அனுராதபுர மாவட்டம் நேகமையில் திடலில் பெருநாள் தொழுகை நடத்தியதற்காக பித்அத் வாதிகளினால் தாக்கப்பட்ட சகோதரர்கள்.
கடந்த பெருநாள் தினத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக வழமை போல் எல்லாக் கிளைகளிலும் பெருநாள் திடல் தொழுகை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அனுராதபுர மாவட்டம் பலாகல தேர்தல் தொகுதிக்குற்பட்ட நேகம என்ற ஊரிலும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நேகம கிளை சார்பாக குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் அடிப்படையில் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்குறிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
நேகம பெரிய பள்ளி நிர்வாகத்தைச் சேர்ந்த பித்அத் வாதிகள் திடல் தொழுகையைத் தடுப்பதற்கு பல விதமான முயற்சிகளையும் மேற்கொண்டார்கள்.
சரியாக காலை 7.00 மணிக்கு தொழுகை நடத்துவதற்கு நமது சகோதரர்கள் தயாரான நேரத்தில் பித்அத் வாதிகள் ஒரு பெரும் கூட்டத்தினர் தொழுகையைத் தடுக்கும் நோக்கத்துடன் அங்கு வந்து குழுமினார்கள்.
பள்ளித் தலைவரின் லச்சனமும், பச்சைத் தூசனமும்.
தொழுகைக்காக நமது சகோதரர்கள் திடலுக்கு சென்றதிலிருந்து திடலுக்கு வெளியில் கூடி நின்ற பித்அத் வாதிகள் கடுமையான கெட்ட வார்த்தைகளைக் கொண்டு திட்டிக் கொண்டிருந்தார்கள்.
அதிலும் குறிப்பாக பெரிய பள்ளியின் தலைவராக இருக்கக் கூடியவர் பச்சை பச்சையாக கெட்ட வார்தைகளை மற்றவர்களை விடவும் ஆக்ரோஷமாகவும், அதிகமாகவும் அள்ளி வீசிக் கொண்டே திடலை நோக்கி வந்தார்.
தொழுகையைத் தடுத்த பாவிகள்.
தொழுகை ஆரம்பிப்பதற்கு முன்பே தொழுவதற்குத் தயாராகிய சகோதரர்களை நோக்கி கற்களைக் கொண்டும் தென்னை மரத்தின் மட்டைகள் மற்றும் தேங்காய்க் கோதுகளைக் கொண்டும் வீசி அடித்தார்கள். இதில் நமது சில சகோதரர்கள் பாதிக்கப்பட்டு இரத்தம் பீரிட்டமையும் குறிப்பிடத் தக்கதாகும்.
ஜமாத்தின் பேச்சாளர் சகோதரர் நப்லி (தவ்ஹீதி) அவர்கள் தொழுகையை ஆரம்பித்து தக்பீர் சொல்ல ஆரம்பித்த நேரம் தொழுகையைத் தடுப்பதற்காக வந்த பாவிகள் நமது சகோதரர்கள் தொழுத திடலுக்கு வந்தார்கள். தக்பீர் சொல்லிக் கொண்டிருந்த இமாமின் தக்பீரைப் பிரித்து தொழுகையை தடுத்தார்கள் மீண்டும் தக்பீர் சொல்லி தொழுகையை விடாது தொடர்ந்த சகோதரர் நப்லி அவர்களை சரமாரியாகத் தாக்கி கண்ணத்தில் அரைந்து தொழுத இடத்தை விட்டும் இழுத்தெடுத்து வெளியேற்றினார்கள்.
அதைத் தொடர்ந்து அங்கு தொழுகைக்காக நின்றிருந்த மற்ற சகோதரர்களையும் அவர்கள் தாக்க ஆரம்பித்தார்கள். ஆண், பெண் சிறுவர்கள் என்று அனைவரும் அல்லோல கல்லோலப்படும் அளவுக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினையை உண்டாக்கி நபி வழித் தொழுகைக்கு தடை விதிக்க முயன்றது அந்த பித்அத் கூட்டம்.
இந்த கயவர்களின் கொடூர தாக்குதலில் பாதிக்கப்பட்ட சகோதரர் நப்லி அவர்கள் கல்னாவை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
நமது சகோதரர்களை பித்அத் வாதிகள் தாக்கிய வீடியோ விரைவில் எமது தலைமையகத்தின் இனைய தளத்தில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்.
0 comments:
Post a Comment