விவாதத்திற்கு அழைத்தவர்களே பின்வாங்குகிறார்கள்.நாங்கள் எப்போதும் தயார்.
RASMIN M.I.Sc
அன்பின் சகோதரர்களே!
கடந்த நோன்புப் பெருநாள் முடிந்து ஓரிரு நாட்களில் நமது கையடக்க தொலை பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.
அந்த அழைப்பில் பேசிய நபர் அழைப்பை ரெகாடிங் போட்டுக் கொண்டு நம்முடன் பேசினார்.அப்போது நம்மிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்.நாம் அதற்கு பதில் சொல்ல முன்னால் தற்போது நாம் பஸ் ஸ்டாப்பில் நிற்கிறோம் கொஞ்ச நேரம் கழித்து எம்மை தொடர்பு கொள்ளுங்கள் என்று தெரிவித்தோம்.
ஆனால் அதனை மறுத்த அந்த நபர் நம்முடன் பேசியே தீரவேண்டும் எனக் கூறி பேச ஆரம்பித்து பெருநாள் தினத்தில் தக்பீர் எப்படி சொல்ல வேண்டும் என நம்மிடம் கேட்டார்.
அதற்கு நாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது அந்த நபர் இடை மறித்து நம்மிடம் பேச ஆரம்பித்து தொடராக சில கேள்விகளை கேட்டவர் அதிலே ஒரு கேள்வியாக நீங்கள் நியாயவானா? நேர்மையாளனா? போன்ற கேள்விகளையும் கேட்டார்.
அவருடைய அந்தக் கேள்விக்கு பதில் கொடுத்த நாம் நாங்கள் நியாயவானா? நேர்மையாளனா? என்பதைப் பற்றி பேசுவதற்கு முன்னர் தாங்கள் நியாயவானாக இருந்தால் உங்கள் பெயரைச் சொல்லுங்கள் என நாம் சொல்ல.சிரமப் பட்டு பெயரைச் சொன்னார்.
யார் அந்த நபர்?
ஐ.ஆர்.ஓ என்ற பெயரில் குழந்தை உளவியல் ஹவ்டூ லேன் என்றெல்லாம் பணம் அறவிட்டு நிகழ்ச்சி வைத்து எடுத்த பணம் எவ்வளவு கொடுத்த பணம் எவ்வளவு என்பதையெல்லாம் பொதுமக்களுக்கு அறிவிக்காமல் அமைப்பு நடத்தும் மாபெரும் மேதை(?)ஆதில் ஹஸன் தான் அவர்.
கொழும்பு மாபோலையில் நடந்ததாக ஒரு சம்பவத்தை சொன்னவர் அதற்கு அந்த சம்பவத்திற்காக நம்மை விவாதத்திற்கு அழைத்தார்.
அவர் நம்மை விவாதத்திற்கு அழைத்த மறுகணம் நாமும் விவாதத்திற்கு தயார் என்று சொல்லி எந்தத் தலைப்பில் விவாதிக்க ஆசைப்படுகிறீர்களோ அந்தத் தலைப்பைக் குறிப்பிட்டு எமது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமைக்கு ஒரு கடிதம் தரும்படி கேட்டுக் கொண்டோம்.
கடிதமும் இல்லை ஆதிலும் இல்லை.
பெருநாள் முடிந்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் நம்முடன் அந்த மேதை(?)பேசுகிறார்.நாமும் விவாதத்திற்கு தயார் எனக்கூறி கடிதம் கேட்கிறோம் அதற்கும் ஒத்துக் கொள்கிறார்.ஆனால் இதுவரை அவர்கள் எந்தக் கடிதத்தையும் நமக்குத் தரவில்லை.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராசிக் அவர்கள் குறிப்பிட்ட அமைப்பின் செயலாளருடன் தொலைபேசியில் கடிதம் தரும்படி கோறிய போதெல்லாம் இதோ இரண்டு நாட்களில் தருகிறோம் மூன்று நாட்களில் தருகிறோம் என்று கூறி நாட்களை கடத்தினார்கள்.
இருதியாக நாமும் நமது கைபேசியில் இருந்து குறிப்பிட்ட நபருக்கு தொடர்பு கொண்டு கடிதத்தை கேட்ட நேரத்தில் இரண்டு நாட்களில் தருவதாக சகோதரர் அப்துர் ராசிக்கிடம் சொன்ன அதே பதிலை சொன்னவர் சொல்லி இவ்வளவு நாளாகியும் இன்னும் தரவில்லை.
சகோதரர் அப்துர் ராசிக் அவர்கள் குறிப்பிட்ட அமைப்பின் செயலாளருடன் பேசிய ரெகாடிங் நம்மிடம் இருக்கிறது தேவைப்படின் அதனை இணையதளத்தில் வெளியிடுவோம் இன்ஷா அல்லாஹ்.
இறுதியாக :
நாம் விவாதத்திற்கு எப்போதும் தயாராகவே இருக்கிறோம்.ஐ.ஆர்.ஓ தயாரா? ஆதில் ஹஸன் தயாரா?
குறிப்பு : ஆதில் ஹஸன் நம்முடன் பேசிய ரெகாடிங் அவரிடமே இருக்கிறது தேவைப்படுபவர்கள் அவரிடம் அதனைப் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள் (தருவார்களா? அது நமக்குத் தெரியாது.)
0 comments:
Post a Comment