ரமழான் மாதம் நம்மை நோக்கி வந்து கொண்டிருப்பதினால் ஸ்ரீ லங்கா தவ்ஹீ்த் ஜமாத்தின் பிரச்சாரகர்கள் பிறை பற்றிய மறு ஆய்வை மேற்கொண்டார்கள். நோன்பு , ஹஜ்ஜுப் பெருநாள் என்று வந்தாலே பிறை பற்றிய கேள்விகளும், பிரச்சினைகளும் அடிக்கடி ஏற்படுவதினால் அந்தப் பிரச்சினை பற்றிய மறு ஆய்வொன்றை நடத்த வேண்டும் என்று தலைமை முடிவு செய்து அதற்கான அழைப்பையும் விடுத்தது.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தாயிக்கள் கலந்து கொண்டு தமது ஆய்வுகளையும் வாதப் பிரதி வாதங்களையும் முன்வைத்தார்கள் இறைவனின் அருளால் மிகவும் சிறப்பாக நடை பெற்ற இந்த ஆய்வரங்க நிகழ்ச்சியில் இது வரை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் கொண்டுள்ள பிறை பற்றிய முடிவுதான் சரியானது என்றும் இதற்கு மாற்றமான சர்வதேச பிறை மற்றும் கணித்தல் முறை என்பவை தவறு என்றும் இலங்கையில் எங்கு பார்த்தாலும் பிறைத் தகவலின் உண்மைத் தன்மையை உறுதி செய்து ஏற்றுக் கொள்வது என்ற முடிவை ஆய்வுக் குழு எடுத்துள்ளது.
ஆய்வுக் குழுவின் முடிவுகள் விரிவான கட்டுரையாக பின்பு வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்.
0 comments:
Post a Comment