Monday, April 07, 2025

Saturday, January 14, 2012

மதம் அறியாமையின் சின்னமா?

எம்.ஏ.ஹபீழ் ஸலபி
 
 மதம் அறியாமையின், அவநம்பிக்கையின் சின்னமாகவும், மதத்தின் பக்கம் எடுத்துவைக்கின்ற ஒவ்வொரு அடியும் பிற்போக்குத்தனத்தின் பக்கம் எடுத்துவைக்கப்படுகின்ற அடியாகவும் கருதப்படுகின்ற ஒரு நிலையை நாம் இன்று சந்திக்கின்றோம்.

மதத்திற்கு எதிராக எடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு அடியும் முன்னேற்றத்தின் பக்கம் எடுத்து வைக்கப்படுகின்ற அடியாகவும் கருதுவதற்கும், மதம் என்றால் அபின் – போதை, கடவுள் இல்லை. கற்பித்தவன் முட்டாள், வணங்கியவன் காட்டுமிராண்டி என்றெல்லாம் ஆவேசத்துடன் வீர முழக்கமிடுவதற்கும் காரணமுண்டு,

அறிவுக்கு ஒவ்வாத ஜீரணிக்க முடியாத முரண்பாடுடைய கோட்பாடுகள், கல்லையும் மண்ணையும் மரத்தையும் செருப்பையும் நெருப்பையும் வணங்கும் பல தெய்வக் கொள்கையும் அதன் அடிப்படையிலான தீண்டாமை, இனமாச்சாரிய மதங்களும் அதில் காணப்படும் மூட சடங்கு சம்பிரதாயங்களும், மதப் போதகர்களின் பண்பற்ற தன்மைகளும் உலக சுகபோக படாடோப வாழ்க்கையுமே காரணமாக அமைந்தன.

இன்று உலகின் வியாபிதம் பெற்ற மதங்களாக கருதப்படும் மதங்களின் அறிவியல் முரண்பாட்டுத் தன்மை, மூட நம்பிக்கை சிலவற்றை மட்டும் இங்கு தருகின்றேன்.

பழைய ஏற்பாடு ஆதியாகமத்தின் முதல் அத்தியாயத்தின் முதல் இரண்டு வசனங்களை முதலில் நோக்குவோம்.

1.         ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்
2.         பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. (without form & void) ஆழத்தின் மேல் இருள் இருந்தது. தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்.

உலகம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் எங்கும் இருள் மயமாக இருந்தது என்று பைபிள் - பழைய ஏற்பாடு ஆரம்பிக்கிறது. 'இதைப்பற்றி நான் ஒன்றும் கூற விரும்பவில்லை' என மாரிஸ் புகையில் கூறுகிறார். ஆனால் ஆரமபத்திலேயே நீர் காணப்பட்டது என்பதை விஞ்ஞானிகள் ஒத்துக் கொள்ளமாட்டார்கள். ஆரம்பத்தில் ஒரு புகை மண்டலமாக இருந்துதான் இப்பிரபஞ்சம் வடிவம் பெற்றிருக்க வேண்டும் என்பது அறிவியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.

'(அல்லாஹ்) ஆகாயத்தின் பால் திரும்பினான்,
அது ஒரு புகையாக இருந்தது' (அல்குர்ஆன் 41:11)

புகை மண்டலமாக உருவாவதற்கு முன்னர், தன்ணீர் - ஜலம் - தோன்றியிருக்க முடியாது. அடுத்தது ஆதியாகம் மூன்றிலிருந்து ஐந்தாவது வாக்கியம் வரை நோக்குவோம்.

3. தேவன் வெளிச்சம் உண்டாகக் கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று
4.  வெளிச்சம் நல்லது என தேவன் கண்டார்
5. வெளிச்சத்தையும், இருளையும் தேவன் வௌ;வேறாகப் பிரித்தார். தேவன் வெளிச்சத்திற்கு பகல் என்று பெயரிட்டார். இருளுக்கு இரவு எனப் பெயரிட்டார். சாயங்காலமும், விடியக்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.

இந்தப் பிரபஞ்சத்திற்கு வெளிச்சத்தைக் கொடுக்கக்கூடியது இப்பிரபஞ்சத்திலுள்ள கிரகங்களும் நட்சத்திரங்களும் தான்.

வானவெளியிலுள்ள 'வெளிச்சங்கள் எல்லாம்' நான்காம் நாள் தான் படைக்கப்பட்டதாக ஆதியாகமத்திலுள்ள 14ம் வசனம் கூறுகிறது.

இரவிலிருந்து பகலைப் பிரிப்பது, பூமிக்கு வெளிச்சம் கொடுப்பது என்பதெல்லாம் இந்த 14ம் வசனத்தில்தான் கூறப்படுகிறது.

எனவே முதல் நாளே வெளிச்சத்தைப் பிரஸ்தாபிப்பது வேடிக்கையான விடயம் என அறிவுலகம் பைபிளைத் தூற்றுகிறது.

ஏனெனில் வெளிச்சத்திற்கு மூலமான கிரகங்கள் சூரியன் சந்திரன் மூன்று நாட்கள் கழித்தே படைக்கப்பட்டன என அவ்வேதமே(!) கூறுகிறது.

முதல் நாளே 'சாயங்காலமும், விடியல் காலமும்' பற்றிக் கூறப்பட்டிருப்பது முழு கற்பனையே என நவீன ஆய்வாளர் மாரிஸ் புகையில் கூறுகிறார்.

பூமியையும் படைத்து அத்துடனே ஏனையவற்றையும் சூரியனையும் படைத்து இரண்டையும் சில விதிகளில் இயங்க விட்டிருந்தால்தானே விடியங்காலததையும் சாயங்காலத்தையும் காணமுடியும்!

இதே போன்று 17ம் நூற்றாண்டில் உலகம் உருண்டை என்றதற்காக கலிலியோவைத் தூக்கிலிட்ட அதே வேளை கோர்டோவா பல்கலைக் கழகத்திலே உலகப்படத்தை உருண்டை வடிவில் ஆய்வு மூலம் சமைத்து உருட்டி உருட்டிப் பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார்கள் முஸ்லிம் அறிஞர்களும் விஞ்ஞானிகளும்.

கிறித்தவ திருச்சபைகள் மக்களுக்கு மத்தியிலே மூடத்தனத்தையும், அறியாமையையும் பரப்பின.விஞ்ஞானிகளுக்கு எதிராக சித்திரவதை முகாம்களை வைத்து கொடுமைப்படுத்தின. விஞ்ஞானிகளின் ஒவ்வொரு அறிவார்ந்த ஆய்வு முயற்சிகளுக்கும் அவை எதிராக நின்றன.

ஏசு கிறிஸ்து பிறந்த பூமி சூரியனைச் சுற்றுவதா? சூரியன் தான் பூமியைச் சுற்ற வேண்டும். ஆகவே பூமி தட்டையானது என்று கூறி, யாராவது ஏசு நாதர் பிறந்து பூமி சுற்றுகிறது என்று சொன்னால் நாக்கைத் துண்டிப்போம் என்று மிரட்டியது, கிருஸ்தவத் திருச்சபை.

இந்த அறியாமையை, மூடத்தனத்தை, அறிவியலைத் தண்டித்த மதத்தை நவீன ஆய்வாளன் என்ன செய்வான்? திட்டவே செய்வான்.

கிறிஸ்தவ திருச்சபையும், பாதிரிமார்களும் விஞ்ஞானத்திற்கும் அறிவியலுக்கும் எதிராக மேற்கொண்ட வன்கொடுமைகளைப் பார்த்த அதிக ஆய்வாளர்கள் நாஸ்திகர்களாக மாறிவிட்டார்கள்.

திருக்குறள்

திருக்குறளை உலகப் பொதுமறையாக்க வேண்டும். அதனால் தான் உலக மாந்தர்க்கு சுபட்ச வாழ்விற்கும், மத நல்லிணக்கத்திற்கும் வழிகாட்ட முடியும் என்ற கோசங்கள் உரத்து எழுப்பப்பட்டு வருகிறது. திருக்குறள் மனிதக் கற்பனைதான் என்பதற்கு ஒரு அறிவியல் முரண்பாட்டைத் தருகின்றேன்!

மனிதன்  விண்கலம் மூலம் விண்வெளிக்குச் சென்றுவந்துவிட்டான்.

ஆனால், பல மதத்தவர்களும் சிந்தனைபூர்வமான பகுத்தறிவு வாதிகளும் திருக்குறளை ஒரு நல்ல போதனையாகக் கருதும் போது அது விண்வெளிக்குச் செல்ல முடியாது என்கிறதே...?

காதலன் காதலி அரிதாகச் சந்திப்பதை விளக்கப் புகுந்த வள்ளுவன் பின்வருமாறு கூறுகிறார் :

'கண்டது மன்னும் ஒரு நாள் அலர்
மன்னும் திங்களைப் பாம்பு கொண்டட்டு'.

எவ்வளவு பிரமாண்டமான சந்திரனை பாம்பு விழுங்கும் என்பது எவ்வளவு முரணானது. அறிவு ஏற்காதது.

வள்ளுவன் சந்திரனை கடையில் விற்கப்படும் சிறு ரொட்டித் துண்டு என எண்ணிவிட்டார் போல் எண்ணத் தோன்றுகிறது.

அதேபோல் இஸ்லாத்தை இந்துக்கள் தற்காலத்தில் அதிகமதிகம் விமர்சித்து வருகின்றனர். நான் இந்து மதத்தை அறிவியல் ரீதியில் மட்டுமல்ல ஆத்மீக ரீதியில் இன்னும் பல கோணங்களில் விமர்சிக்கப் புகுந்தால் இந்த ஆய்வு போன்று இன்னும் பல விமர்சன நூல்கள் எழுதிவிடலாம். ஆதலால் தொட்டு விளக்கிச் செல்கின்றேன், ஏனெனில் கிறிஸ்தவர்களாலும் பகுத்தறிவுவாதிகளாலும் இஸ்லாத்தின் மீது சுமத்துகின்ற அறிவியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளே உறுதியான மறுப்புகளை தரவேண்டியுள்ளதால் இவைகள் சுருக்கப்படுகின்றன.

'பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா' என்ற வாசகத்தை நோக்கும் போது, இந்து மதவாதிகளின் நம்பிக்கைப்படி சிவபெருமான் என்கின்ற அவர்களுடைய கடவுளின் தலையில்தான் சந்திரன் இருப்பதாகக்கூறப்படுகிறது.

சுந்திர கிரகணம் ஏற்படுவது பரமசிவனின் கழுத்தில் இருக்கின்ற பாம்புக்கு கோபம் வருவதால் அவரின் தலையில் இருக்கின்ற சந்திரன் பாம்பினால் விழுங்கப்படுகிறது என்ற காரணம் கற்பிக்கப்படுகிறது.

ஒரு மனிதனால் சமைக்கப்பட்ட சிலையான சிவபெருமானின் தலையில் இவ்வளவு பிரமாண்டமான சந்திரன் இருக்க முடியுமா? அதனை பாம்புதான் விழுங்க இயலுமா?

0 comments:

Post a Comment