Tuesday, April 19, 2011

விவாதிப்பது ஹராமா ? ஸில்மியின் ஸில்மிசத்திற்கு பதில்.

விவாதிப்பது ஹராமா ?  ஸில்மியின் ஸில்மிசத்திற்கு பதில்.

ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாம்!
RASMIN M.I.Sc

அன்பின் சகோதரர்களே ! சத்தியத்தை தயங்காமல் எத்திவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமலும், இறைவனுக்கு மாத்திரமே அஞ்சியும் நாம் செயல்படுத்தி வருகிறோம் அல்ஹம்துலில்லாஹ்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தங்களை மார்க்க அறிஞர்களாக மக்கள் மத்தியில் இனம் காட்டி தங்களின் பெயர்களை நீர் கொழும்பில் இருந்து யாழ்ப்பானம் வரை எழுதி வைத்துக் கொள்ளும் யஹ்யா சில்மி போன்றவர்கள் மார்க்கத்திற்கு விரோதமான ஸலப் கொள்ளை என்ற ஒரு புதிய வழிகெட்ட கொள்கையை பரப்ப முற்படுவதும் அதற்கெதிராக இறைவனின் உதவியால் குா்ஆன் சுன்னா அடிப்படையில் நாம் விளக்கம் சொல்லி வருவதும் வாசகர்கள் அறிந்த ஒன்றுதான்.

இந்தச் சந்தர்ப்பத்தில் ஸலபுக் கொள்கை என்ற பெயரில் குா்ஆனையும், நபியவர்களின் வழிகாட்டுதலையும் விட்டும் விலகி, ஸஹாபாக்களின் சொல் செயல்பாடுகளும் மார்க்கமாக மாறும் என்ற கொள்கையை மக்கள் மத்தியில் பரப்ப முயலும்  சில்மி போன்றவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களுக்கெல்லாம் தொடராக நாம் பதில் கொடுத்து வந்தோம்.

அந்த பதில்களில் ஒன்றுக்குக் கூட குா்ஆன், சுன்னா அடிப்படையில் மறுப்புத்தர வக்கற்ற ஸ(க)லபிக் கும்பல் மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே அரைக்க ஆரம்பித்துள்ளது.

ஏற்கனவே சுய இன்பம் ஹழால் என்று தன்னுடன் சேர்ந்திருக்கும் இளைஞர்களை குஷிப்படுத்துவதற்காக மார்க்கத்திற்கு விரோதமான அசிங்கமான ஒரு பத்வாவை இந்த ஷேக் (?) கொடுத்ததும் இவருடைய மார்க்க அறிவின் தெளிவின்மையையும், மக்கள் மத்தியில் அசிங்கத்தை பரப்ப முயலும் கபடத்தனத்தையும் நாம் சுட்டிக்காட்டியது வாசகர்களுக்கு நினைவிருக்கும்.

அதனைத் தொடர்ந்து இவருடைய வழிகெட்ட கொள்கைகளை மக்கள் மத்தியில் போட்டுடைப்பதற்காக, ஸலபிக் கொள்கை என்ற பெயரில் அந்தக் கும்பல் சொல்லும் கருத்துக்கள் தொடர்பாகவும், சுய இன்பம் ஹழால் என்ற சில்மியின் சில்மிசக் கருத்து தொடர்பாகவும் பகிரங்க மேடையில் விவாதிப்பதற்காக நாம் அழைப்பு விடுத்திருந்தோம், அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு பொது மேடையில் மக்கள் மத்தியில் தனது கருத்தை நிரூபிக்கத் திரானியற்ற இந்த மா (?) மேதை (?) விவாதிப்பதே ஹராம் என்று  உளர ஆரம்பித்துள்ளார்.

ஆடத் தெரியாவிட்டால் மேடை கோணல் என்பதா?

ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல் என்று ஒரு பழ மொழி சொல்வார்கள். அந்தப் பழ மொழிக்கு அச்சொட்டாக ஒத்துப் போகக் கூடியவராக இந்த சில்மி இருப்பதைப் பார்க்க முடியும்.

விவாதிப்பதற்கு தனக்கு திறமையும், திரானியும் இல்லை என்பதற்காக விவாதமே ஹராம் என்று சொல்லிவிட்டால் எந்தப் பிரச்சினையுமில்லை என்பதால் விவாதிப்பது ஹராம் – ஹராத்தை செய்ய நான் வரமாட்டேன் என்று குரலெழுப்ப ஆரம்பித்துவிட்டார்.

சுய இன்பம் என்ற ஹராத்தை செய்யும் படி இளைஞர்களை தூண்டுவாராம் ஆனால் தனது கருத்தை நிரூபிப்பதற்காக விவாதக் களத்திற்கு அழைத்தால் விவாதமே ஹராம் என்று சால்சாப்பும் சொல்வாராம்.

விவாதிப்பது மார்க்க அடிப்படையில் தடை செய்யப்பட்டதா?

விவாதிப்பதைப் பொருத்தவரை ஸலபிகள் இரண்டும் கெட்டான் குழப்ப நிலையை எடுத்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

அதாவது மக்கள் மத்தியில் இரு தரப்பாராக அமர்ந்து ஒரு தரப்பார் தங்கள் வாதத்தை எடுத்து வைக்க மறு தரப்பார் அதற்கான பதிலை உடனுக்குடன் வழங்குவதுதான் இவா்கள் பாணியில் ஹராம் என்றாகிறது.

இதே நேரம் அவா்கள் ஒரு மறுப்பை நமக்கெழுத அதற்குறிய மறுப்பை எழுத்தில் நாம் கொடுத்தால் அது அவா்களிடம் ஹழானான ஒன்று.

மொத்தத்தில் பேச்சில் விவாதிக்கக் கூடாது எழுத்தில் விவாதிக்களாம் என்பதுதான் இவா்கள் சொல்லாமல் சொல்லும் கருத்து.

ஆனால் திருமறைக் குா்ஆனோ விவாதிப்பது மார்க்கத்தில் ஆகுமாக்கப்பட்ட ஒரு வழிமுறை என்பதை மிகத் தெளிவாக நமக்கு உணர்த்துவதுடன், நபிமார்களே மறுப்பாளர்களிடம் விவாதித்ததையும் நமக்கு தெளிவாக விளக்குகிறது.

وَلَا تُجَادِلُوا أَهْلَ الْكِتَابِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ إِلَّا الَّذِينَ ظَلَمُوا مِنْهُمْ وَقُولُوا آمَنَّا بِالَّذِي أُنْزِلَ إِلَيْنَا وَأُنْزِلَ إِلَيْكُمْ وَإِلَهُنَا وَإِلَهُكُمْ وَاحِدٌ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ [العنكبوت : 46

வேதமுடையோரில் அநீதி இழைத்தோரைத் தவிர மற்றவர்களிடம் அழகிய முறையில் தவிர வாதம் செய்யாதீர்கள்! "எங்களுக்கு அருளப்பட்டதையும், உங்களுக்கு அருளப்பட்டதையும் நம்புகிறோம். எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஒருவனே! நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்'' என்று கூறுங்கள்! (திருக்குர்ஆன் 29:46)

அழகிய முறையில் விவாதம் செய்யும் படி இறைவனே நமக்கு கட்டளையிடுவதை மேற்கண்ட வசனம் எடுத்தியம்புகிறது.

قَالُوا يَا نُوحُ قَدْ جَادَلْتَنَا فَأَكْثَرْتَ جِدَالَنَا فَأْتِنَا بِمَا تَعِدُنَا إِنْ كُنْتَ مِنَ الصَّادِقِينَ [هود : 32

நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர்! அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர்! உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்!'' என்று அவர்கள் கூறினர். (திருக்குர்ஆன் 11:32)

ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ [النحل : 125

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; நேர் வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன். (திருக்குர்ஆன் 16:125)

திருக்குர்ஆனின் பல வசனங்கள் நேருக்கு நேர் விவாத்ம் செய்யும் வகையில் அமைந்திருப்பதைக் காணுங்கள்.


எதிரியுடன் பகிரங்க விவாதம் செய்த இப்றாஹீம் நபியவர்கள்.


أَلَمْ تَرَ إِلَى الَّذِي حَاجَّ إِبْرَاهِيمَ فِي رَبِّهِ أَنْ آتَاهُ اللَّهُ الْمُلْكَ إِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ قَالَ أَنَا أُحْيِي وَأُمِيتُ قَالَ إِبْرَاهِيمُ فَإِنَّ اللَّهَ يَأْتِي بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِي كَفَرَ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ [البقرة : 258

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? "என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்'' என்று இப்ராஹீம் கூறிய போது, "நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்'' என்று அவன் கூறினான். "அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!'' என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (திருக்குர்ஆன் 2:258)

நபி இப்றாஹீம் அவா்கள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்யும் போது இப்றாஹீம் நபியவர்களை மறுத்தவனோ தானும் இறைவன் தான் என்று இப்றாஹீம் நபியவர்களுடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய ஆரம்பித்தான். 

அவனுடைய வாதத்தை உடைத்து நொருக்கும் விதமாக இறைவனின் இலக்கணம் தொடர்பாக நபி இப்றாஹீம் அவா்கள் அவனிடம் நேருக்கு நேர் தனது வாதத்தை எடுத்து வைக்கிறார்கள்.

"என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்'' என்று இப்றாஹீம் நபியவர்கள் தனது வாதத்தை முன்வைக்கும் போது "நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்'' என்று எதிரி தனது வாதத்தை முன்வைத்தான் அப்போது அவனுடைய பொய்யான வாதத்தை அடித்து நொருக்கும் விதமாக நபி இப்றாஹீம் அவா்கள் "அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!'' என்கிறார்கள், அந்தக் கேள்விக்கு பதில் கொடுக்க முடியாமல் அவன் வாயடைத்துப் போனான் என்று இறைவனே தனது திருமறைக் குர்ஆனில் மிகத் தெளிவாக நமக்குச் சுட்டிக் காட்டுகிறான்.

பொது மேடையில் மக்கள் மத்தியில் விவாதிப்பது ஹராம் என்று சொல்லக் கூடியவர்களுக்கு நேரடி மறுப்பாக இந்த வசனம் அமைந்துள்ளது.

மக்கள் மத்தியில் பொது மேடையில் விவாதம் செய்வது ஹராம் என்றால் நபி இப்றாஹீம் அவா்கள் செய்தது தவறானதா?

நாம் விவாதத்திற்கு அழைக்கும் போது விவாதம் செய்வது ஹராம் – ஹராத்தை செய்ய எங்களை அழைக்கிறார்கள் என்றெல்லாம் கூப்பாடு போடும் இவா்கள் இப்றாஹீம் நபியைப் பார்த்து இந்த வார்த்தைகளை கூறத் தயாரா?
فَاتَّبِعُوا مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا [آل عمران : 95

எனவே இப்றாஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள்! அவா் உண்மை வழியில் நின்றார்.(3-95)

இப்றாஹீம் நபியவர்களின் வழிமுறையைப் பின்பற்றும் படி இறைவன் நமக்குக் கட்டளையிடுகிறான். அசத்தியவாதிகளை இனங்காட்டுவதற்கும், சத்தியத்தை நிலை நாட்டுவதற்கும் இப்றாஹீம் நபியின் மூலமாக இறைவன் நமக்குக் காட்டிய ஒரு சிறப்பான வழி முறை விவாதம் செய்வதாகும் இந்த விவாதம் செய்யும் வழிமுறையை யார் மறுக்கிறார்களோ,. நம்மை பார்த்து ஹராத்திற்கு அழைப்பவா்கள் என்று சொல்கிறார்களோ அவா்கள் இந்த வார்த்தையை நமக்கு முன் நபி இப்றாஹீமுக்குத் தான் சொல்கிறார்கள் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

وَإِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِنْ مِثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُمْ مِنْ دُونِ اللَّهِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ [البقرة : 23

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 2:23)

குா்ஆனில் சந்தேகம் கொள்பவர்களைப் பார்த்து இது போன்ற ஒரு அத்தியாயத்தைக் கொண்டு வரும்படி இறைவனே சவால் விட்டு விவாத அழைப்பைக் கொடுக்கிறான். யாராக இருந்தாலும் தனது கருத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவா்களுக்கு இருக்கிறது என்பது மேற்கண்ட வசனத்தின் மூலம் தெளிவாகிறது.

وَقَالُوا لَنْ يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا مَنْ كَانَ هُودًا أَوْ نَصَارَى تِلْكَ أَمَانِيُّهُمْ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ [البقرة : 111

யூதராகவோ, கிறித்தவராகவோ இருப்பவரைத் தவிர (வேறு யாரும்) சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்'' என்று கூறுகின்றனர். இது அவர்களின் வீண் கற்பனை. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்!'' என்று கேட்பீராக! (திருக்குர்ஆன் 2:111)

كُلُّ الطَّعَامِ كَانَ حِلًّا لِبَنِي إِسْرَائِيلَ إِلَّا مَا حَرَّمَ إِسْرَائِيلُ عَلَى نَفْسِهِ مِنْ قَبْلِ أَنْ تُنَزَّلَ التَّوْرَاةُ قُلْ فَأْتُوا بِالتَّوْرَاةِ فَاتْلُوهَا إِنْ كُنْتُمْ صَادِقِينَ [آل عمران : 93

தவ்ராத் அருளப்படுவதற்கு முன் இஸ்ராயீல் (யஃகூப்) தம் மீது தடை செய்து கொண்டதைத் தவிர எல்லா உணவுகளும் இஸ்ராயீலின் மக்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகவே இருந்தன. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தைக் கொண்டு வந்து படித்துக் காட்டுங்கள்!'' என்று (முஹம்மதே! யூதர்களிடம்) கேட்பீராக! (திருக்குர்ஆன் 3:93)

إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ عِبَادٌ أَمْثَالُكُمْ فَادْعُوهُمْ فَلْيَسْتَجِيبُوا لَكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ [الأعراف : 194

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! (திருக்குர்ஆன் 7:194)

முரண்பாடே வழிகேட்டின் முதல் படி தான்.

விவாதிப்பது ஹராம் என்றால் எழுத்தில் விவாதித்தாலும் சரி பேச்சில் விவாதித்தாலும் சரி அது அவா்கள் பாணியில் ஹராமாகத் தான் இருக்க வேண்டும் ஆனால் மேடையில் விவாதிக்க வரமாட்டோம் நீங்களும் எழுதுங்கள் நாங்களும் எழுதுகிறோம் என்ற எழுத்து விவாதத்திற்கு மட்டும் வருவோம் என்பது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதைப் போன்ற தெளிவான முரண்பாடாகும்.

நபி வழியா? ஸலபிகளின் வழியா?

நபி வழியே நம் வழி என்ற பெயரில் மாத இதழ் வெளியிடும் இவர்கள் அந்த விஷயத்திலும் தெளிவான முரண்பாட்டில்தான் இருக்கிறார்கள் என்பதை அவா்கள் தினகரன் பத்திரிக்கையில் வெளியிட்ட விளம்பரமே உறுதிப்படுத்தியுள்ளது.

அதாவது நபி வழியைப் பின்பற்றுவதென்றால் குா்ஆனும், ஸஹீஹான ஹதீஸ்களும் மாத்திரம் தான் வழிமுறையாக இருக்க வேண்டும்.

ஸலபுகள் சொன்னாலும் மார்க்கமாகும் என்ற நிலைபாட்டில் யாராவது இருந்தால் அது குா்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாகும் என்பது நாம் அறிந்ததே.

ஆனால் இந்த ஸலபிஸம் பேசும் போலி பெயர் தாங்கிகளோ நபி வழி நம் வழி என்று பத்திரிக்கைக்குப் பெயர் வைத்துவிட்டு ஸஹாபா வழியே தங்கள் வழி என்று எழுதியுள்ளார்கள்.

அவர்கள் வெளியிட்ட வாசகத்தை அப்படியே தருகிறோம் பாருங்கள்.

இஸ்லாமியப் பெயர் தாங்கி பல சஞ்சிகைகள் சமூகத்தை சீர்கெடுத்துக் கொண்டிருப்பதனால், இஸ்லாத்தின் தூய வடிவமான ஸஹாபா விளக்கத்தை சொல்லி சமூகத்தை சீராக்க, வந்து விட்டது எமது சஞ்சிகை நபி வழி நம் வழி.

ஸஹாபா விளக்கத்தான் நீங்கள் சொல்லப் போகிறீர்கள் அதற்கு ஏன் நபி வழி நம் வழி என்ற பெயர் ஸஹாபா வழி நம் வழி என்று வைத்துக் கொள்ளுங்கள் அதுதான் உங்கள் பத்திரிக்கைக்கு சரியான பெயராக இருக்கும்.

அறிந்து கொண்டே சரியானதை தவறானதுடன் கலக்காதீர்கள் ! உண்மையை மறைக்காதீர்கள் ! (2-42)

0 comments:

Post a Comment