சகோதரர்களே! இந்த தொடர் ஆக்கத்தில் “ஜமாஅதுல் முஸ்லிமீன்” எந்த அளவு குர்ஆன் ஹதீஸுடன் உடன் பட்டு செயல்படுகிறார்கள் என்பதை விமர்சிப்பதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கமாகும்.
அதே நேரம் குர்ஆன், ஹதீஸ்தான் எங்களுடைய அடிப்படை என இவர்கள் கூறுகின்றார்கள். இவர்களுடைய முக்கியமான, அதாவது கொள்கை சார்ந்த விடயத்தில் கூட இந்த நிலைமை காணப்படுகிறதா? என்பதை நோக்குவோம்.
ஆரம்பமாக, இவர்களுடைய “பாகிஸ்தானிய தலைமைத்துவம்” பற்றி ஆராய்வோம்.
“ஜமாஅதுல் முஸ்ளிமீனின் உலகளாவிய (பாகிஸ்தானியத்) தலைமத்துவம்”
உங்களுடைய பாகிஸ்தானியத் தலைவர் யாருக்கு பைஅத் செய்திருந்தார்? என இது தொடர்பாக நாம் ஒரு கேள்வி கேட்டிருந்தோம்.
இந்த தலைமைத்துவம் தொடர்பாக உமர் அலி ஒரு கதையே கட்டவிழ்த்து விடுகின்றார்.
ஜமாதுல் முஸ்லிமீனின் பதில்
அழிந்துபோன ஜமாஅதுல் முஸ்லிமீனை மீண்டும் தோற்றுவிக்கும் தலைவர் எவரிடமும் பைஅத் செய்வதில்லை, என்பது ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது ஸுன்னாவாகும். இந்த உம்மத்தின் முதலாவது ஜமாஅதுல் முஸ்லிமீனைத் தோற்றுவித்தபோது பிறரிடம் பைஅத் செய்யாத ஒரு தலைவரைக் கொண்டே அல்லாஹ் அதனைத் தோற்றுவித்தான்
ஜமாஅதுல் முஸ்லிமீனைத்’ தோற்றுவிப்பவர்கள் எவருக்கும் பைஅத் செய்வதில்லை எனும் இந்த ஸுன்னாவிற்கு ஏற்ப இன்றைய ஜமாஅதுல் முஸ்லிமீனைத் தோற்றுவித்த அல்குர்ஆன் விரிவுரையாளர் மஸ்ஊத் அஹ்மத் அவர்கள் எவருக்கும் பைஅத் செய்யவில்லை. மாறாக அறிஞர் மஸ்ஊத் அஹ்மத் அவர்கள் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களது ஸுன்னாவைப் பின்பற்றி, இஸ்லாத்தை ஏற்பவர்களிடம் இஸ்லாத்திற்காக பைஅத் எடுத்தார்கள்.
எமது பதில்
சகோதரர்களே! மேற்குறிப்பிட்ட ஜமாஅதுல் முஸ்ளிமீனின் பதில் அத்தனையும் முழுக்க, முழுக்க, சொந்த சரக்குகளாகும். அவைகள் மார்க்கத்தில் உள்ளது போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுப்பதற்காக உமர் அலி, தன்னுடைய கூற்றுக்களுடன் அல்லாஹ்வையும், ரசூல் (ஸல்) அவர்களையும் சேர்த்திக்கொண்டார்.
ரசூல் (ஸல்) அவர்கள், நபி என்ற ஒரே காரணத்தினால், யாரிடமும் போய் பைஅத் கொடுக்க மாட்டார்கள் என்ற நபியொருவருக்குறிய தனிச் சிறப்பை உமர் அலி தனக்கு சாதகமாக பயன் படுத்தி, தன்னுடைய இயக்கத் தலைவர் யாரிடமும் போய் பைஅத் செய்யாததை, அழகு படுத்தி அது ஒரு சுன்னாவைப் போல் நிர்மாணித்துக் காட்டியுள்ளார்.
தன்னுடைய இயக்கம் பொய்பிக்கப்பட்டுவிடும் என்ற ஒரே காரணத்திற்காக நபியொருவருக்குறிய தனிச் சிறப்பை, தன்னுடைய தலைவருக்குக் கொடுத்து தன்னுடைய இயக்கத்தைக் காப்பதற்கு இவர் முற்பட்டுள்ளார்.
சகோதரர்களே! இந்த உமர் அலி என்பவர் எவ்வளவு பயங்கரமானவர்? என்பதைக் கவனியுங்கள்.
இவர் தெளிவாகவே ரசூல் (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தைக் கொச்சைப் படுத்தியுள்ளார்.
அதாவது உமர் அலியின் இந்தத் தவறான முடிவை, ஜமாதுல் முஸ்லிமீனை சார்ந்தவர்கள் அப்படியே சரி காண்கிறார். அதாவது இவர்கள் உமர் அலியை அப்படியே கண் மூடிப் பின்பற்றுகின்றார்கள்
இப்படி இருந்து கொண்டு “தாங்கள்தான் சுவர்க்கம் செல்லும் கூட்டம்” என்று கூறுவது பெரும் வேடிக்கையாக உள்ளது.
இந்தப் கேள்விக்கு பதில் கொடுக்க முடியாத இவர்கள் , நீங்கள் மார்க்கம் பேசுகின்றீர்களா? அல்லது தர்க்கம் செய்கின்றீர்களா? என்றொரு நகைச்சுவையான கேள்வியொன்றையும் கேட்டிருக்கின்றார்.
சகோதரர்களே! சத்தியம் சொல்லப்படும்போது தர்க்க ரீதியாக அதை மறுத்தால், அதற்கு தர்க்க ரீதியாக கேள்விகள் எழுப்பி அசத்தியவாதிகளின் வாயை மூட வைக்கலாம் என்பதற்கு பின்வரும் குர்ஆன் வசனம் அதாரமாக உள்ளது.
2:258. அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.
இப்ராஹீம் (அலை) அவர்கள், நம்ரூத் என்ற அரசனின் முன்னாள் சத்தியத்தை எடுத்துச் சொன்ன வேளையில், அவன் தர்க்க ரீதியாக அதை மறுத்தான். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள், மீண்டும் ஒரு கேள்வியைத் தர்க்க ரீதியாக முன்வைத்தார்கள்.
இரண்டாவது கேள்விக்கு பதில் கொடுக்க முடியாமல் அசத்தியத்தில் இருந்த அந்த நம்ரூத் வாயை மூடிக்கொண்டான்.
உமர் அலியும், அவர் கூட்டமும் இஸ்லாம் சொல்லாத ஒரு கொள்கையை கொள்கையாக ஏற்றுக்கொண்டு, நீங்கள் முஸ்ளிம்களா? என நிரூபியுங்கள்! என எங்களிடம் தர்க்க ரீதியான ஒரு கேள்வியை முன் வைக்கிறார்கள்.
நாங்கள் அதே கேள்வியை அவர்களுடைய வழிகேட்டுக்கொள்கையை ஏற்படுத்திய அவர்களுடைய தலைவர் விடயத்தில் கேட்கும்போது நம்ரூதைப் போன்று பதில் இல்லாமல் திகைத்து நிற்கின்றார்கள்.
சகோதர்களே! இந்த பாகிஸ்தானிய மனிதர் பைஅத் செய்யாமல் இருந்தற்கான காரணம் பொய்பிக்கப்பட்டுவிட்டது.
எனவே இந்த உமர் அலி, தனது வழிகேட்டுக்கொள்கையின் படி, முஸ்லிம் அல்லாத ஒருவரிடம் போய் பைஅத் செய்துள்ளார்.
மற்றவர்களும், பைஅத் செய்யாத உமர் அலியிடம் போய் பைஅத்செய்துள்ளார்கள்.
எனவே, இந்த அறிவிலிகளின் அறியாமை தெளிவாக அம்பலப்படுத்தப்பட்டுவிட்டது.
எனவே சஹாபாக்களை, இமாம்களை பின்பற்றக்கூடாது என்று கூறிக்கொள்ளும், இந்த கூட்டம் உமர் அலியைப் பின்பற்றல்லாம் என விளங்கிக்கொண்டிருக்கின்றார் போலும்!
இன்ஷா அல்லாஹ் தொடரும்......
0 comments:
Post a Comment