ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கும் சகோதரர் அர்ஹம் மவ்லவி அவர்களுக்கும் இடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இரண்டு தலைப்புக்களில் விவாத ஒப்பந்தம் நடை பெற்றமை வாசகர்கள் அறிந்ததே! விவாதத்திற்கான இடமும் நேரமும் குறிப்பிடப்பட்டு விவாத ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட சில நாட்களிலேயே தான் விவாதத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக சகோதரர் அர்ஹம் அவர்கள் தொலை பேசி மூலம் நமது தலைமைக்கு அறிவித்தார் (அவர் அறிவித்த ரெகோடிங் நமது கைவசம் உள்ளது)
அதற்கு எழுத்து மூலம் அதனை எழுதித் தருமாறு ஜமாத் வேண்டுகோள் விடுத்த நேரம் அவர் நமது தலைமையகத்திற்கே நேரடியாக வந்து ஒரு கடிதத்தை சமர்ப்பித்தார்.
(அப்போது அவர் நம்முடன் பேசிய விஷயங்கள் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.)
தலைமையத்திற்கு வந்து ஒரு கடிதத்தைத் தந்தவர் தபால் மூலமாக மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார். இரண்டு கடிதத்திற்கும் சேர்த்து நமது ஜமாத் சார்பாக பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.அவற்றைக் கீழே தருகிறோம்.
2011.10.29 அன்று நமது தலைமையத்திற்கு வந்து சகோதரர் அர்ஹம் தந்த கடிதம்.
2011.11.04 அன்று தபால் மூலமாக சகோதரர் அர்ஹம் அனுப்பிய கடிதம்.
2011.11.05 அன்று நாம் சகோதரர் அர்ஹம் அவர்களுக்கு அனுப்பிய கடிதம்.
0 comments:
Post a Comment