ஆக்கம் : ஹிஷாம் M.I. Sc
ஹதீஸ் 1
سنن ابن ماجة ـ محقق ومشكول - (2 ஃ 281)
1221- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى ، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ خَارِجَةَ ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ ، عَنِ ابْنِ جُرَيْجٍ ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ : مَنْ أَصَابَهُ قَيْءٌ أَوْ رُعَافٌ أَوْ قَلَسٌ أَوْ مَذْيٌ ، فَلْيَنْصَرِفْ ، فَلْيَتَوَضَّأْ ثُمَّ لِيَبْنِ عَلَى صَلاَتِهِ ، وَهُوَ فِي ذَلِكَ لاَ يَتَكَلَّمُ.
நபி(ஸல்)அவா;கள் கூறினார;கள் யாருக்கு வாந்தியோ அல்லது மூக்கில் இரத்தமோ அல்லது வாயில் இரத்தமோ, இச்சை நீரோ ஏற்பட்டதோ அவா; திரும்பி வுழு செய்யட்டும். அவா; (யாருடனும்) பேசாமல் இருந்தால் அந்த தொழுகையைத் தொடரட்டும்.
அறிவிப்பவா;: ஆயிஷா(ரலி)அவர;கள் நூல்: இப்னுமாஜா 1221
இந்த செய்தியின் அடிப்படையில் வாந்தி எடுத்தால் அது வுழூஃவை முறிக்கும் மீண்டும் வுழூஃ செய்து விட்டுத்தான் தொழவேண்டும் என்று அனேகமான மக்கள் கருதிக்கொண்டு இருக்கின்றனர;. ஆனால், இந்த செய்தி ஆதாரபூர;வமான செய்தி அல்ல.
இந்த செய்தியில் இடம் பெற்றிறுக்கும் அறிவிப்பாளரான இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர; பலவீனமானவா;. இவரை ஹதீஸ் துறை இமாம்கள், இவர; ஷாம் வாசிகள் அல்லாதவர;களிடம் இருந்து அறிவித்தால் இவருடைய செய்தி ஆதாரம் அற்றது என்று விமர;சனம் செய்கின்றார;கள். இன்னும், இவர; ஹிஜாஸ் வாசிகளிடம் இருந்து அறிவித்தால் அந்த செய்தி பலவீனமானது என்றும் கூறுகின்றனர;. எனவே, இவர; இப்னு ஜுரைஜ் என்று
சொல்லக்கூடியவர; வழியாகத்தான் இந்த செய்தியை அறிவிக்கிறார;. இப்னு ஜுரைஜ் என்பவர; ஹிஜாஸ் வாசியாவாh;. எனவே, இந்த செய்தி பலவீனமான செய்தியாகும்.
வாந்தி வந்தால் வுழூஃ முறியும் என்ற கருத்து தவறான கருத்தாகும். வாந்தி வந்தால் வுழூஃ முறியாது.
ஹதீஸ் 2
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلَّالُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَنْبَأَنَا يَزِيدُ بْنُ عِيَاضٍ حَدَّثَنَا أَبُو ثِفَالٍ عَنْ رَبَاحِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سُفْيَانَ أَنَّهُ سَمِعَ جَدَّتَهُ بِنْتَ سَعِيدِ بْنِ زَيْدٍ تَذْكُرُ أَنَّهَا سَمِعَتْ أَبَاهَا سَعِيدَ بْنَ زَيْدٍ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرْ اسْمَ اللَّهِ عَلَيْهِ (ابن ماجة392)
நபி(ஸல்)அவா;கள் கூறினார;கள் வுழூஃ இல்லாதவனுக்கு தொழுகையில்லை யார; அல்லாஹ்வின் பெயரை கூறவில்லையோ அவனுக்கு வுழூஃ இல்லை.
அறிவிப்பவர;: ஸஈத் பின் ஸைத் நூல்: இப்னு மாஜா 392
இந்த அறிவிப்பாளர; தொடரில் இடம் பெற்றிறுக்கும் யஸீத் பின் இயால் என்பவர; பொய் சொல்லக்கூடியவா; என்று மாலிக் இமாம் குறிப்பிட்டு உள்ளார;. மற்ற இமாம்களும் இவர; பலவீனமானவா; என்று குறிப்பிட்டுள்ளனா;. இன்னும் அபு+ சிபால் என்று சொல்லக்கூடிய அறிவிப்பாளரும் பலவீனமானவர;. இவரை இமாம் புகாரி பலவீனமானவர; என்று குறிப்பிட்டுள்ளார;.எனவே, இந்த செய்தி பலவீனமானதாகும்.
இந்த அறிவிப்பு இல்லாமல் வேறு சில அறிவிப்புக்கள் இதே கருத்தில் வந்து இருக்கிறது. இருந்தாலும் அவை அனைத்தும் பலவீனமான அறிவிப்பாளர; தொடரைக் கொண்டு தான் இடம் பெற்றுள்ளது.
வுழூஃ செய்யும் போது அல்லாஹ்வின் பெயர; கூறவேண்டும் என்று ஆதாரபு+ர;வமான செய்தி இடம் பெற்றுள்ளது. ஆனால், அல்லாஹ்வின் பெயர; கூறப்படவில்லை என்றால் வுழூஃ ஏற்றுக் கொள்ளப்படாது என்ற கருத்தில் வரக்கூடிய செய்திகள் தான் பலவீனமானவை.
ஹதீஸ் 3
حَدَّثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ زَنْجَوَيْهِ الْبَغْدَادِيُّ وَغَيْرُ وَاحِدٍ قَالَ حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ قَرْمٍ عَنْ أَبِي يَحْيَى الْقَتَّاتِ عَنْ مُجَاهِدٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِفْتَاحُ الْجَنَّةِ الصَّلَاةُ وَمِفْتَاحُ الصَّلَاةِ الْوُضُوءُ رواه الترمذي
சொர்க்கத்தின் திறவுகோல் தொழுகை, தொழுகையின் திறவுகோல் வுழூஃ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)அவா;கள் நூல் : திர்மிதீ (4)
இதே செய்தி அஹ்மத் (14135), தப்ரானீ முஃஜமுல் அவ்ஸத்,பாகம் :3, பக்கம் :336, தப்ரானீ முஃஜமுஸ் ஸகீர் பாகம்:1, பக்கம் : 356 ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் அபூ யஹ்யா அல்கத்தாத் என்பவரும், நான்காவது அறிவிப்பாளர் சுலைமான் பின் கர்ம் என்பவரும் பலவீனமானவர்களாவர்.
அபூயஹ்யா என்பவர் பலவீனமானவர் என்று பர்திய்யீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அபூயஹ்யா அல்கத்தாத் என்பவர் வலிமையானவர் இல்லை என்று இமாம் நஸாயீ அவர்கள் கூறிப்பிட்டுள்ளார்கள்.
சுலைமான் பின் கர்ம் என்பவர் பலவீனமானவர் என்று ஒரு இடத்திலும், எந்த மதிப்பும் அற்றவர் என்று இன்னொரு இடத்திலும் இமாம் இப்னுமயீன் குறிப்பிட்டுள்ளார்கள்.
இவர் நம்பகமானவர் இல்லை என்று அபூஸுர்ஆ அவர்களும் அபூஹாத்திம் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். பலவீனமானவர் என்று இமாம் நஸாயீ அவர்களும் இவர் ராஃபிளிய்யா (ஷியா) கொள்கையில் மிகைத்தவர் என்றும் செய்திகளை புரட்டுபவர் என்றும் இமாம் இப்னுஹிப்பான் அவர்கள் கூறியுள்ளார்கள்.
0 comments:
Post a Comment