் நாட்டு மலைப் பகுதிகளில் தேடி அலைந்தான். அந்த மலைப் பகுதி 'கும்ரான் மலைப் பகுதி' என்று அழைக்கப் படுகிறது. ஆட்டுக் குட்டியை தேடிய சிறுவன் அங்கிருந்த குகைக்குள் பார்த்த போது மண் பாண்டங்களில் சுருட்டி நிரப்பி வைக்கப் பட்ட தோல் ஆவணங்களைக் கண்டிருக்கின்றான். அவைகளில் சிலவற்றை எடுத்து வந்து செருப்புத் தொழிலாளியான தன் தந்தையிடம் கொடுக்க, மறுநாள் தந்தையும் மகனும் சேர்ந்து குகைக்குள் இருந்த அனைத்துச் சுருள்களையும் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

அந்தப் பழைய தோல்களைத் தமது செருப்புத் தொழிலுக்குப் பயன் படுத்த எண்ணிய அந்தச் சிறுவனின் தந்தை தோல்களில் ஹிப்ரு மொழியில் எழுதப் பட்டிருந்த வார்த்தைகளின் பொருள் புரியாமல், அதை அப்பொழுது ஜோர்டான் மன்னர் ஆட்சியிலிருந்த கிழக்கு ஜெருஸலத்தைச் சேர்ந்த ஒரு பழைய புத்தகக் கடைக்காரரிடம் காண்பித்திருக்கிறார்.

ஓரளவு ஹிப்ரு மொழியறிந்த அந்தக் கடைக்காரர் அந்தச் சுருள்கள் பழங்காலச் செய்திகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதி, ஒரு சில தீனார்களுக்கு அத்தனை சுருள்களையும் அந்த செருப்புத் தொழிலாளியிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டார்.

கிறித்தவரான அந்தப் புத்தகக் கடைக்காரர் அந்தச் சுருள்களை அந்நகரில் இருந்த கிறித்தவ ஆலயத்தில் ஒப்படைத்து விட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில் சுருள்கள் கண்டெடுக்கப்பட்ட விஷயம் வெளிப் பட்டது. அதில் உள்ள செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு யூதர்களும் முஸ்லிம்களும் ஆர்வம் காட்டினர்.

அப்போது ஜோர்டானை ஆட்சி செய்த மன்னர் ஹூசைன், அந்தச் சாசன சுருள்கள் முஸ்லிம்,யூத,கிறித்தவர்கள்
அடங்கிய ஒரு குழுவிடம் பொதுவாக ஒப்படைக்கப் பட்டு அவை ஆராயப் பட வேண்டும் என்று விண்ணப்பித்தார்.

ஆனால் கிறித்தவப் பாதிரியார்கள் அது தனியார் சொத்து என்று வாதிட்டு அதைப் பொதுவில் வைக்க மறுத்து விட்டனர்.கிறித்தவர்களில் பல அறிஞர்களுக்கும் கூட அவற்றைப் படிப்பதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப் படவில்லை.

இடைப்பட்ட அய்ந்தாண்டு காலங்களில் ஜெருஸலத்தில் இருந்த பாதிரிமார்கள் சில குழுக்களை ஏற்படுத்தி கும்ரான் மலைப் பகுதிகளில் இருந்த பொதுங்குகளில் தேடியலைந்து அங்கிருந்த சாசனச் சுருள்கள் அனைத்தையும் தங்கள் கைவசம் கொண்டு வந்து விட்டனர்.

1952 - ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்துச் சுருள்களும் கிறித்தவப் பாதிரிமார்கள் கையில் போய்ச் சேர்ந்து விட்டன.பதினைந்தாயிரம்Manuscripts (கையெழுத்துப் பிரதிகள்) இவ்வகையில் இருப்பதாக தற்பொழுது கணக்கிட்டுள்ளனர்.

கடந்த அய்ம்பதாண்டுகளுக்கு மேல் அந்தச் சாசனச் சுருள்களில் அடங்கிய செய்திகளை, ஒரு குறிப்பிட்ட கிறித்தவப் பாதிரிகள் அடங்கிய குழு இருட்டடிப்பு செய்து வந்தது. பல கிறித்தவ அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் அதைப் படிப்பதற்கு ஆர்வம் கொண்டு கேட்ட போதெல்லாம், அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப் பட்டது.

சாசனச் சுருள்களைக் கைவசம் கொண்ட குழுவில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவருக்குப் பதில் அக்குழுவில் உள்ள மற்றவர்களால் வேறொரு பாதிரியார் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு மட்டுமே அதைப் படிப்பதற்கு உரிமை வழங்கப் பட்டு வந்தது.

இவ்விதமாகவே இவ்வளவு காலமும் அந்த சாசனச் சுருள்களின் செய்திகள் ரகசியமாக வைக்கப்பட்டு வந்தன.இந்த இரகசியக் காப்பில் போப்பாண்டவரின் வாட்டிகன் சபை முன்னணியில் இருந்தது.

தோலில் பதிந்த அந்தப் பழங்காலச் சாசனம் அழிந்து விடும் நிலையைக் கண்ட அதன் ரகசியக் காப்பாளர்கள் அச்சாசனங்களை Microfilm (நுண்ணிய படச்சுருள்) எடுத்தார்கள்.

அதன் ஒரு செட் போட்டோ காப்பிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருக்கும் ஒரு நூலகத்துக்கு பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப் பட்டது.

1990 ஆம் ஆண்டு அந்த நூலகத்துக்குத் தலைவராக அய்ஸ்மேன் என்ற அறிஞர் நியமிக்கப் பட்டார். அவர் முன்பே அந்த சாசனச் சுருள்களைப் படிப்பதற்குஆர்வம் காட்டி, அதற்கான வாய்ப்பு மறுக்கப் பட்டவர்.

இப்போது தனது அதிகாரத்தில் உள்ள நூலகத்தில் இருந்து சாசனச் சுருள்களின் நுண்ணியப் போட்டோக்களைப் பெரிய அளவில் போட்டோ எடுக்கச் செய்து அவற்றைப் படித்தார்.

அவற்றைப் படித்தபோது தமக்கு வியப்பு ஏற்பட்டதாக வாக்கு மூலம் அளிக்கின்றார். இத்தனைக் காலமும் கிறித்தவ சபை அந்த சாசனச் சுருள்களை மற்றவர்களுக்குக் காட்டாமல் இருந்ததன் உள் நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொண்டதாகக் கூறுகிறார்.

மைக்கேல் வைஸ் என்னும் சிகாகோ பல்கலைக் கழக ஹிப்ரு மொழிப் பேராசிரியர் ஒருவரின் உதவிக் கொண்டுஅந்த சாசனச் சுருள்களில் முக்கியமானது என்று அவர் கருதிய100 Manuscripts (கையெழுத்துப் பிரதி) களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.

அந்தப் புத்தக வெளியீடு கிறித்தவ உலகத்தை உலுக்கியது என்றும், குறிப்பாக கிறித்தவ மத ஆலயங்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயின என்றும் அந்த டாக்குமென்டரியின் செய்தியாளர் கூறுகிறார்.

மேற்கத்திய மக்களின் மத நம்பிக்கையைத் தகர்ப்பதாக அந்தப் புத்தக வெளியீடு இருந்தது என்றும் ஆகவே அந்த இரு அறிஞர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படுவார்கள் என்ற அச்சம் இருந்தது என்றும் அதன் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

அப்படி எது நடந்தாலும் அதைத் தாங்கள் எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் இதற்கு அஞ்சி ஒரு மிகப் பெரும் பேருண்மையை உலகத்திலிருந்து தாங்கள் மறைக்க விரும்பவில்லை என்றும் அவ்விரு அறிஞர்களும் வெளிப்படையாகக் கூறுவதையும் அந்தத் தொலைக் காட்சி டாக்குமெண்டரி பதிவு செய்து காட்டுகிறது.

கிறித்தவ மத ஆலயங்களில் இப்போது ஏசுவின் பெயரால் செய்யப் படும் மதச் சடங்குகளும் வழிபாடுகளும் ஆரம்ப கிறிஸ்தவர்களிடையே நடை பெறவில்லை என்பதையே சாசனச் சுருள்கள் நிரூபிக்கின்றன.

இந்தச் சடங்குகளுக்கும், ஏசுவின் பிரச்சாரத்திற்கும் கொள்கை கோட்பாடுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவை அனைத்தும் 'பவுல்' என்பவரால் பிற் காலத்தில் ஏற்படுத்தப் பட்டவை. மொத்தத்தில் இப்போது ஏசுவின் பெயரால் சொல்லப் படும் அனைத்து கிறித்தவக் கொள்கைகளும் பொய்யானவை. அவற்றை ஏசுவிற்கு அடுத்த தலை முறையில் வாழ்ந்த உண்மையாளர்களின் வாழ்வில் காண முடியவில்லை.

மேற்கண்டவாறு அறிஞர் அய்ஸ்மேன் கூறி வரும் போது, ஒரு யூதரிடம் அவற்றைப் பற்றி வாதம் செய்யும் போது, “It confirms Quran” அது குர்ஆனை உறுதிப் படுத்துகிறது என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார். அவ்விடத்தில் அந்த வாதம் நிறுத்தப் பட்டு மறு காட்சி காட்டப் படுகிறது.

இதே முறையில் மைக்கேல் வைஸ் என்ற அறிஞரும் பேசும் போது “It confirms Islam” அது இஸ்லாத்தை உறுதிப் படுத்துகின்றது என்று கூறுகின்றார். இங்கும் காட்சி மாற்றப் படுகின்றது.

ஆகவே இந்த சாசனச் சுருள்கள் எப்படி குர்ஆனையும் இஸ்லாத்தையும் உண்மைப் படுத்துகின்றன என்று அவர்கள் கூறுகின்றார்கள் என்பதைப் பார்வையாளர்கள் அறிய முடியவில்லை. அந்தச் செய்தியிலிருந்து நாம் ஆச்சரியமான ஓர் உண்மையைத் தெரிந்து கொள்கிறோம்.

ஏசு அவர்களுக்கு இறைவன் இஞ்சீல் எனும் வேதத்தை வழங்கியதாக திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. ஆனால் கிறித்தவ சமுதாயத்திடம் அந்த வேதம் நிச்சயமாக இல்லை எனலாம்.

ஏனெனில் பைபிளின் புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்குக் கடவுள் வழங்கியதன்று. மாறாக ஏசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதிய குறிப்புகள்தான் புதிய ஏற்பாடு.

பைபிளின் பல இடங்களில் ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தை ஏசு பிரசங்கித்தார் என்று கூறப்பட்டுள்ளது. எந்த இறை வேதத்தை கிறித்தவர்கள் மறைத்தார்களோ அதைத்தான் ஏசுவின் வழி வந்த நல்ல மனிதர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று குகையில் தங்கினார்கள் என்று முடிவு செய்யப் போதுமான காரணம் இருக்கிறது.

'குர்ஆனை ஒத்திருக்கிறது' என்பது தான் ஆந்தச் சுருள்களைப் படித்த கிறித்தவ அறிஞர்களின் கருத்தாகும்.

'இஞ்சீல்' எனும் வேதத்தைத் திருக்குர்ஆன் மெய்ப்பிப்பதாக திருக்குர்ஆனும் பல இடங்களில் குறிப்பிடுகின்றது. அந்த ஏடுகளை வாசித்த பாதிரியார்கள் திட்டமிட்டு மறைத்ததும் இந்தக் கருத்தை உறுதிப் படுத்துகின்றது.

மனிதர்களால் எழுதப்பட்ட ஏட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து இறைவன் கூறியிருக்க மாட்டான் என்பதும் இக்கருத்தை மேலும் உறுதிப் படுத்துகின்றது.

Wednesday, November 9, 2011

ஃபிர்அவ்னின் உடல்

பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி !



1898 ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மம்மி 3000 ஆண்டு பழமை மிக்க அன்றைய எகிப்தை ஆண்டு வந்த இரண்டாம் ரம்சீஸ் என்ற ஃபிர்அவ்னின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. தொல் பொருள் ஆராய்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளித்து வந்த ஃப்ரான்சு நாடு அந்த உடலை ஆராய்ச்சி செய்வதற்காக எகிப்திடம் கேட்டு வாங்கியது. மருத்துவ அறிவியல் துறை ஆய்வாளரான டாக்டர் மோரிஸ் புகை தலைமையிலான குழு அவ்வுடலை ஆய்வுக்கு உட்படுத்தியது. உடலில் படிந்திருந்த உப்பின் துணிக்கைகளை வைத்து இது கடலில் மூழ்கி இறந்தது என்ற முடிவுக்கு வந்தனர். ஆய்வின் முடிவில் அவ்வுடல் மூவாயிரம் ஆண்டு பழமையான எகிப்தை ஆண்ட மன்னனின் உடல் என்று கண்டறியப்பட்டது! அந்நேரம் பாதுகாக்கப்படுவதாக இறைவன் வாக்களித்திருக்கும் ஃபிர்அவ்னின் உடல் பற்றிய பேச்சு சிந்தனையாளர்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது. இது பற்றிய செய்தி மோரிஸ் புகையின் கவனத்துக்கும் வந்தது. 1898 ல் கண்டெடுக்கப்பட்ட மம்மியைக் குறித்து 1400 வருடங்களுக்கு முன்பே கூறப்பட்டதா? இது எப்படி சாத்தியமாகும்? என்று சிந்தனை செய்தார் மோரிஸ் புகை.

சிந்தனையில் மோரிஸ் புகை!

திருக்குர்ஆன் கடலில் மூழ்கி இறந்த பின்னர் ஃபிர்அவ்னின் உடல் பாதுகாக்கப்படும் என்று பிரகடனம் செய்கிறது. தோரா மற்றும் பைபிளின் பழய ஏற்பாடும் மோசேயின் காலத்தில் இஸ்ரவேலர்களைக் கொடுமைப் படுத்திய பர்வோன் மன்னனைப் பற்றியும் இறுதியில் அவன் கடலில் மூழ்கி இறந்தான் என்றும் கூறுகிறது. இதோ என் முன்னாலிருப்பது அக்காலத்தில் இறந்து விட்ட உடல் அல்லவா? என் ஆராய்ச்சியின் மூலம் நான் அறிந்திருக்கும் முடிவை 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது (ஸல்) எவ்வாறு அறிந்து கொண்டார்கள்? பைபிளில் தேடினார் மோரிஸ் புகை. பர்வோன் மன்னனின் முடிவைப் பற்றி யாத்திராகமம் இவ்வாறு கூறுகிறது.
ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. (யாத்திராகமம் 14 :28)

இவ்வுடல் பாதுகாக்கப்படும் என்பதற்கான எந்தக் குறிப்பையும் பைபிள் வழங்கவில்லை.

ஆய்வுக்குப் பின்னர் பர்வோன் மன்னனின் உடல் விலை உயர்ந்த கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டு தனி மரியாதையுடன் எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மோரிஸ் புகை சிந்தனையில் ஆழந்தார்! இவ்வுடல் பாதுகாக்கப்படும் என்ற குர்ஆனின் செய்தி அவரை சிந்திக்கத் தூண்டியது. இதே வேளையில் தான் சவூதி அரேபியாவில் மருத்துவ அறிவியல் சம்மந்தமான ஒரு மாநாடு நடை பெற்றது. மோரிஸ் புகை அதில் கலந்து கொண்ட போது தான் கண்டு பிடித்த உண்மையையும் தண்ணீரில் மூழ்கி இறந்த பின்னர் பாதுகாக்கப்பட்ட உடலைக் குறித்தும் இஸ்லாமிய அறிஞர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அங்கிருந்த அறிஞர்களில் ஒருவர் திருக்குர்ஆனைத் திறந்து கடலைக் கடந்து செல்லும் இஸ்ரவேலர்களைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற ஃபிர்அவ்ன் மன்னன் மூழ்கடிக்கப்பட்டதையும் அவனது உடல் பின்வரும் தலைமுறைக்கு ஓர் அத்தாட்சி என்ற நிலையில் பாதுகாக்கப்படும் என்ற இறைவனின் பிரகடனத்தை வாசித்துக் காட்டினார். அவ்வசனம்
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்"

(அல்-குர்ஆன் 10: 92)


இவ்வசனம் மோரிஸ் புகை அவர்களிடம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அங்கு கூடியிருந்தவார்களுக்கு முன்னால் அவர் அறிக்கையிட்டார்! அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹ்! வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்!

கெய்ரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட மம்மிகளில் ஃபிர்அவ்னின் உடல் மட்டும் வித்தியாசமானதாக உள்ளது. மற்றவை ரசாயன திரவங்களைக் கொண்டும் துணிகளில் பொதிந்தும் வைக்கப்பட்டிருக்கும் போது ஃபிர்அவ்னின் உடல் மட்டும் அப்படியே பாதுகாக்கப்படுகிறது! திருக்குர்ஆனின் அறைகூவலை உண்மைப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த சாட்சியைக் கண்கூடாகக் கண்ட பின்னரும் மக்களில் பெரும்பாலோர் இன்னும் உறங்கிக் கொண்டுதான் உள்ளனர். திருக்குர்ஆனின் கூற்று எவ்வளவு உண்மை!

”நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்" (அல்-குர்ஆன் 10:92

Tuesday, November 8, 2011

எகிப்திய எழுச்சியின் பின்னணியிலிருந்த இளம் பெண்மணி அஸ்மா மஹ்ஃபூஸ்

முபாரக்கின் மூன்று தசாப்த சர்வாதிகார ஆட்சியை ஆட்டங்காண வைத்து அவரை பதவியிலிருந்து விரண்டோட வைத்த மக்கள் எழுச்சிக்கு பின்னணியிலல் இருந்து செயற்பட்டவர்களில் ஒருவர்தான் அஸ்மா மஹ்ஃபூஸ் என்ற 26 வயதான இளம் யுவதி.கெய்ரோ அமெரிக்க பல்கலைககழகத்தில் வர்த்தக முகாமைத்துவத்தில் பட்டம் பெற்றவர்.

எகிப்தின் இந்த எழுச்சி இப்படித்தான் ஆரம்பமானது.
அஸ்மா மஹ்ஃபூஸ் தஹரீர் சதுக்கத்தில் ஒன்று சேர்ந்து முபாரக்கின் அடக்குமுறைக்கு எதிராக 2011 ஜனவரி 25ம் திகதி அன்று அணி திரளுமாறு எகிப்திய மக்களை உருக்கமாக அழைக்கும் ஒரு வீடியோவை தனது வலைப்பூவில் (புளக்கில்) பதித்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு எகிப்தின் அல்மஹல்லா அல் குப்ரா நகரத்தில் இடம்பெற்ற தொழிலாளர் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்து, ஆதரவு தெரிவித்து துவக்கப்பட்ட ‘ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம்’ என்ற ஃபேஸ் புக் குழுமத்தின் ஸ்தாபகர்களில் இந்த அஸ்மா மஹ்ஃபூசும் ஒருவர்.
இவர் பதித்த வீடியோ எகிப்தியர்களை எழ வைத்ததது.துனீசியாவில் போஅஸீஸி என்ற இளைஞன் தனக்குத்தானே வைத்துக்கொணட தீ அந்த நாட்டின் எதேச்சதிகார தலைமையை எப்படி அதிர வைத்தது என்பதையும் அந்த தூனிசிய புரட்சி ஏற்படுத்திய உத்வேகத்தில் எகிப்தில் தங்களை தாங்களே தீவைத்துக் கொளுத்திய 4 இளைஞர்களைப் பற்றிய தகவல்களுடன் அந்த வீடியோ இணையத்தில் வேகமாக உலாவியது.
அந்த வீடியோவில் அஸ்மா இப்படி உரையாற்றினார்,
“எகிப்தில் துனீசியாவைப் போல் புரட்சியை ஏற்படுத்த வேண்டுமென்ற ஆர்வத்தில் நான்கு இளைஞர்கள் தங்களை தாங்களே தீவைத்துக் கொளுத்தியுள்ளனர்.
அந்த இளைஞர்கள் சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள் அவர்கள். அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். அவர் பாவம் புரிந்துவிட்டதாகவும். வீணாக தனது உயிரை பலிகொடுத்துவிட்டார் என்றும். அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிப்பானாக! என்றும் சிலர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு?”
“நாட்டில் ஒரு மாற்றத்தை வேண்டி தனது உயிரை தியாகம் செய்த அந்த இளைஞருக்கு ஆதரவு தேடி நான் தனியாக தஹ்ரீர் சதுக்கத்திற்கு சென்று சுலோகங்களை உயர்த்திப் பிடிக்கப்போகிறேன் என்று ஃபேஸ்புக்கில் ஒரு தகவலை பதிவு செய்தேன். ஒரு சிலராவது எனக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என நினைத்தேதன். ஆனால், மூன்று இளைஞர்கள் மட்டும் எனக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்தனர். எங்களுக்கு பின்னால் போலீஸ் கவச வாகனங்கள் அணிவகுத்து வந்தன.”
“ஹுஸ்னி முபாரக்கின் குண்டர் படையினரும், அதிகாரிகளும் எங்களை அச்சுறுத்தினர். பலம் பிரயோகித்து எங்களை அகற்றினர். சுயமாக தங்களை தீவைத்துக் கொளுத்தியவர்கள் மனநோயாளிகள் என அவர்கள் தெரிவித்தனர். மனநோயாளிகளாகயிருந்தால் ஏன் அவர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்கு சென்று தீவைக்கவில்லை?” அஸ்மா வினா தொடுக்கிறார்
“ஜனவரி 25-ஆம் தேதி உங்கள் அனைவரையும் தஹ்ரீர் சதுக்கத்திற்கு அழைக்கத்தான் இந்த வீடியோவை பதிவு செய்கிறேன்.உங்களுக்கு தன்னம்பிக்கை இருக்குமானால், இந்த நாட்டில் கண்ணியமாக வாழ விருப்பம் இருக்குமானால் ஜனவரி 25-ஆம் தேதி போராட்டத்தில் நாம் குதிக்கவேண்டும். அரசியல் உரிமைகள் குறித்து ஒன்றும் நான் பேசவில்லை. மனித உரிமைகளாவது எமக்குக் கிடைக்கவேண்டும்.
உங்களில் யார் வந்தாலும், வராவிட்டாலும் நான் தனியாகவே தஹ்ரீர் சதுக்கத்திற்குச் செல்வேன். தீக்குளிப்பதற்காக அல்ல. என்னை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றாலும் பரவாயில்லை.
நீங்கள் ஆணாக உங்களை கருதினால் என்னுடன் வாருங்கள்.
இந்த செய்தியை நீங்கள் எஸ்.எம்.எஸ், ட்விட்டர் போன்ற இணையதள சமூக வலையமைப்புகள் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு அனுப்புங்கள்.” -
புரட்சி ஒன்றுக்கு போடப்பட்ட இந்த விதை எகிப்திய மக்கள் அனைவரினது உள்ளங்களிலும் ஆழமாக வேர் விட்டது. அஸ்மா மஹ்ஃபூஸின் அரசியல் மாற்றத்திற்கான இந்த அழைப்பு எகிப்தின் எட்டுத் திக்கும் வேகமாக பரவியது. இளைஞர்களின் இதயங்களை ஒன்றிணைத்து ஜனவரி 25-ஆம் தேதி தஹ்ரீர் சதுக்கத்தில் ஒன்றுக் கூட்டியது.
வீடியோ காட்சியின் இறுதியில் அவர் உருக்கமாக வேண்டுகிறார்
“அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த சக்திக்கும் அஞ்சாதீர்கள்.
“எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்…” என தனது திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான்.
ஜனவரி 25-ஆம் தேதி நான் தஹ்ரீர் சதுக்கத்திற்கு செல்வேன். பின்னர் நான் உரக்கக் கூறுவேன் “ஊழல் ஒழியட்டும்! முபாரக் அரசு ஒழியட்டும்! என ந◌ான் கோஷமிடுவேன்”
இது தான் அஸ்மாவின் வேண்டுகொள்.
இந்த இளம் யுவதியின் வேண்டுகொளுக்கு எகிப்திய மக்கள் செவி சாய்த்தார்கள்.
போராடினார்கள்.
அமரிக்கா, இஸ்ரேல், அரபு நாடுகளின் ஆசிர்வாத்தோடு வாழ்ந்த முபாரக்கின் ஆட்சி முற்றுப்பெற்றிருக்கிறது.
ஆனால் அதிகாரத்தை பங்கு போட்டுக்கொள்ள பலர் முண்டியடித்துக் கொண்டு முன் வந்துக்கொண்டிருக்கின்றார்கள்.
எகிப்தின் எதிர்காலம் எப்படி அமையும்..?
பொறுத்திருந்து பார்போம்.

Friday, June 17, 2011

ஏகத்துவம் ஓர் வரலாற்றுப் பார்வை

ஏகத்துவம் ஓர் வரலாற்றுப் பார்வை.
 
RASMIN M.I.Sc
 
உலக வரலாற்றில் தோன்றிய மதங்கள் கொள்கைகள் எல்லாம் ஒரு காலத்தோடு முடிந்து போய் அந்தக் கொள்கைகள் இருந்த இடமே இல்லாமல் போன வரலாறுகள் நிறையவே உண்டு. அந்தக் கொள்கைகளின் நம்பகமின்னையே இதற்கான பிரதான காரணமாகும்.

ஆனால் இஸ்லாம் இந்த உலகில் என்று தோன்றியதோ அன்றிலிருந்து இன்று வரை எந்த ஒரு தோழ்வியும் இன்றி வெற்றிக் கொடி நாட்டிய வரலாறு அனைவரும் அறிந்ததே!

இஸ்லாம் இப்பயெல்லாம் வெற்றிக் கொடி நாட்டியதற்கான காரணம் வரலாறு நெடிகிலும் மிகத் தெளிவாகவே இருக்கிறது.

நபிமார்களின் இறையச்சம், நேர்மை, நம்பகத்தன்மை, வார்த்தைத் தூய்மை இவைகளே இந்த இஸ்லாமிய மார்க்கம் இன்றும் நிலைப்பதற்கான முக்கிய காரணங்களாகும்.

அதிலும் இஸ்லாமிய மார்க்கம் சொல்லும் கொள்கை மற்ற அனைத்து மதங்களும், சித்தாங்களும் கொள்கைகளும் சொல்லும் அடிப்படைத் தத்துவத்துடன் நேர் மாறாக மோதும் கொள்கையாக இருக்கிறது.

அதுதான் அல்லாஹ்வைத் தவிர மற்ற எவரையும் வணங்கக் கூடாது என்பதும் நபி (ஸல்) அவர்கள் இறைவனின் திருத்தூதர் என்பதுமாகும்.

ஏகத்துவத்தை தனது உயிர் மூச்சாகக் கொண்ட இந்த இஸ்லாமிய மார்க்கத்தை பிரச்சாரம் செய்வதற்காக இறுதியாக அனுப்பப்பட்ட நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வரலாற்றில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அதுதான் ஏகத்துவத்திற்கு எதிரி நாட்டில் வெற்றிக் கொடி நாட்டிய முக்கிய நிகழ்வாகும்.

புகாரியில் இடம் பெற்ற ஏகத்துவத்தின் வரலாற்று நிகழ்வை அப்படியே இங்கு தருகிறோம். இந்தச் சம்பவத்தைப் பார்ப்பவர்கள் அனைவரும் ஏகத்துவத்தின் வரலாற்று வெற்றியை மிகத் தெளிவாக தமது மனதில் பதித்துக் கொள்ள முடியும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:  (மக்கா குறைஷித் தலைவர்களில் ஒருவரான) அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி) அவர்கள் என்னிடம்  தெரிவித்தார்கள்:

என்னிடமும் குறைஷி இறை மறுப்பாளர்களிடமும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹுதைபியா) ஒப்பந்தம் செய்துகொண்டிருந்த காலகட்டத்தில்  குறைஷியரின் வணிகக் குழு ஒன்று ஷாம் (சிரியா) நாட்டில் வணிகம் செய்துகொண்டிருந்தது.

குறைஷி வணிகக் குழுவினருடன் இருந்த என்னை அழைத்துவரும்படி (ரோம பைஸாந்தியப் பேரரசர்) ஹெராக்ளியஸ் ஆளனுப்பினார். நாங்கள் அவரிடம் வந்துசேர்ந்தோம். அவரும் அவருடைய ஆட்களும் "ஈலியா'வில் (பைத்துல் முகத்தஸில்) இருந்தார்கள். ரோமபுரி அரசுப் பிரதிநிதிகள் தம்மைச் சூழ்ந்திருந்த அ(ரச)வைக்கு வரும்படி எங்களை ஹெராக்ளியஸ் அழைத்தார். (நாங்கள் அங்கு போய்ச் சேர்ந்த) பிறகு (தமக்கு அருகில் வந்து அமருமாறு) எங்களை அழைத்த துடன் தம்முடைய மொழிபெயர்ப்பாளரையும் அழைத்தார்.

(பிறகு எங்களைப் பார்த்து,) "தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்த (முஹம்மத் எனும்) மனிதருக்கு உங்களில் நெருங்கிய உறவினர் யார்?'' என்று கேட்டார். நான் "நானே இவர்களில் (அவருக்கு) நெருங்கிய உறவினன்'' என்று பதிலளித்தேன்.

ஹெராக்ளியஸ் (தம் அதிகாரிகளிடம்) "அவரை என் அருகே அழைத்து வாருங்கள்; (அவருடன் வந்திருக்கும்) அவருடைய நண்பர்களையும் எனக்கருகில் கொண்டுவந்து அவரது முதுகுக்குப் பின்னால் நிறுத்துங்கள்'என்று கூறினார்.

பிறகு தம் மொழிபெயர்ப்பாளரிடம் "நான் (முஹம்மதைப் பற்றி) இவரிடம் கேட்பேன். இவர் பொய் (ஏதும்) சொன்னால் உடனே "அவர் பொய் சொல்கிறார்' என்று கூறிவிட வேண்டும் '' என அவருடைய நண்பர்களிடம் (மொழிபெயர்த்துச்) சொல் என்று சொன்னார்.

நான் பொய் சொன்னால் என் நண்பர்கள் அதைத் தெரிவித்துவிடுவார்களோ என்ற வெட்கம் மட்டும் எனக்கு அப்போது இல்லாதிருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் நபியவர்களைப் பற்றி பொய்(யானத் தகவல்களைச்) சொல்லியிருப்பேன்.

பிறகு ஹெராக்ளியஸ் என்னிடம் நபி (ஸல்) அவர்களைப் பற்றி கேட்ட முதல் கேள்வி, உங்களிடையே அந்த மனிதரின் குலம் எப்படிப் பட்டது?'' என்பதேயாகும்.

அதற்கு "அவர் எங்களில் சிறந்த குலத்தைச் சேர்ந்தவர்'' என்று கூறினேன்.

(பிறகு) அவர், "உங்களில் எவரேனும் இதற்கு முன் இப்படி(த் தம்மை "நபிஎன) எப்போதாவது வாதித்ததுண்டா?'' என்று கேட்டார்.

நான் "இல்லை' என்று பதிலளித்தேன்.

அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருக்கின்றாரா? என்று கேட்டார்.

நான் "இல்லை' என்றேன்.

அவரை மக்களில் மேட்டுக்குடியினர் பின்பற்றுகின்றனரா? அல்லது அவர்களில் பலவீனர்கள் (ஒடுக்கப்பட்டவர்கள்) பின்பற்றுகின்றனரா? என்று கேட்டார்.

அதற்கு நான், "இல்லை; பலவீனர்கள்தாம் (அவரைப் பின்பற்றுகின்றனர்)''என்று சொன்னேன்.

அவரைப் பின்பற்றுவோர் அதிகரித்துக்கொண்டே செல்கின்றார்களா? அல்லது குறைந்துகொண்டே போகின்றார்களா? என்று கேட்டார்.

நான், இல்லை; அவர்கள் (நாளுக்கு நாள்) அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்'' என்று கூறினேன்.

அவரது மார்க்கத்தில் இணைந்த பிறகு தம் புதிய மார்க்கத்தின்மீது அதிருப்தியடைந்து எவரேனும் அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?என்று கேட்டார்.

நான் "இல்லை' என்று சொன்னேன்.

அவர் இவ்வாறு (தம்மை இறைத்தூதர் என) வாதிப்பதற்கு முன் அவர் (மக்களிடம்) பொய் சொன்னார் என்று (எப்போதேனும்) நீங்கள் அவரைச் சந்தேகித்திருக்கின்றீர்களா? என்று கேட்டார். 

நான் "இல்லை' என்றேன். 

அந்த மனிதர் வாக்கு மீறுகின்றாரா? என்று கேட்டார்.

நான் "இல்லை (தற்போது நடைமுறையிலுள்ள ஹுதைபியா சமாதான உடன்படிக்கையின்) இந்தக் காலகட்டத்தில் நாங்கள் இருக்கின்னறோம். இதில் அவர் எப்படி நடந்துகொள்வார் என்று எங்களுக்கத் தெரியாது'' என்று சொன்னேன்.

இதைத் தவிர (நபியவர்களை குறைசொல்வதற்கு) வேறு எந்த வார்த்தையையும் புகுத்த எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

அவர் அந்த மனிதருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா? என்று கேட்டார்.

நான் "ஆம்' என்று சொன்னேன்.

அவர். அவருடன் நீங்கள் நடத்திய போர்க(ளின் முடிவு)கள் எப்படி அமைந்தன? என்று கேட்டார்.

எங்களுக்கிடையேயான போர் (கிணற்று) வாளிகள்தாம்; (அவை சுழல் முறையில் மாறி மாறி வருகின்றன. ஒருமுறை) அவர் எங்களை வெல்வார். (மறுமுறை) நாங்கள் அவரை வெல்வோம் என்றேன்.

அவர் உங்களுக்கு என்ன (செய்யும்படி) கட்டளையிடுகின்றார்?'' என்று கேட்டார்.

நான் "அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; அவனுக்கு எதனையும் எவரையும் இணையாக்காதீர்கள்; உங்கள் மூதாதையர் சொல்லி வருகின்ற (அறியாமைக்கால) கூற்றுகளையெல்லாம் விட்டுவிடுங்கள் என்று கூறுகிறார்.  தொழுகையை நிறைவேற்றும்படியும், "ஸகாத்'கொடுக்கும்படியும், உண்மை பேசும்படியும், சுயக்கட்டுப்பாட்டுடன் வாழும்படியும், உறவுகளைப் பேணும்படியும் எங்களுக்கு அவர் கட்டளையிடகின்றார் என்று சொன்னேன்.

பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப்பாளரிடம் (பின்வருமாறு) கூறினார்:

(அபூசுஃப்யானிடம்) கூறிவிடு :

நான் உம்மிடம் அவருடைய குலத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு நீர்அவர் (முஹம்மத்) எங்கள் மத்தியில் சிறந்த குலத்தை உடையவர்' என்று பதிலளித்தீர். இவ்வாறே இறைத்தூதர்கள் ஒரு சமுதாயத்தின் நற்குடியில்தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

நான் உம்மிடம் "(இவருக்கு முன்னர்) உங்களில் எவரேனும் இந்த வாதத்தை முன் வைத்ததுண்டா?' என்று கேட்டேன். அதற்கு நீர் "இல்லை'என்று பதிலளித்தீர். இவருக்கு முன்னர் எவரேனும் இந்த வாதத்தை முன்வைத்திருந்(ததாக நீர் கூறியி ருந்)தால், "தமக்கு முன்னர் (சிலரால்) முன்வைக்கப் பட்ட ஒரு வாதத்தைப் பின்பற்றிச் செல்கின்ற ஒரு (சராசரி) மனிதர்தாம் இவர் என்ற நான் சொல்லியிருப்பேன்.

நான் உம்மிடம் "அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருக்கின்றாரா' என்று கேட்டேன். அதற்கு நீர் "இல்லை' என்று பதிலளித்தீர். அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்(ததாக நீர் கூறியிருந்)தால் தம் முன்னோரின் ஆட்சியதிகாரத்தை(த் தாமும்) அடையவிரும்பும் ஒரு (சராசரி) மனிதர் தாம் இவர் என்று நான் கூறியிருப்பேன்.

 நான் உம்மிடம் "அவர் இவ்வாறு (தம்மை இறைத்தூதர் என) வாதிப்பதற்கு முன்பு (அவர் மக்களிடம்) பொய் பேசினார் என்று எப்போதேனும் நீங்கள் சந்தேகித்ததுண்டா' என்று கேட்டேன். அதற்கு நீர் "இல்லை' என்று பதிலளித்தீர். இதிலிருந்து மக்களிடம் பொய் பேச(த் துணிய)ôத அவர் அல்லாஹ்வின் மீது பொய் சொல்லமாட்டார் என்று நான் புரிந்துகொண்டேன்.

நான் உம்மிடம் "மக்களில் மேட்டுக் குடியினர் அவரைப் பின்பற்றுகின்றனரா? அல்லது பலவீனர்களா (ஒடுக்கப்பட்டவர்களா) என்று கேட்டேன். அதற்கு நீர் "ஒடுக்கப்பட்ட மக்களே அவரைப் பின்பற்றுகின்றனர்'என்ற பதிலளித்தீர். (பெரும்பாலும்) அவர்கள்தாம் இறைத்தூதர்களைப் பின்பற்றுவோர் ஆவர்.

நான் உம்மிடம் "அவ(ரைப் பின்பற்றுபவ)ர்கள் (நாளுக்கு நாள்) அதிகரித்துவருகின்றனரா? அல்லது குறைந்துவருகின்றனரா?' என்ற கேட்டேன். அதற்கு நீர் "அவர்கள் அதிகரித்தேவருகின்றனர்' என்று பதிலளித்தீர். இறை நம்பிக்கை விவகாரம் அவ்வாறுதான்(வளர்ந்துகொண்டே) இருக்கும்.

நான் உம்மிடம் "அவரது மார்க்த்தில் இணைந்தபின் எவரேனும் தமது (புதிய) மார்க்கத்தின் மீது அதிருப்தி கொண்டு அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?' என்று கேட்டேன். அதற்கு நீர் "இல்லை' என்று பதிலளித்தீர். இறைநம்பிக்கை இத்தகையதே; அதன் மலர்ச்சி இதயங்களில் கலந்துவிடும்போது (அதைக் குறித்து எவருமே அதிருப்தியடையமாட்டார்)

நான் உம்மிடம் "அந்த மனிதர் வாக்கு மீறுகின்றாரா?' என்று கேட்டேன்.அதற்கு நீர் "இல்லை' என்று பதிலளித்தீர். இறைத்தூதர்கள் இத்தகையோரேஅவர்கள் வாக்கு மீறமாட்டார்கள்.

நான் உம்மிடம் "அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகின்றார்?' என்று கேட்டேன். அதற்கு நீர் "அல்லாஹ்வையே வணங்க வேண்டும்; அவனுக்கு எதையும் எவரையும் இணை கற்பிக்கக் கூடாது என்று அவர் கட்டளையிடுவதாகவும், சிலைகளை வணங்க வேண்டாமென்று உங்களுக்குத் தடைவிதிப்பதாகவும், தொழுகை, உண்மை, சுயக் கட்டுப்பாடு ஆகிய வற்றை(க் கடைப்பிடிக்கும்படி) அவர் கட்டளையிடு வதாகவும் நீர் பதிலளித்தீர்.

நீர் சொல்வது உண்மையாயிருப்பின் அவர் என்னுடைய இந்தப் பாதங்கள் உள்ள இடத்திற்கு ஆட்சியாளராவார். இறைத்தூதரான அவர் வரவிருப்பதாக நான் அறிந்திருந்தேன். ஆனால், அவர் (குறைஷியரான) உங்களிலிருந்து வருவார் என்று நான் நினைத்திருக்கவில்லை. நான் அவரைச் சென்றடைவேன் என அறிந்தால் அவரைச் சந்திக்க பெரு முயற்சி எடுப்பேன். அவர் அருகில் நான் இருந்திருந்தால் அவரது கால்களைக் கழுவியிருப்பேன்' என்று கூறினார்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொண்டுவருமாறு ஹெராக்ளியஸ் உத்தரவிட்டார். அக்கடிதத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திஹ்யா அல்கல்பீ (ரலி) அவர்களிடம் கொடுத்து, புஸ்ரா நகர ஆட்சியர் (ஹாரிஸ் பின் அபீஷம்ர்) வாயிலாக ஹெராக்ளியஸிடம் ஒப்படைக்கும்படி கூறியிருந்தார்கள்.

ஹெராக்ளியஸ் அதை வாசிக்கச் செய்தார். அந்தக் கடிதத்தில் (பின்வருமாறு) எழுதப்பட்டிருந்தது:

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாகிய முஹம்மதிடமிருந்து ரோமா புரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்படும் கடிதம்:) நேர்வழியைப் பின் பற்றியவர் மீது சாந்தி நிலவட்டும்.

இறை வாழ்த்துக்குப் பின் (விஷயம் என்னவென்றால்); இஸ்லாமை எற்குமாறு உங்களை நான் அழைக்கின்றேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்ளுங்கள். (ஏற்றுக்கொண்டால் ஈருலகிலும்) நீங்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். (நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால்,)அல்லாஹ் உங்களுக்குச் சேரவேண்டிய நன்மையை இருமடங்காகத் தருவான். நீங்கள் புறக்கணித்தால், (உங்கள் நாட்டுக் குடிமக்களான) குடியானவர்களின் பாவமும் (அவர்கள் இஸ்லாமை ஏற்காமல் போவதன் குற்றமும்) உங்களையே சாரும்.

"வேதக்காரர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான ஒரு விஷயத்திற்கு வாருங்கள். (அஃது யாதெனில்:) "அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நாம் வணங்கலாகாது;அவனுக்கு எதனையும்/ எவரையும் நாம் இணைவைக்கலாகாது;அல்லாஹ்வையன்றி நம்மில் யாரும் யாரையும் இரட்சகர்களாக்கிக் கொள்ளலாகாது. இதன் பிறகும் அவர்கள் ஏற்க மறுத்தால் "திண்ணமாக நாங்கள் அல்லாஹ்வுக்கு அடிபணிகின்றவர்கள் (-முஸ்லிம்கள்)தான் என்பதற்கு நீங்கள் சாட்சகளாக இருங்கள்' என்று கூறிவிடுங்கள்.''

ஹெராக்ளியஸ் தாம் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி, அந்தக் கடிதத்தை படித்து முடித்தபோது அவர் அருகில் (அவரைச் சுற்றிலுமிருந்த மதகுருமார்கள் மற்றும் ரோம பைஸாந்திய ஆட்சியாளர் களின்) கூச்சலும் இரைச்சலும் அதிகரித்தது குரல்கள் உயர்ந்தன. உடனே நாங்கள் (அந்த அவையிலிருந்து) வெளியேற்றப்பட்டோம். நாங்கள் வெளியேற்றப்பட்டபோது நான் என் நண்பர்களிடம் இப்னு அபீகப்ஷா(முஹம்மது) வின் விவகாரம் வலிமை பெற்றுவிட்டது. மஞ்சள் நிற இனத்தாரின் (ரோமரின்) மன்னரே அவருக்கு (முஹம்மதுக்கு) அஞ்சுகிறாரே!என்று சொன்னேன்.

(அன்று தொட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அம்மார்க்கம் விரைவில் வெற்றிபெறும் என்று உறுதிபூண்டவனாக நான் இருக்கலானேன். முடிவில் அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாமைப் புகுத்தினான்.

ஈலியா (பைத்துல் முகத்தஸ்) நிர்வாகியும் (மன்னர்) ஹெராக்ளியஸின் நண்பருமான இப்னு நாத்தூர் என்பார் ஷாம் நாட்டுக் கிறிஸ்தவர்களின் தலைமைக் குருவாக இருந்தவர் ஆவார். அவர் அறிவிக்கிறார்

ஹெராக்ளியஸ் ஈலியா' (பைத்துல் முகத்தஸ்) வந்தபோது மனசஞ்சலத்துடன் காணப்பட்டார். அப்போது அவருடைய அரசவைப் பிரதானிகளில் சிலர் தங்களின் (கவலை தோய்ந்த) இந்தத் தோற்றம் எங்களுக்கு கவலை அளிக்கிறது'' என்று கூறினார்கள்.

மன்னர் ஹெராக்ளியஸ் கிரகங்களைப் பார்த்து சோதிடம் சொல்வதில் கைதேர்ந்தவராயிருந்தார்.

(தங்களின் கவலைக்குக் காரணம் என்ன வென்று) அவர்கள் வினவியதற்குஇன்றிரவு நான் நட்சத்திரங்களை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த போது,விருத்தசேதனர்களின் அரசர் தோன்றிவிட்டதைப் பார்த்தேன் என்று ஹெராக்ளியஸ் கூறிவிட்டு இந்தத் தலைமுறையினரில் விருத்த சேதனம் செய்துகொள்ளும் வழக்கமுடையவர்கள் யார்? என்று கேட்டார்.

அதற்கு அவர்கள் (நாங்கள் அறிந்தவரையில்) யூதர்களைத் தவிர வேறுயாரும் விருத்தசேதனம் செய்துகொள்வதில்லை அவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள் உங்கள் ஆட்சிக்குட்பட்ட நகரங்களுக்கெல்லாம் எழுதி அங்குள்ள யூதர்களைக் கொன்றுவிடுமாறு கட்டளையிடுங்கள்என்றார்கள். 

இவ்வாறு அவர்கள் உரையாடிக் கொண்டிருக்கையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிய தகவலைத் தெரிவிக்கும் ஒரு மனிதரை கஸ்ஸான் குலத்தின் (குறுநில) மன்னர், ஹெராக்ளியஸிடம் அனுப்பியிருந்தார் அம்மனிதர் ஹெராக்ளியஸிடம் அழைத்து வரப்பட்டார். அவரிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொண்ட ஹெராக்ளியஸ், "இவரை அழைத்துச் சென்று இவர் விருத்தசேதனம் செய்திருக்கிறாரா? அல்லவா?என்று சோதியுங்கள்'' என்று ஆணையிட்டார். அவ்வாறே அவரைப் பார்வையிட்டனர் அவர் விருத்தசேதனம் செய்திருப்பதாக ஹெராக்ளியஸிடம் கூறினார்கள். மேலும், அந்த மனிதரிடம் ஹெராக்ளியஸ் அரபுக(ளின் பழக்க வழக்கங்க)ள் குறித்து விசாரித்தபோது, அவர்கள் விருத்த சேதனம் செய்துகொள்ளும் வழக்கமுடையவர்கள்தான் என்று குறிப்பிட்டார். உடனே ஹெராக்ளியஸ் இதோ இந்தத் தலைமுறையினரின் அரசர் தோன்றிவிட்டார் என்று கூறினார்.

பின்னர் (இதுதொடர்பாக ரோமின் தலைநகரான) ரூமியாவில் இருந்த தம் நண்பரும் கல்வி கேள்வியில் தமக்கு நிகரான வருமான (ளஃகாத்திர் எனும்) ஒவருக்குக் கடிதம் எழுதிவிட்டு ஹெராக்ளியஸ் ஹிம்ஸ் நகருக்குச் சென்றார். அவர் ஹிம்ஸ் சென்றடைவதற்குள் நண்பரிடமிருந்து (பதில்) கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் ஹெராக்ளியஸின் ஊகப்படியே,நபிகளாரின் வருகை பற்றியும் அவர் இறைத்தூதர்தாம் என்பது பற்றியும் கூறப்பட்டிருந்தது.

பின்னர் ஹெராக்ளியஸ் ஹிம்ஸ் நகரிலிருந்த தமது கோட்டை ஒன்றிற்கு வருமாறு ரோமா புரியின் பிரமுகர்கள் அனைவருக்கும் ஆணையிட்டார். (அவர்கள் வந்து சேர்ந்ததும்) அந்தக் கோட்டையின் கதவுகளையெல்லாம் பூட்டிவிடும்படி உத்தரவிட்டார். அவ்வாறே அவை பூட்டப்பட்டன.

பின்னர் ஹெராக்ளியஸ் (அந்த அவையிலிருந்தவர்கள்) முன்தோன்றி,ரோமானியரே! உங்களுக்கு வெற்றியும் நேர்வழியும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையும், உங்கள் ஆட்சி நீடிக்க வேண்டுமென்ற எண்ணமும் உங்களுக்கு உண்டா? இந்த இறைத் தூதரை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று பேசினார். இதைக் கேட்ட மாத்திரத்தில் காட்டுக் கழுதைகள் வெருண்டோடுவதைப் போன்று கோட்டைக் கதவுகளை நோக்கி அவர்கள் வெருண்டோடி, கதவுகளை நெருங்கியதும் அவை தாளிடப்பட்டிருக்கக் கண்டனர். 

அவர்கள் வெருண்டோடுவதைப் பார்த்த ஹெராக்ளியஸ் நபி (ஸல்) அவர்கள் மீது இந்த மக்கள் விசுவாசம் கொள்ளமாட்டார்கள் என்று நிராசையான போது, "அவர்களை என்னிடம் திருப்பியனுப்புங்கள் என்று (காவலர்களை நோக்கிச்) சொன்னார். (அவர்கள் திரும்பி வந்ததும்) நீங்கள் உங்கள் மதத்தின் மீது கொண்டுள்ள பிடிப்பைச் சோதிக்கவே நான் சற்று முன்னர் அவ்வாறு பேசினேன். இப்போது (உங்கள் உறுதியை) ஐயமற அறிந்து கொண்டேன் என்று கூறினார். உடனே (ரோமர்களின் வழக்கப்படி) அனைவரும் அவருக்கு சிரம்பணிந்தனர். அவரைக் குறித்து திருப்தியும் அடைந்தனர். இதுவே (மன்னர்) ஹெராக்ளியஸின் இறுதி நிலைப்பாடாக இருந்தது.  (புகாரி : 07)

அன்பின் சகோதரர்களே !

இஸ்லாமிய வரலாற்றில் ஏகத்துவத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வரலாற்று வெற்றியாக இந்த வெற்றி இன்றும் கணிக்கப்படுகிறது. வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் ஏகத்துவத்தை ஏற்று வாழ்ந்து மரணிக்கின்ற பாக்கியத்தைத் தந்தருள் புரிவானாக!
 
Thanks to www.rasminmisc.com