மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ரிஸானாவின் கதி என்ன?
பாத்திமா ஷாஹினா
இலங்கையைச் சேர்ந்த ரிஸானா நபீக் என்னும் பெண் சவூதி அரேபியாவில் தான் பணிப்பெண்ணாக பணியாற்றிய வீட்டில் நான்கு மாத வயதுடைய சிசுவின் மரணத்துக்கு காரணமென குற்றஞ் சாட்டப்பட்டு ரிஸானாவுக்கு 2007 ஆம் ஆண்டு ஜுலை மாதம் சவூதி நீதிமன்றம் மரண தண்டனையைத் தீர்ப்பாக வழங்கியது. இக்காலப் பகுதியில் ஊடகங்களில் இச்செய்தி பரபரப்பாக பேசப்பட்டது யாவரும் அறிந்ததே.
தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ரிஸானா மேன்முறையீடு செய்திருந்தார். இம்மேன்முறையீடு ரியாத்திலுள்ள நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு ரிஸானாவின் மரணதண்டனை மீளவும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. இம்மரண தண்டனையை சவூதி மன்னர் அங்கீகரிக்கும் பட்சத்தில் ரிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விடும்.
பெண்களை நிர்வகிப்பவர்களாக ஆண்களை அல்லாஹ் படைத்துள்ளான். பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு பெற்றோருக்கு இருக்கும் நிலையில் தகப்பன் சம்பாதிப்பதை விட்டு விட்டு பிள்ளையை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும் ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். (அல்குர்ஆன் 4:34)

பெண்கள் மஹ்ரமான ஆண் துணையின்றி பயணம் மேற்கொள்வதை தடுக்கின்ற மார்க்கமாக இஸ்லாம் மார்க்கம் உள்ளது. இந்த நிலையில் பெண் பிள்ளைகளை அதுவும் போலியான வயதைக் காட்டி நாட்டின் சட்டத்தையும் மதிக்காமல் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு அனுப்பிய பெற்றோரை முதலில் கண்டிக்க வேண்டும்.
இதை ஒவ்வொரு பெற்றோரும் யோசிக்க வேண்டும். ஆண்களும் பெண்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நாட்டில் பெண்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அனுப்புவதை தடை செய்யும் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வர வேண்டும்.(அதிக அந்நிய செலாவணியைப் பெற்றுக் கொள்வதிலேயே அரசாங்கம் முன்னுரிமை காட்டுகிறது) அப்போது தான் பெண்களின் மானம் மரியாதை பாதுகாக்கப்படும். இதற்கு இஸ்லாம் மார்க்கம் தான் சரியான பாதுகாப்பு அரணை போட்டுள்ளது.
எந்த ஒரு பெண்ணும் மஹ்ரம் துணை இல்லாமல் ஒரு பரீத் –அதாவது 12 மைல்- தூரத்துக்கு பயணம் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: இப்னு குஸைமா பைஹகீ அபூதாவூத் ஹாகிம்
இதன் அடிப்படையில் பெண்கள் 12 மைல் தொலைவு உள்ள தூரத்துக்கு தனியாகப் பயணம் செய்ய அனுமதி உள்ளது. அதற்கு மேல் தனியாகப் பயணம் செய்ய அனுமதி இல்லை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே, தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானனின் உடைமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான். (நூல்: புகாரி 2409)
ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்புகளை பற்றி விசாரிக்கப்படும் மறுமை நாளைப் பயந்துஇ அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்துடன் அவரவர் பொறுப்புகளை ஒழுங்காக செய்தால் ஈருலக நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம். மார்க்கத்தின் வரம்புகளைஇ வரையறைகளை மீறும் போது தான் கஷ்டங்களை துன்பங்களை அனுபவிக்க வேண்டி ஏற்படும். இவற்றைக் கவனத்தில் கொண்டு நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் என்பதையும் மனதிலிருத்தி எம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோமாக.
0 comments:
Post a Comment