Wednesday, April 16, 2025

Monday, October 24, 2011

தீபாவலி பற்றிய சில உண்மைகள்


இன்று இந்துக்கள் என அழைத்துக் கொள்ளும் பலர், தீபாவளியை வணிக மயப்படுத்தப் பட்ட பண்டிகையாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தீபாவளி எதற்கு கொண்டாட வேண்டும் என்று, ஆயிரம் வருடங்களாக கூறப்பட்டு வரும் கதையை இப்போதும் தம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். "மக்களுக்கு கொடுமை செய்த நரகாசுரனை கிருஷ்ணன் அழித்த நாள்." என்பதில் மறைந்துள்ள அரசியலை புரிந்து கொள்ள முடியாத படி மதம் கண்ணை மறைக்கின்றது. நரகாசுரன் யார்? எந்த மக்களை கொடுமை செய்தான்? அவன் மரணத்தை எதற்காக கொண்டாட வேண்டும்?
புராணங்கள் என்பன சரித்திரம் எழுதப்படாத காலங்களில் நடந்த சம்பவங்களை, கற்பனை கலந்து கூறப்படும் கதைகள் ஆகும். , இது போன்ற கதைகளை குழந்தைகளுக்கு கூறுவதன் மூலம் அடுத்த சந்ததிக்கு கடத்துவார்கள். தீபாவளி குறித்த கதையும் அது போன்றதே.

மேலும் தீபாவளி குறித்து இரு மாணவர்களுக்கிடையே நடந்த அறிவார்ந்த உரையாடல் 

ராமா :தீபாவளி என்பது உலகத்துக்கு கேடு விளைவித்த ஒரு அசுரன் கடவுளால் கொல்லப்பட்ட நாளை மக்கள் கொண் டாடுவதாகும். அதை நீயும் கொண்டாட லாம். இப்பொழுது வெள்ளையன் ஒழிந்த நாளை நாம் சுதந்தர நாளாகக் கொண் டாடவில்லையா? அதுபோல.

டேவிஸ்: அப்படியா? அந்த அசுரன் யார்? அவன் எப்படி உலகுக்குக் கேடு செய் தான்? அந்தக் காலத்தில் அணுக்குண்டு இருந்திருக்காதே? இந்தக் காலத்தில் அணுகுண்டு வைத்திருப்பவனையும் இன்னும் மக்கள் சமுதாயத்துக்கு என்னென்னவோ கேடு செய்கிறவர் களையும்பற்றி நாம் ஒன்றுமே பேசுவ தில்லை; அப்படியிருக்க அந்த அசுரன் யார்? அவனென்ன கேடு செய்தான்?

ராமா: அந்த அசுரன் பெயர் நரகாசூரன். அவன் பூமியிலிருந்து பிறந்தவன். அவன் தகப்பன் மகா விஷ்ணு. அவன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்து தேவர்களின் பெண்களுக்கும் தொல்லை கொடுத் தான். அதனால் மகாவிஷ்ணுவும் அவர் மனைவியும் சேர்ந்து அவனைக் கொன்று விட்டார்கள்.

இனி எவரும் தேவர்களுக்குத் தொந்தரவு கொடுக் கக் கூடாது என்பதை மக்களுக்கு ஞாபகப்படுத்துவதற்காக அவன் செத்த நாளைக் கொண்டாடுவது தெரிந்ததா? இதுதான் தீபாவளித் தத்துவம்.


டேவிஸ்: தெரிந்தது. ஆனால் அதை விளக்கிக் கொள்ள வேண்டுமென்று என் மனம் ஆசைப்படுகின்றது. அதா வது அவன் மகா விஷ்ணுவுக்கும் பூமிக் கும் எப்படிப் பிறக்க முடியும்? பூமியானது மண், கல் உருவத்தில் இருந்தே மகாவிஷ்ணுக்கு பூமியுடன் எப்படி கலவி செய்ய முடிந்தது? பூமி எப்படி கர்ப்பம் தரிக்கும்? அதற்கு எப்படி பிள்ளை பிறக்கும்? எனக்குப் புரியவில்லையே?

ராமா: அட பயித்தியக்காரனே! மகாவிஷ்ணு நேராகவா போய்க் கலவி செய்வார்? அதற்கு அவருக்கு மனை விகள் இல்லையா? ஆதலால் அவர் நேராகக் கலவி செய்யவில்லை. மகாவிஷ்ணு பன்றி உருவமெடுத்தார்.

டேவிஸ்: பொறு! பொறு! இங்கே கொஞ்சம் விளக்கம் தேவை மகா விஷ்ணு பன்றி உருவம் ஏன் எடுத்தார்?

ராமா: அதுவா! சரி சொல்கிறேன் கேள். இரண்யாட்சதன் என்று ஒரு இராட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலுக்குள் போய் ஒளிந்து கொண்டான்.


டேவிஸ்: தொல்லை ஒன்றுமில்லை, உன் சங்கதிதான் என் மூளைக்குத் தொல்லை கொடுக்கிறது. தலை சுற்றுகிறது அதாவது ஒரு இராட்சதன் அப்படியின்னா என்ன? அது கிடக் கட்டும். அவன் பெயர் இரண்யாட் சதன். அதுவும் போகட்டும். அவன் கதையை அப்புறம் கேட்போம். அந்த இராட்சதன் பூமியை எப்படி சுருட் டினான்? பூமிதான் பந்து போல இருக் கிறதே? அவன் அதை சுருட்டுவ தானால் ஒரு சமயம் உருட்ட முடியுமே தவிர சுருட்ட முடியாதே? அதுவும் போகட்டும் சுருட்டினான் என்கிறாய். சுருட்டினான் என்றே வைத்துக் கொள்வோம்.
சுருட்டினானே அவன் சுருட்டும் போதுதான் எங்கே இருந்து கொண்டு சுருட்டினான்? சுருட்டிக் கொண்டு ஓடினானே எதன் மேல் நடந்து ஓடினான்? ஆகாயத்தில் பறந்து கொண்டே சுருட்டியிருக்கலாம். ஆகா யத்தில் பறந்து கொண்டே ஓடியி ருக்கலாம். கருடன் மகாவிஷ்ணு வையும், அவன் பொண்டாட்டியையும் தூக்கிக் கொண்டு பறப்பதுபோல் பறந்திருக்கலாம்.
ஆனால் அவன் சமுத்திரத்துக்குள் ஒளிந்து கொண்டான் என்கிறாயே அந்த சமுத்திரம் எதன்மேல் இருந்தது? பூமியின்மேல் இல்லாமல் அதுவும் ஆகாயத்தில் தொங்கிக் கொண்டோ அல்லது பறந்து கொண்டோ இருந்தது என்றால் சமுத்திரம் தண்ணீர் ஆயிற்றே அது ஒழுகிப் போய் இருக்காதா? அப் போது அடியில் ஒளிந்துகொண்டிருப் பவன் தொப்பென்று கீழே பூமியுடன் விழுந்திருக்க மாட்டானா? அல்லது அது வேறு உலகம், இது வேறு உலகமா? நமக்கு ஒன்றும் புரிய வேயில்லையே? இதை எனக்கு புரிய வைக்க வேண்டும். நானும் நீயும் பி.ஏ. 2ஆவது வருஷம் பூகோளம், வான நூல், சைன்ஸ் படித்தவர்கள். ஆதலால் இந்த சந்தேகம் வருகிறது. நாம் படிக்காத மடையர்களாய் இருந்தால் குற்றமில்லை; சற்று விளங்கச் சொல் பார்ப்போம்.
ராமா: இதெல்லாம் பெரியோர்கள் சொன்ன விஷயம் சாஸ்திரங்களில் உள்ள விஷயம், மத தத்துவம்! ஆனால் இவைகளை இப்படியெல்லாம் கேட்கக் கூடாது.

டேவிஸ்: நீ என்னப்பா இப்படி பேசறே, பி.ஏ. படிக்கிறவனாகத் தெரியவில்லையே! பூமிக்குப் பிறந்தான் என்கிறாய் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போனான் என்கிறாய், எப்படிப் பிறந்தான்? எப்படித் தூக்கிக் கொண்டு எப்படி போனான் என்றால் கோபித்துக் கொள்கிறாய்! இந்தக் கதையைப் பண்டிகையாக வைத்து கோடிக்கணக்கான மக்கள் கொண் டாடுகிறார்கள் என்கிறாய். சர்க்கார் இதற்கு லீவு விடுகிறது. பல லட்சம் பிள்ளைகள் அன்று படிப்பதைவிட்டு தெரு சுற்றுகிறதுகள்! இவ்வளவு பெரிய சங்கதியைக் கேட்டால் என்னை கருப்புச் சட்டை என்கிறாய்.
ராமா: ஒளிந்து கொண்டதும் பூமியில் இருந்தவர்களெல்லாம் போய் மகா விஷ்ணுவிடம் முறையிட்டார்கள்.
டேவிஸ்: இரு! இரு! பூமியைச் சுருட்டினபோது பூமியில் இருந்தவர்கள் ஓடிவிட்டார்களா? நோட்டீஸ் கொடுத்து விட்டுத் தான் சுருட்டினானோ?
ராமா: நீ என்னப்பா சுத்த அதிகப் பிரசங்கியாக இருக்கிறே ஓடிப் போய் முறையிட்டார்கள் என்றால் எப்படிப் போனார்கள் வெங்காயம் வீசை என்ன விலை கருவாடும் கத்தரிக்காயும் குழம்புக்கு நல்லாயிருக்குமோ? என்பது போன்ற அதிகப் பிரசிங்கித்தனமான கேள்விகளை முட்டாள்தனமாகக் கேட் கிறாயே?
டேவிஸ்: இல்லை, இல்லை கோபித்துக் கொள்ளாதே சரி! சொல்லித் தொலை! முறையிட்டார்கள்! அப்புறம்?
ராமா: முறையிட்டார்கள். அந்த முறையீட்டுக்கு இரங்கி பகவான் மகா விஷ்ணு உடனே புறப்பட்டார். சமுத்திரத் தினிடம் வந்தார்.
பார்த்தார் சுற்றி. எடுத்தார் பன்றி அவதாரம், குதித்தார் தண்ணீரில். பாய்ந்தார் நிலத்துக்கு, கண்டார் பூமியை தன் கொம்பில் அதை குத்தி எடுத்துக் கொண்டு வந்து விரித் தார் பூமிப் பாயை; புரிஞ்சுதா.
டேவிஸ்: புரியாட்டா கோபித்துக் கொள்கிறாய் அதிகப் பிரசங்கி என்கிறாய் சரி புரிந்தது. விரித்தார் பூமியை பிறகு என்ன நடந்தது?
ராமா: பிறகா; பூமியை விரித்தவுடன் அந்த பூமிக்கு ஒரு சந்தோஷம் ஏற்பட்டது. ஒரு குஷால் உண்டாயிற்று. பூமி அந்தப் பன்றியைப் பார்த்து. அந்தப் பன்றி இந்தப் பூமியைப் பார்த்தது அந்தச் சமயம் பார்த்து மன்மதன் இரண்டு பேரையும் கலவி புரியச் செய்து விட்டான். அப்புறம் சொல்ல வேண் டுமா, கலந்தார்கள் பிறந்தது பிள்ளை.
டேவிஸ்: சரி இங்கே என் சொந்த சங்கதி கேட்கிறேன்; கோவிச்சுக்காதே
ராமா: சரி கேள்.
டேவிஸ்: வராகம் என்பது பன்றி அது ஒரு மிருகரூபம் சரிதானா?
ராமா: சரி.
டேவிஸ்: பூமி கல் மண் உருவம் சரிதானா?

ராமா: சரி.
டேவிஸ்: இது இரண்டும் எப்படிக் கலவி புரியும்? எப்படிக் கருத்தரிக்கும்?
ராமா: பாத்தியா பாத்தியா இதுதான் போக்கிரித்தனமான கேள்வி என்பது கடவுள் பார்த்து எப்படி வேண்டுமானாலும் செய்யலாமல்லவா?
டேவிஸ்:  இதைக் கேட்டால் போக்கிரிதனமான கேள்வி என்கிறாய். சரி. இதைபற்றி பிரின்ஸ்பாலைக் கேட்கலாம். அப்புறம் அந்தப் பிள்ளை என்ன ஆச்சுது?
ராமா: அந்தப் பிள்ளைதான் நரகாசுரன்.
டேவிஸ்: இந்தப் பெயர் அதற்கு யார்? இட்டார்கள் தாய் தந்தையர்களா?
ராமா: யாரோ அன்னக்காவடிகள் இட்டார்கள்? அதைப்பற்றி என்ன பிரமாத மாய் கேட்கிறாய், எனக்கு அவசரம் நான் போக வேண்டும் என்னைவிடு.
டேவிஸ்: சரி போகலாம் சீக்கிரம் முடி அப்புறம்?
ராமா: அந்த நரகாசூரன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்ததான். அவனை மகாவிஷ்ணு கொன்றார்.
டேவிஸ்: அடபாவி! கடவுளுக்குப் பிறந்தவனா, தேவர்களுக்குத் தொல்லை கொடுத்தான்? அப்படியென்றால் தேவர் கள் என்ன அவ்வளவு அயோக்கியர்களா?
ராமா: இல்லேப்பா. இந்த நரகா சூரனின் பொல்லாத வேளை, தேவர்கள் கிட்டே இவன் வாலாட்டினால் அவர்கள் சும்மா விட்டு விடுவார்களா?
டேவிஸ்: அதற்கு ஆக தகப்பன் மகனுக்கு புத்தி சொல்லாமல் ஒரே அடி யாகக் கொன்றுவிடுவதா?
ராமர்: அது இவர் இஷ்டம், அதைக் கேட்க நாம் யார்? தேவரனையர்கயவர் அவருந்தான் மேவன செய்தொழுகலான் என்று நாயனார் சொல்லி இருக்கிறார் ஆதலால் நாம் அது ஏன் இது ஏன் என்று கேள்வி கேட்கலாமா?
டேவிஸ்: சரி கொன்றார் அதற்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம்?
ராமா: அதைக் கொண்டாட வேண்டிய அவசியம் ஏன் என்றால் இனிமேல் எவனும் தேவர்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது என்பதற்காக அதை ஞாபகத்தில் வைப்பதற்கு அதை நினைவூட்டுவதற்கு நாம் அடிக்கடி கொண்டாட வேண்டியது என்பதுதான்.

டேவிஸ்: தேவர்கள் எங்கிருக் கிறார்கள்?
ராமா: வானதேவர்கள் வானத்தில் (மேல் உலகத்தில்) இருக்கிறார்கள்; பூ தேவர்கள் இந்தப் பூமியிலே இருக் கிறார்கள்.
டேவிஸ்: இந்த பூமியில் இருக்கும் தேவர்கள் யார்?

ராமா: அட முட்டாள்! அது கூடவா தெரியாது? அதுதான் பிராமணர்கள், பிராமணர்கள் என்றாலே பூதேவர்கள் தானே? அகராதியைப் பார்.
டேவிஸ்: பிராமணர்கள் என்பவர்கள் என்ன வகுப்பு?
ராமா: என்ன வகுப்பா நாங்கள் தான்!
டேவிஸ்: நீங்கள் என்றால், நீ அய்யங்கார், அய்யங்கார்தாசனா?
ராமா: நாங்கள் மாத்திரம் அல்ல அப்பா, நாங்களும் அய்யர், ஆச்சாரி யார், சாஸ்திரி, சர்மா, தீட்சதர் முதலி யோர்கள்.
டேவிஸ்: அப்படியெனில் பார்பனர் கள் யாவருமே பூதேவர்கள் என்கிறாய்?
ராமா: ஆமாம்! ஆமாம்! கல்லாட்டமா ஆமாம்!
டேவிஸ்: சரி, தொலைந்து போகட் டும். நீங்கள் தேவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். உங்களுக்குத் தொல்லை கொடுக்க அசுரர், ராட்சதர் ஒருவரும் இந்த உலகத்தில் இல்லையே? இங்கி ருப்பவர்களைப் பயப்படுத்த தீபாவளி கொண்டாட வேண்டுமா?
டேவிஸ்: ஓஹோ! அப்படியா? சரி, சரி. தீபாவளி என்பதன் தத்துவமும் இரகசியமும் தெரிந்து கொண்டேன். நன்றி வணக்கம்.

தீபாவளி பற்றி பெரியார் பார்வையில் சிறிய சுருக்கம்


1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாக பூமி கர்ப்பமுற்று நரகாசுரன் என்ற பிள்ளையையும் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசுர டனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனைக் கொல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகா சுரனுடன் போர்தொடுத்து அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந் தார்கள்.
10. இந்த மகிழ்ச்சி (நரகாசுரன் இறந்த தற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.
இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!
இந்த 10 விஷயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர் களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது.
பூமி தட்டையா? உருண்டையா?
தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது?
சுருட்டினால் தூக்கி கட்கத்திலோ, தலைமீதோ எடுத்துப் போக முடியுமா?
எங்கிருந்து தூக்குவது?
கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்?
விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்கவேண்டிய அவசியம் என்ன?
அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால், பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?
பூமி மனித உருவமா? மிருக உருவமா?
மனித உருவுக்கும், மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?
பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?
இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?
இவைகளைக் கொஞ்சமாவது தீபாவளி கொண்டாடும் - தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்கவேண்டாமா?
நரகாசுரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகித்ஜோஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மகாணத்து அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள்.

வங்காளத்தில் தேவர்களும், அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்? இவை ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும் நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்து வதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், நாம் ஆமாம் என்று சொல்லி கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவ தும் என்றால் இதை என்னவென்று சொல்வது?
சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!
பார்ப்பனர்களே உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால், இக்கதை எழுதின காலத்தில் பார்ப்பனர்கள் (ஆரியர்) எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்கவேண்டும். அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது ஈன நிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்காகவேயாகும்.
--------------------தந்தைபெரியார் - நூல்: “இந்துமதப்பண்டிகைகள்” பக்கம் 28-31



0 comments:

Post a Comment