Sunday, February 13, 2011

அறிவிலிகளும், அறியாமையும். – தொடர் 2


சகோதரர்களே! “ஜமாஅதுல் முஸ்லிமீன்” எந்த அளவு குர்ஆன் ஹதீஸுடன் உடன் பட்டு செயல்படுகிறார்கள் என்பதை விமர்சிப்பதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கமாகும்.


இவர்கள் தவ்ஹீத் கொள்கையுடைய சகோதரர்களை, நீங்கள் பைஅத் செய்யாத காரணத்தினால் “நீங்கள் முஸ்லிம்களல்ல” என்ற குற்றச்சாட்டை முன் வைக்கின்றாரார்கள்.


இதே பைஅத்தை அடிப்படையாக வைத்து, உங்களுடைய அமீரான, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த உங்களுடைய அமீர் பைஅத் செய்தவரா? என அவர்களிடம் கேள்வியொன்று கேட்டிருந்தோம்.


இந்தக் கேள்வியிட்கு, புளுகு மூட்டை ஒன்றை அவிழ்த்து விட்டு, மாட்டிக்கொண்டு மறுமொழி இல்லாமல் முளிக்கின்றார்கள்.


சரி இப்போது எங்களது இரண்டாவது கேள்வியை முன் வைப்போம்.

கேள்வி:- 2
ஒரு அமீர் இன்னுமொரு பகுதிக்கு அமீரை நியமிப்பதற்கான ஆதாரம் என்ன.....??

இந்தக் கேள்வியின் விளக்கம் என்னவெனில் பாகிஸ்தானிய அமீர், உமர் அலியை இலங்கைக்காண அமீராக நியமித்துள்ளார்.

அதே நேரம் இரண்டு அமீர்களும், பைஅத் வாங்குகின்றார்கள். பாகிஸ்தானிய அமீர் பாகிஸ்தானிய மக்களிடம் பைஅத் வாங்குகின்றார்.

இலங்கைக்காண அமீர் உமர் அலி, இலங்கை மக்களிடம் பைஅத் வாங்குகின்றார்.

வெவ்வேறு பகுதியில் இருக்கும் இரு அமீர்கள், ஒரே கால கட்டத்தில் மக்களிடம் பைஅத் வாங்கலாமா? என்பதுதான் மேலுள்ள கேள்வியின் விளக்கமாகும்.

சரி இப்போது இது தொடர்பாக "ஜமாதுல் முஸ்லிமீன்" இயக்கம் சார்ந்தகார்களின் பதிலை பாருங்கள்

எமது கேள்வி "இன்னுமொரு சர்ச்சை ஒரு அமீர் இன்னுமொரு பகுதிக்கு அமீரை நியமிப்பதற்கான ஆதாரம் என்ன.....??


ஜமாதுல் முஸ்லிமீனின் பதில்

அப்துல்லாஹ் பின் சுபைர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
அகலா பின் ஹாபித்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள் அப்போது அபூபக்கர்(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்களே இவரை அவரது கூட்டத்தினருக்கு அமீராக நியமியுங்கள் எனக்கூறினார்கள். உடனே உமர்(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் துாதர்(ஸல்) அவர்களே அவரை அமீராக்க வேண்டாம் என கூறினார்கள்.

இவ்வாறு அவர்கள் இருவருமு் தர்க்கித்து கொண்டவர்களது சத்தங்கள் உயர்ந்து விட்டன. எனக்கு மாறு செய்யவே நீர் விரும்புகிறீர் என அபூபக்கர்(ரலி) அவர்கள் கூறினார்கள் அவ்வாறு நான் நாடவில்லை என உமர்(ரலி) அவர்கள் பதில் அளித்தார்கள்.

அந்த சந்தர்ப்பத்தில் “விசுவாசிகளே! நபி(ஸல்) அவர்களுக்கு முன் உங்களுடைய சத்தங்களை உயர்த்தாதீர்கள் எனும் குர்ஆன் வசனம் இறங்கியது................ ........................................

.............. (திர்மிதி 3266)"


எமது மறுமொழி
பதில்தானே கொடுக்கவேண்டும். பதில் கொடுத்து விட்டார்களாம் இந்த மா மேதைகள்

பார்த்தீர்களா? சகோதரர்களே! இவருடையப் பதிலைப் பாருங்கள்.

கேள்வியைப் பாருங்கள்!
"இன்னுமொரு சர்ச்சை ஒரு அமீர் இன்னுமொரு பகுதிக்கு அமீரை நியமிப்பதற்கான ஆதாரம் என்ன.....?? என்பதுதான் எமது கேள்வி

“இன்னுமொரு பகுதிக்கு” அமீரை நியமிக்கலாமா? என்றுதான் கேள்வி கேட்கப்பட்டது.

“இவரை அவரது கூட்டத்தினருக்கு” அமீராக நியமியுங்கள்.. என்றுதான் ஹதீஸில் உள்ளது.

ரசூல் (ஸல்) அவர்கள், மக்களிடம் பைத் வாங்கும்போது, ரசூல் (ஸல்) அவர்களினால் நியமிக்கப்பட்ட அந்த அமீரும் மக்களிடம் பைஅத் வாங்கினாரா?

இந்த வழிகேடர்கள் , உமர் அழியும் மக்களை எப்படி மடையர்கள் ஆக்குவதற்கு எவ்வாறெல்லாம் முயற்சி செய்கிறார்கள் என்பது புரிகிறதா?

ரசூல் (ஸல்) அவர்களினால் ஒரு கூட்டத்தாருக்கு நியமிக்கப்பட்ட அமீரை, ஒரு பகுதிக்கு நியமிக்கப்பட்ட அமீராக காட்டுவதற்கு இந்த வழிகேடர்கள் முயற்சி செய்துள்ளார்கள்.

அதே போல் ஒரே நேரத்தில், இருவர் அமீராக இருந்துகொண்டு இருவருக்கும் பைஅத் வாங்கலாம் என்பதற்கு இந்த அறிவிலிகள் தங்களது மடமையின் காரணமாக பொறுத்தமில்லாத விடயங்களை ஆதாரங்கள் போல் காட்டுவதற்கு முயற்சி செய்கின்றார்கள்.

இருவரும் மிகவும் பயங்கரமானவர்கள் என்பதையும், உமர் அலியிட்கு தொடர்ந்து குடை பிடித்துக்கொண்டிருக்கும். உமர் அலி பக்தர்களும் ,உமர் அலியை தக்லீது செய்பவர் என்பதையும் இந்த விடயம் மேலும் தெளிவுபடுத்துகிறது.

எனவே மீண்டும் ஒரு முறை, இந்த அறிவிலிகளின் அறியாமை தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்........

தொடர் 01 வாசிக்க click here 


0 comments:

Post a Comment