ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக தமிழ்நாட்டில் இருந்து மார்க்கப் பிரச்சாரத்திற்காக இலங்கைக்கு அழைக்கப்பட்டிருந்த தென்னிந்திய மார்க்க அறிஞர் சகோதரர் எம்.ஐ சுலைமான் அவா்கள் நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
அனுராதபுர மாவட்டம் கெக்கிராவையில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் ஹோராப்பொல மற்றும் நேகம ஆகிய கிளைகள் இணைந்து நடத்திய உள்ளரங்க நிகழ்வில் சகோதரர் எம்.ஐ. சுலைமான் அவா்கள் முழுமையான மார்க்கத்தில் முழுமையாக நுழைந்திடுவோம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பேச்சாளர் சகோதரர் ஹிஷாம் எம்.ஐ.எஸ்.ஸி அவா்கள் அல்லாஹ்வின் பாதை எது என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சி நடந்துவிடக் கூடாது என்பதற்காக ஊர் ஊராக கங்கணம் கட்டிக் கொண்டு நமக்கெதிராக செயல்பட்ட போலி தவ்ஹீத்வாதிகளின் முகத்திரையைக் கிழிக்கும் விதமாக பல ஊர்களிலிருந்தும் நூற்றுக் கணக்கானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சியும் இடம் பெற்றது.
இந்நிகழ்ச்சியின் மற்றொரு திருப்பமாக அனுராதபுர மாவட்டத்தின் மிகப்பெரும் முஸ்லீம் கிராமமான கலாவெவயில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் புதிய கிளையொன்றும் ஸ்தாபிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
நன்றி www.sltjweb.com
0 comments:
Post a Comment